காபூர் ஆறு (புறாத்து ஆறு)

ஒரு ஆறு

காபூர் ஆறு (Khabur River) (அரபு மொழி: الخابور al-khābūr, குர்தியம்: Xabûr, ḥābur/khābur, துருக்கியம்: Habur, பண்டைக் கிரேக்கம்Χαβώρας[1] அல்லது Ἀβόρρας[2] அல்லது Ἀβούρας[3] - Chaboras, Aborrhas, அல்லது Abura, இலத்தீன்: Chabura[4]) என்பது சிரியாவில் உள்ள வற்றாத நதியான புறாத்து ஆற்றின் முக்கியத் துணை ஆறாகும். காபூர் ஆறானது துருக்கியில் உற்பத்தியானாலும், சுண்ணாம்புக் கரடு, ரா'வின் அல்-'அய்னைச் சுற்றி பொங்கி வருபவையே ஆற்றின் முக்கிய நீர் மூலம் ஆகும். பல முக்கிய ஆற்றுப் படுகைகள் அல் ஆசாகாவிற்கு வடக்கே காபூருடன் இணைகின்றன. இவை இணைந்து காபூர் முக்கோணம் என அழைக்கப்படும் பகுதியை உயர் காபூர் பகுதியில் உருவாக்குகின்றன. வடக்கிலிருந்து தெற்காக காபூர் வடிநிலத்தின் வருடாந்திர மழைப்பொழிவு 400 மிமீ இலிருந்து 200 மிமீ ஆக குறைவதால் இந்த ஆறானது வரலாறு முழுவதும் விவசாயத்திற்கான முதன்மை மூலமாக மாறியிருக்கிறது. காபூர் புசாய்ரா என்ற நகருக்கு அருகில் புறாத்து ஆறுடன் இணைகிறது.

புவியியல்தொகு

இந்த ஆற்றின் போக்கானது இரண்டு வேறுபட்ட மண்டலங்களாக பிரிக்கப்படலாம்: அவை, மேல் காபூர் பகுதி அல்லது அல்-ஆசாகாவின் வடக்கில் உள்ள காபூர் முக்கோணம், அல்-ஆசாகா மற்றும் புசாய்ரா ஆகியவற்றிற்கு இடைப்பட்ட இடை மற்றும தாழ் காபூர் என்பன ஆகும்.

துணை நதிகள்தொகு

காபூர் ஆற்றின் துணை நதிகள் கிழக்கில் இருந்து மேற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான ஆற்றுப்படுகைகள் ஆண்டின் பகுதியளவிற்குத் தான் நீரைக் கொணர்கின்றன..

  • வாடி ராட்
  • வாடி கென்சிர்
  • வாடி ஜாரா
  • ஜக்ஜா ஆறு
  • வாடி கான்சிர்
  • வாடி ஆவெத்ஜி

வரலாறுதொகு

இந்த ஆறானது பல பழங்காலத்து ஆசிரியர்களால் வெவ்வேறு எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான, வெவ்வேறு எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்ட வேறு வேறு பெயர்கள் பின்வருமாறு: தொலெமிமற்றும் மூத்த பிளினி ஆகியோர் சாபோராஸ் (பண்டைக் கிரேக்கம்Χαβώρας),[1] என அழைத்தனர். புரோகோபியஸ் இதை சாபுரா என அழைத்தார்,[4] இசுட்ராபோ, சோசிமஸ், மற்றும் அம்மியானஸ் மார்செலினஸ் இந்த ஆற்றை அபோராஸ் (Ἀβόρρας) என அழைத்தனர்,[2] மற்றும் சாராக்சின் ஐசிடோர் இந்த ஆற்றினை அபுராஸ்(Ἀβούρας) என அழைத்தனர்.[3] இந்த ஆறு தராசு மலைத்தொடரில் உருவான மெசபடோமியாவின் பெரிய ஆறு என அழைக்கப்படுகிறது. புரோகோபியஸ் இதை முக்கியத்துவம் வாய்ந்த ஆறு என அழைக்கிறார்.

இந்த ஆறானது பல சிறிய சிற்றோடைகளிலிருந்து நீரைப் பெறுகிறது. அவற்றின் பெயர்கள் பழங்கால எழுத்தாளர்களால் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. இவை இஸ்க்ரிடஸ்,(Procop. de Aedif. 2.7), தி கோர்டஸ்(Procop. de Aedif. 2.2), மற்றும் மைக்டோனியஸ், ஜூலியன் அப்போஸ்டேட் போன்றவை ஆகும்.

காபூர் ஆறானது சில நேரங்களில் சேபார் அல்லது கேபார் எனவும் அடையாளப்படுத்தப்படுகிறது. டெல் அபிபின் அமைவிடம் மற்றும் எசேக்கியேல் நூலின் பல முக்கிய காட்சிகளின் அமைப்பும் இந்த ஆற்றுடன் இணைத்து அடையாளப்படுத்தப்படுகிறது.

நவீன காபூர் ஆற்றுப் பள்ளத்தாக்குதொகு

காபூர் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் 1960 களில் தொடங்கியது.இத்திட்டம் பல அணைக்கட்டுகள்ளை மற்றும் கால்வாய்களைத் தொடராகக் கட்டுவதை உள்ளடக்கியதாகும். காபூர் வடிவிலும் பகுதியின் மிகப்பெரிய பாசனத்திட்டத்தின் பகுதியாக மூன்று அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் பகுதியாக புறாத்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தாப்கா அணைக்கட்டும் உள்ளடங்கும். டெல் டேமர் உபமாவட்டத்தின் பகுதியாக இருக்கும் காபூர் ஆறானது தன்னாட்சி அதிகாரம் பெற்ற அசீரிய அயலகச் சிற்றூருக்கு தாய் பிரதேசமாக இருக்கிறது. ராவின் அல்-அய்ன் மற்றும் அல்-ஹசாகா இடையே காபூரின் துணை நதிகளில் ஹசாகா மேற்கு மற்றும் ஹசாகா கிழக்கு ஆகிய இரண்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 தொலெமி, The Geography, 5.18.3; மூத்த பிளினி, Natural History, 30.3.
  2. 2.0 2.1 இசுட்ராபோ, xvi; Zosimus, Historia Nova, 3.13; Ammianus Marcellinus, Rerum Gestarum, 14.3, 23.5.
  3. 3.0 3.1 Isidore of Charax
  4. 4.0 4.1 Procopius, B.P., 2.5.