காம்பர்ட்சேவ் மலைத் தொடர்

காம்பர்ட்சேவ் மலைத்தொடர் (Gamburtsev Mountain Range) அல்லது காம்பர்ட்சேவ் பனியாற்றடி மலைகள் (Gamburtsev Subglacial Mountains) கிழக்கு அன்டார்ட்டிகாவில் டோம் ஏ அருகே அமைந்துள்ள ஓர் பனியாற்றடி மலைத்தொடர் ஆகும்.[1] இந்த மலைத்தொடர் 1958ஆம் ஆண்டில் மூன்றாவது சோவியத் தேடுதல் பயணத்தின்போது கண்டறியப்பட்டது; சோவியத் புவியியலாளர் கிரிகொரி ஏ. காம்பர்ட்சேவ் நினைவாக இதற்கு பெயரிடப்பட்டது.[2][3] இந்த மலைத்தொடர் 600 மீட்டர்கள் (2,000 அடி) பனி மற்றும் பனிப்பொழிவால் மூடப்பட்டிருந்தாலும் ஏறத்தாழ 1,200 கிலோமீட்டர்கள் (750 mi) நீளத்திற்கு பரந்துள்ளது எனவும் சுமார் 2,700 மீட்டர்கள் (8,900 அடி) உயரமுடையதாகவும் கருதப்படுகிறது.[4] தற்போதைய மதிப்பீடுகளின்படி இந்த மலைத்தொடர் ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைக்கு இணையாக நம்பப்படுகிறது.[5] இதன் காலம் 34 மில்லியன் ஆண்டுகளுக்கும் முந்தையதாக மதிப்பிடப்பட்டாலும் இந்த மலைகள் எவ்வாறு உருவாயின என்பதைக் குறித்து அறிய இயலவில்லை.[6] சில மதிப்பீடுகள் இவை 500 மில்லியன் ஆண்டுகள் பழமையானவையாக கருதுகின்றன.[4] தற்போதைய மாதிரி வடிவமைப்புகள் காம்பர்ட்சேவ் மலைகளிலிருந்து சரிந்து வந்த பனியாறுகளே கிழக்கு அன்டார்ட்டிகாவின் பனித்தட்டு உருவாகக் காரணமாக அமைந்ததாக காட்டுகின்றன.[1]

காம்பர்ட்சேவ் மலைத்தொடர்
மலைத்தொடர்
கண்டம் அன்டார்ட்டிகா
பகுதி கிழக்கு அன்டார்ட்டிகா
மிகவுயர் புள்ளி
 - உயர்வு 3,400 மீ (11,155 அடி)
 - ஆள்கூறுகள் 80°30′00″S 76°00′00″E / 80.50000°S 76.00000°E / -80.50000; 76.00000
நீளம் 1,200 கிமீ (746 மைல்)

அன்டார்ட்டிகா காம்பர்ட்சேவ் மாகாண (AGAP) திட்டம்

தொகு

2007–09 ஆண்டில் பன்னாட்டு துருவ ஆண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக இந்த மலைத்தொடரினைக் குறித்த தகவல்களை அறிவதற்காக பன்னாட்டு முயற்சிகளின் விளைவாக அன்டார்ட்டிகா காம்பர்ட்சேவ் மாகாணம் உருவாக்கப்பட்டது.[7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Jonathan Amos (2006-12-13). "Survey targets 'ghost' mountains". பிபிசி. http://news.bbc.co.uk/2/hi/science/nature/6145642.stm. பார்த்த நாள்: 2006-12-15. 
  2. Australian Antarctic Data Centre (2000-01-01). "Gamburtsev Subglacial Mountains". Australian Government, Antarctic Division. Archived from the original on 2007-09-20. பார்க்கப்பட்ட நாள் 2006-12-15.
  3. "20 лет открытию Полюса недоступности Антарктиды: Метеорология и Гидрология. 1979, №3. Гидрометеоиздат" (in Russian). Arctic and Antarctic Research Institute. Archived from the original on 2007-03-10. பார்க்கப்பட்ட நாள் 2007-01-26.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. 4.0 4.1 Robin E Bell (2008-11-12). "Dispatches from the Bottom of the Earth: An Antarctic Expedition in Search of Large Mountains Encased in Ice". Scientific American. பார்க்கப்பட்ட நாள் 2008-11-12.
  5. "'Ghost peaks' emerge from the ice". பிபிசி. 2009-02-25. பார்க்கப்பட்ட நாள் 2009-02-25.
  6. The Gamburtsev mountains and the origin and early evolution of the Antarctic Ice Sheet, Sun Bo, Martin J. Siegert, Simon M. Mudd, David Sugden, Shuji Fujita, Cui Xiangbin, Jiang Yunyun, Tang Xueyuan & Li Yuansheng; Nature magazine 459, 690-693 (2009-06-04), accessed 2009-06-09
  7. Bryan C. Storey (2006-03-23). "The Gamburtsev Mountains: Integrated International Exploration of the Earths Most Enigmatic Mountain Range". International Polar Year.
  8. Jonathan Amos (2008-10-14). "Expedition set for 'ghost peaks'". BBC News.

வெளியிணைப்புகள்

தொகு
அன்டார்ட்டிகா காம்பர்ட்சேவ் மாகாணத் திட்டப்பணிகள் குறித்த தகவல்களுக்கு