காமா-ஐதராக்சிபியூட்டரால்டிகைடு
காமா-ஐதராக்சிபியூட்டரால்டிகைடு (γ-Hydroxybutyraldehyde) என்பது C4H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் இடைநிலைக் கரிமச் சேர்மமாகும். γ-ஐதராக்சிபியூட்டனால் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. 1,4-பியூட்டேன்டையால் சேர்மத்திலிருந்து உயிரியல்தொகுப்பு வினையின் மூலம் நரம்புக்கடத்தியான காமா-ஐதராக்சிபியூட்டைரிக் அமிலம் தயாரிக்கும் போது காமா-ஐதராக்சிபியூட்டரால்டிகைடு இடைநிலை வேதிப்பொருளாகத் தோன்றுகிறது [1]. 1,4-பியூட்டேன்டையாலைப் போலவே வெளிப்புறத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்போது இச்சேர்மமும் காமா-ஐதராக்சிபியூட்டைரிக் அமிலத்திற்கு முன்மருந்தாகச் செயல்படுகிறது. இருப்பினும், அனைத்து அலிபாட்டிக் ஆல்டிகைடுகள் போலவே எரிகாரமாகவும், கடுந்துர்நாற்ற நெடியுடையதாகவும் காமா-ஐதராக்சிபியூட்டரால்டிகைடு காணப்படுகிறது. எனவே, விரும்பத்தகாத இச்சேர்மத்தை உட்கொள்ள நேர்ந்தால் கடுமையான குமட்டலும் வாந்தியெடுப்பும் நிகழ்கின்றன.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4-ஐதராக்சிபியூட்டனால்
| |
இனங்காட்டிகள் | |
25714-71-0 | |
ChemSpider | 84042 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 93093 |
| |
பண்புகள் | |
C4H8O2 | |
வாய்ப்பாட்டு எடை | 88.11 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வளர்சிதைமாற்ற வழிமுறை
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Thomas L. Lemke; David A. Williams (24 January 2012). Foye's Principles of Medicinal Chemistry. Lippincott Williams & Wilkins. pp. 413–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60913-345-0.