காயத்ரி கோபிசந்த்
இந்திய இறகுப்பந்தாட்ட வீரராங்கனை
புல்லேலா காயத்ரி கோபிசந்த் (Pullela Gayatri Gopichand) (பிறப்பு: மார்ச் 4,2003) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனையாவார். இவர் முன்னாள் இறகுப்பந்தாட்ட வீரர்களான ப. வெ. வ. லட்சுமி மற்றும் புல்லேலா கோபிசந்த் ஆகியோரின் மகளாவார்.[1][2][3] 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் அணி தங்கப் பதக்கத்தையும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற தேசிய அணியின் ஒரு பகுதியாக இவர் இருந்தார்.[4] இவர் 2022 பொதுநலவாய விளையாட்டுக்களில் போட்டியிட்டு, கலப்பு அணியில் வெள்ளிப் பதக்கத்தையும், பெண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.[5] தனது தந்தையின் சாதனைக்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து இங்கிலாந்துப் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் பெண் இரட்டையர் நிபுணர் என்ற பெருமையை கோபிசந்த் பெற்றார்.
காயத்ரி கோபிசந்த் Gayatri Gopichand | |
---|---|
நேர்முக விவரம் | |
நாடு | இந்தியா |
பிறப்பு | 4 மார்ச்சு 2003 |
உயரம் | 1.62 மீ |
எடை | 56 கி |
கரம் | வலது-கை |
பயிற்சியாளர் | புல்லேலா கோபிசந்த் அருண் விஷ்ணு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pullela Gopichand's daughter Gayatri included in badminton squad for Asian Games". New Indian Express. 28 June 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2018.
- ↑ Rozario, Rayan (1 February 2018). "Gayatri Gopichand showing signs of a champion". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 27 July 2018.
- ↑ "Badminton in her blood". Deccan Chronicle. 29 June 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2018.
- ↑ "SAG 2019: Siril, Ashmita lead India to 6 badminton golds". Outlook India. 6 December 2019. Archived from the original on 10 December 2019. பார்க்கப்பட்ட நாள் 10 December 2019.
- ↑ Nalwala, Ali Asgar (8 August 2022). "Commonwealth Games 2022 badminton: Kidambi Srikanth, Gayatri-Treesa duo win bronze medals". International Olympic Committee. பார்க்கப்பட்ட நாள் 31 October 2022.