காமா-அமானிட்டின்
வளைய பெப்டைடு
காமா-அமானிட்டின் (gamma-Amanitin) என்பது C39H54N10O13S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வளைய பெப்டைடு ஆகும். γ-அமானிட்டின் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். எட்டு அமினோ அமிலங்கள் சேர்ந்து இச்சேர்மத்தை உருவாக்குகின்றன. அமாடாக்சின் வகை நச்சுகளில் இதுவும் ஒரு வகையாகும். இவையாவும் அமானிட்டா என்ற காளான் போன்ற பல தாவர இனங்களில் காணப்படுகின்றன. மரணத் தொப்பி என்று அழைக்கப்படும் அமானிடா பேலோயிடசு காளான் வகையும், அழிக்கும் தேவதை என்று அழைக்கப்படும் அமானிடா விரோசா மற்றும் அமானிடாபிசுபோரிகெராவும் குறிப்பிடத்தக்கவை ஆகும். பிற அமாடாக்சின்கள் போல காமா-அமானிட்டினும் ஆர்.என்.ஏ. பாலிமரேசு II நொதியை தடுக்கிறது. இதனால் கடத்தி ஆர்.என்.ஏ. வின் தொகுப்பு தடுக்கப்படுகிறது. சிறுநீரக செல்களும் கல்லீரல் செல்களும் குழியப்பகுப்புக்கு உட்படுகின்றன[1].
இனங்காட்டிகள் | |
---|---|
21150-23-2 | |
ChemSpider | 26234940 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 26116 |
| |
பண்புகள் | |
C39H54N10O13S | |
வாய்ப்பாட்டு எடை | 902.97 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |