காபுஷ்டின்ஸ்கி சமன்பாடு

கப்பூசுத்தீன்சுக்கி சமன்பாடு (Kapustinskii equation) ஒரு அயனிப் படிகத்திற்கான படிகக்கூடு ஆற்றல் UL ஐக் கணக்கிடுகிறது, இது பரிசோதனை மூலம் கணக்கிடுவது கடினமாகும். 1956 இல் இச்சமன்பாட்டை வெளியிட்ட அனத்தோலி பெதரோவிச் கப்புசுத்தீன்சுக்கி என்பவரின் நினைவாக இது பெயரிடப்பட்டது.[1]

இங்கு K = 1.20200×10−4 J·m·mol−1
d = 3.45×10−11 மீ
ν செயலறி வாய்பாட்டில் உள்ள அயன்களின் எண்ணிக்கை,
z+ and z என்பவை முறையே நேர், எதிர் அயனிகளில் உள்ள அடிப்படை மின்னூட்டம்,
r+ and r நேர், எதிர் அயனிகளின் ஆரைகள், மீட்டரில்.

கணக்கிடப்பட்ட படிகக்கூடு ஆற்றல், போர்ன்-லான்டே சமன்பாட்டிற்கு ஒரு நல்ல மதிப்பீட்டை அளிக்கிறது; உண்மையான மதிப்பு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 5% க்கும் குறைவாக வேறுபடுகிறது.

மேலும், படிகக்கூடு ஆற்றல் அறியப்படும்போது கப்புசுத்தீன்சுக்கி சமன்பாட்டைப் பயன்படுத்தி அயனியின் ஆரத்தை (அல்லது இன்னும் சரியாக, வெப்பவேதி ஆரத்தை) தீர்மானிக்க முடியும். சல்பேட்டு (SO2−
4
) அல்லது பாசுபேட்டு (PO3−
4
) போன்ற சிக்கலான அயனிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Kapustinskii, A. F. (1956). "Lattice energy of ionic crystals". Quarterly Reviews, Chemical Society (வேதியியலுக்கான வேந்திய சங்கம்) 10 (3): 283–294. doi:10.1039/QR9561000283.