காமி ரிட்டா
கமி ரீட்டா செர்பா (Kami Rita) (பிறப்பு: 17 சனவரி 1970), நேபாளம் நாட்டின் சோலுகும்பு மாவட்டம், தாமி எனும் ஊரில் பிறந்த செர்பா இனக்குழுவைச் சேர்ந்த எவரஸ்ட் மலையேற்ற வீரர்களின் வழிகாட்டி ஆவார்.[1] 7 மே 2022 அன்று இவர் 26 முறை எவரஸ்டு மலையேறி சாதனை படைத்த முதல் செர்ப்பா ஆவார்.[2][3][4][5][6] இவர் 1994 முதல் எவரஸ்ட் மலையேற்ற வீரர்களின் வழிகாட்டியாக செயல்படுகிறார். 1950களில் இவரது தந்தை 17 முறை வெளிநாட்டு எவரஸ்டு மலையேற்ற வீரர்களின் வழிகாட்டியாக செயல்பட்டுள்ளார். இவரது உடன்பிறப்பான லக்பா செர்பா 17 முறை மலையேற்ற வீரர்களுடன் எவரஸ்டு மலையேறியுள்ளார்.[7][8]
இவர் 23 மே 2023 அன்று தனது 53 வயதில் 28வது முறையாக எவரெஸ்டு சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார்.[9]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Angela Benavides (21 May 2019). "Everest Summit". explorersweb.com. பார்க்கப்பட்ட நாள் 18 December 2022.)
- ↑ "First Successful Summit of Mt Everest(8848m) 2022 season Nepal Side". Mt Everest Today. Archived from the original on 2023-04-01. பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.
- ↑ "Sherpa guide scales Mount Everest for record 25th time". Anchorage Daily News.
- ↑ "Nepal Mountaineer, 49, Conquers Mount Everest For Record 23rd Time". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-15.
- ↑ "Kami Rita Sherpa". thehimalayantimes.com. பார்க்கப்பட்ட நாள் 2017-05-27.
- ↑ PTI. "Nepalese Sherpa scales Everest for record 21 times" (in en). The Hindu. http://www.thehindu.com/news/international/nepalese-sherpa-scales-everest-for-record-21-times/article18589634.ece.
- ↑ "Sherpa guide Kami Rita climbs Everest for record 22nd time". Associated Press. 16 May 2018 – via www.theguardian.com.
- ↑ "Kami Rita Sherpa scales Mt.Everest 23rd times".
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 53 வயதிலும் அசராத பயணம்... எவரெஸ்ட் சிகரத்தில் 28வது முறை ஏறி நேபாள வீரர் புதிய சாதனை