கோபால்ட் சிகிச்சை

(காமா கதிர் உமிழ் கோபால்ட் கருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோபால்ட் சிகிச்சை (Cobalt therapy) என்பது கதிரியக்க அணுக்கரு கோபால்ட்-60-இல் இருந்து உமிழப்படும் காம்மா கதிர்களைக் புற்றுநோய் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் ஒரு மருத்துவப் பயன்பாடு ஆகும். 1950களில் இருந்து கோபால்ட்-60 தொலைக்கதிர் மருத்துவக் கருவிகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் உமிழப்படும் காம்மா கதிர்களின் கற்றை கட்டித் திசுக்களைக் கொல்ல நோயாளியின் உடலில் செலுத்தப்படுகிறது. இந்த காம்மா கதிர் உமிழ் கோபால்ட் கருவிகள் விலை உயர்ந்தவை ஆதலாலும், நிபுணர்களின் கவனம் தேவை என்பதாலும், அவை பெரும்பாலும் "கோபால்ட் தொகுதிகளில்" வைக்கப்படுகின்றன. கோபால்ட் சிகிச்சை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் கதிரியக்க சிகிச்சையில் ஒரு புரட்சிகரமான வளர்ச்சியாக இது அமைந்தது.[1][2] ஆனால் இப்போது இக்கருவிகள் கிளினாக், லினாக் போன்ற அதிநவீன நேரியல் துகள்முடுக்கி தொழில்நுட்பங்களால் மாற்றப்பட்டு வருகின்றன. இதுபோன்ற கருவிகள் ஒரு மருத்துவமனையில் நிறுவி, அதனை மருத்துவத்திற்காக பயன்பாட்டிற்குக் கொண்டுவருமுன் சில ஏற்புச் சோதனைகளும் தர உறுதிப்பாட்டுச் சோதனைகளும் மேற்கொள்ள வேண்டுவது மிவும் முக்கியமாகும். இிப்படிப்பட்ட கருவிகள் மிகவும் கவனமாக வடிவமைத்துத் தயாரிக்கப்படுகின்றன.

கோபால்ட் சிகிச்சை
Cobalt therapy
வேறு பெயர்கள்கோபால்ட்-60 சிகிச்சை
சிறப்புபுற்றுநோயியல்

ஏற்புச் சோதனைகள் மற்றும் தரஉறுதிப்பாட்டுச் சோதனைகள்

தொகு

இச்சோதனைகளில் சில எந்திரம் தொடர்புடையன.சில சோதனைகள் வெளிப்படும் கதிர்புலம் பற்றியவை. மற்றும் சில நோயாளிகளையும் பணியாளர்களையும் பொது மக்களையும் அயனியாக்கும் கதிர்களிலிருந்து பாதுகாப்பதற்கான சோதனைகளாகும்.இவைகளை கீழே காணலாம். சில சோதனைகள் மிகவும் எளிமையானவை. சில சோதனைகள் மிகவும் நுட்பமானவை.

கருவி தொடர்பான சோதனைகள்

தொகு
  • கதிர் மூலம்-புறப்பரப்பு (SSD) தொலைவு.
  • மேசையின் இயக்கம்
  • மேசையின் நிறை தாங்கும் திறன்.
  • காப்பு வளையம் (Gaurd ring) சீராக இருத்தல்.
  • சுழற்சியின் கால அளவினை சரிபார்த்தல்
  • ஒரே மைய அமைப்பு (Iso center) சரிபார்த்தல்.
  • தொடர் பூட்டு (Inter lock) சரிபார்த்தல்.

கதிர்புலம் தொடர்பான சோதனைகள்

தொகு
  • ஒளிப்புலமும் காமாக் கதிர்புலமும் ஒன்றி இருத்தல்
  • புலத்தேர்வியை சுழற்றும் போது புலம் ஒன்றி இருத்தல்.
  • விழுக்காட்டில் ஏற்பளவு சரிபார்த்தல்.
  • புலத்தின் குறுக்காக புல அளவுகள் சீராக இருத்தல்.

கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு

தொகு

தீமை பயக்கும் காமாக் கதிர்களிலிருந்து கதிர்மருத்துவத் துறையில் பணிபுரியும் மருத்துவர், தொழில்நுட்ப வல்லுனர், செவிலியர், மற்றுமுள்ள பணியாளர்களை பாதுகாக்க வேண்டுவது அவசியமாகும். கருவி இருக்கும் அறையிலும் அதற்கு வெளியிலும் பல இடங்களிலும் கதிர்வீச்சின் மட்டங்களை அளந்து குறித்துக் கொள்ளவேண்டும்.

கட்டுப்பாட்டுக் கருவி இருக்கும் இடத்தில் வரையறுத்த அளவினைவிட அதிக கதிர்வீச்சு இருக்கக் கூடாது. கருவி இருக்கும் அறை மிகவும் அதிக, ஒரு மீட்டரை விட அதிக கனமுடைய கான்கிரீட் சுவரைக் கொண்டது. இந்தச் சுவரை அடுத்து நோயாளிகளின் படுக்கைஅறை இருக்கலாம். அந்த இடங்களிலும் கதிர்அளவு கணிக்கப் படவேண்டும். வரம்பிற்குள் அவை இருக்கவேண்டும். மருத்துவத்திற்கான அறையின் மேல் பகுதி பொதுவாக ஆள் நடமாட்டம் இல்லாத வகையிலேயே கட்டப்படும். அங்கும் கருவி இயங்கும் போது அளவுகள் குறிக்கப்படவேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Celebrating the 60th anniversary of the world's first cancer treatment with Cobalt-60 radiation". Lhsc.on.ca. 2011-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  2. "Archived copy". Archived from the original on 2015-10-24. பார்க்கப்பட்ட நாள் 2015-06-16.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  • Fundamentals of radiology- Massey and Meridith.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்_சிகிச்சை&oldid=2849390" இலிருந்து மீள்விக்கப்பட்டது