தேரா இஸ்மாயில் கான் மாவட்டம்

தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் (Dera Ismail Khan District) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் தேரா இஸ்மாயில் கான் நகரம் ஆகும்.

தேரா இஸ்மாயில் கான் மாவட்டம்
மாவட்டம்
பாகிஸ்தானில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் அமைவிடம்
பாகிஸ்தானில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் அமைவிடம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்கைபர் பக்துங்க்வா மாகாணம்]]
மொழிகள்பஷ்தூ மொழி, பலூச்சி மொழி, சராய்கி மொழி
தலைமையிடம்தேரா இஸ்மாயில் கான்
பரப்பளவு
 • மொத்தம்7,326 km2 (2,829 sq mi)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்1,939,000
 • அடர்த்தி116/km2 (300/sq mi)
நேர வலயம்பாக்கிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)

மக்கள் தொகையியல்தொகு

7326 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகை 8,52,995 ஆகும். மக்கள் தொகை வளர்ச்சி (1981 - 98) 3.26% ஆகவுள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 4,48,990 (52.63%); பெண்கள் 4,04,005 (47.36 %) ஆக உள்ளனர். பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 111 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தியானது ஒரு சதுர கிலோ மீட்டரில் 116.4 மக்கள் வாழ்கின்றனர். கிராமப்புற மக்கள் தொகை 7,27,188 (85.25%) ஆக உள்ளது. எழுத்தறிவு 31.3% ஆக உள்ளது.இம்மாவட்டத்தில் பஷ்தூ மொழி, சராய்கி மொழி மற்றும் உருது மொழிகள் பேசப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம்தொகு

7326 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக தேரா இஸ்மாயில் கான், குலாச்சி, தாராபின், பரோவா, பாகர்பூர் என ஐந்து தாலுக்காக்களாகவும், 47 கிராம ஒன்றியக் குழுக்களாகவும், 384 வருவாய் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் ஒரு நகராட்சி மன்றமும், இரண்டு நகரக் குழுக்களையும், ஒரு இராணுவப் பாசறை ஊரும் கொண்டது. [1]

அரசியல்தொகு

இம்மாவட்டம் பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்றத்திற்கு இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது.[2]மேலும் கைபர் பக்துங்க்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு ஐந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.

மேற்கோள்கள்தொகு


ஆள்கூறுகள்: 32°00′N 70°30′E / 32.000°N 70.500°E / 32.000; 70.500