காம்போசதேசம்
காம்போசதேசம் இந்தியாவின் வடக்கிலும், காசுமீரதேசத்திற்கு வடகிழக்கிலும், இமயமலையின் மேல்பாகத்திலும், அகன்று விசாலமாக பரவி இருந்த தேசம்.[1]
இருப்பிடம்
தொகுஇந்த தேசத்தில் பூமி முழுவதும் எப்பொழுதும் இடைவிடாத பனி, மழை, குளிர் இவைகள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்திற்கு தெற்கு பாகத்திலே அதிகமான குகைகள் உண்டு,[2]
மலை, காடு, விலங்குகள்
தொகுஇந்த தேசத்திற்கு நடுவிலும், மேற்கிலும், தெற்குபாக முழுமையிலும் மலையின் தொடர் குன்றுகளும், அடர்ந்த காடுகளாலும், பெரியமலைகளினாலும், சூழப்பட்டுள்ளதால், இத்தேசத்தின் பரப்பில் அங்கோலம் மரங்கள் அதிகமாக இருக்கும். இத்தேசத்தின் காடுகளில் கர்கம் என்னும் வெள்ளைக்குதிரைகளும்,கொடிய காட்டு விலங்குகளும் அதிகம் உண்டு.
நதிகள்
தொகுஇந்த காம்போசதேசத்தின் கிழக்கிலும், பாஞ்சாலதேசத்தின் வடகிழக்கு மூலையில் கங்கோற்பத்தியில்கங்கையின் சிறு, சிறு அருவிகள் சைப்யா, சதாநீரா என்ற இரண்டு நதிகளாகி கிழக்குமுகமாய் ஓடி இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது.
கருவி நூல்
தொகு- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009