ப. வெ. வ. லட்சுமி

இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை

ப. வெ. வ. லட்சுமி (P. V. V. Lakshmi) என்று நன்கு அறியப்பட்ட பந்திமுக்கலா வெங்கட வர லட்சுமி (Pandimukkala Venkata Vara Lakshmi) இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் இறகுப்பந்தாட்ட வீராங்கனை ஆவார். எட்டு முறை இந்திய தேசிய வாகையாளரான இவர் 1996இல் அட்லாண்டாவில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[3] இவர் புல்லேலா கோபிசந்தின் மனைவியும் ஆவார்.[4] 1998 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் அணிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ப. வெ. வ. லட்சுமி
நேர்முக விவரம்
நாடுஇந்தியா
பிறப்பு8 நவம்பர் 1974 (1974-11-08) (அகவை 49)
விசயவாடா, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்[1]
வசிக்கும் இடம்ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
உயரம்1.7 m (5 அடி 7 அங்) (5 அடி 7 அங்)[2]
கரம்வலது-கை ஆட்டக்காரர்
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
மகளிருக்கான இறகுப்பந்தாட்டம்
பொதுநலவாய விளையாட்டுகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1998 கோலாலம்பூர் மகளிர் அணி

கோபிசந்த் இறகுப்பந்தாட்ட பயிற்சிக் கழகம்

தொகு

இலட்சுமி, கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமி உருவாக்கப்பட்டபோது கோபிசந்துக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். மேலும் பண ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிக்கு பங்களித்தார்.[5][6]

2008 ஆம் ஆண்டில், இவர்கள் பாலிவுட் பிரபலங்களை இறகுப்பந்தாட்டத்தின் விளம்பரத் தூதுவர்களாக ஆகுமாறு வேண்டுகோள் விடுத்தனர். விளையாட்டை ஆதரிக்கும் திரை பிரபலங்களால் அதை பிரபலப்படுத்த உதவும் என்று இவர்கள் நம்பினர்.[7]

சொந்த வாழ்க்கை

தொகு

இலட்சுமி சக இறகுப்பந்தாட்ட வீரர் கோபிசந்தை 5 ஜூன் 2002 அன்று மணந்தார்.[8] இவர்களுக்கு காயத்ரி என்ற மகளும் விஷ்ணு என்ற மகனும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டு உடன்பிறப்புகளில் மூத்தவரான இவரது மகள் காயத்ரியும் ஒரு இறகுப்பந்தாட்ட வீராங்கனையாவார். இவரது மகன் விஷ்ணு தற்போது கோபிசந்த் அகாதமியில் பயிற்சி பெற்று வருகிறார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. Shridharan, J. r (4 January 2012). "Under her watchful eye". Thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 17 November 2021.
  2. "Pulella Gopichand". Sports Reference. Archived from the original on 18 April 2020. பார்க்கப்பட்ட நாள் 6 March 2016.
  3. Shridharan, J. r (2012-01-04). "Under her watchful eye" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/under-her-watchful-eye/article2773536.ece. 
  4. Tagore, Vijay (22 August 2016). "PV Sindhu has a coach I didn't have, Pullela Gopichand's wife says". Times of India. https://timesofindia.indiatimes.com/sports/rio-2016-olympics/india-in-olympics-2016/badminton/Sindhu-has-a-coach-I-didnt-have-my-husband/articleshow/53805442.cms. 
  5. A., Joseph Antony (8 April 2004). "Master of multi-tasking". The Hindu. 
  6. Anand, Geeta (6 October 2010). "Badminton Academy Trains Saina but Still Struggles". The Wall Street Journal. 
  7. "'Badminton needs Bollywood brand ambassadors'". இந்தியன் எக்சுபிரசு. 3 October 2008 இம் மூலத்தில் இருந்து 4 December 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081204091231/http://www.expressindia.com/latest-news/Badminton-needs-Bollywood-brand-ambassadors/369011/. 
  8. "rediff.com sports: Gopichand to wed PVV Lakshmi". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 17 November 2021.
  9. "Sindhu has a coach I didn't have - my husband". The Times of India. 22 August 2016. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Sindhu-has-a-coach-I-didnt-have-my-husband/articleshow/53805442.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._வெ._வ._லட்சுமி&oldid=4105927" இலிருந்து மீள்விக்கப்பட்டது