காய் ரோ (Chi Rho; /ˈk ˈr/) என்பது கிறிஸ்து பெயராக்கத்தின் முன்னைய வடிவங்களில் ஒன்றும், கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற வடிவமும் ஆகும். இது கிறிஸ்து = "ΧΡΙΣΤΟΣ" என்பதைக் குறிக்கும் கிரேக்க சொல்லின் முதல் இரு பெரிய எழுத்துக்களான "காய்", "ரோ" என்பவற்றின் வடிவமும் கூட்டிணைவெழுத்து முத்திரை முறையும் ஆகும். ஆயினும் இது ஒரு கிறிஸ்தவச் சிலுவை அல்ல, மாறாக காய்-ரோ இயேசுவின் மரணத்தை உணர்த்துவதுடன், கிறிஸ்து எனும் நிலையை குறியீடாகக் காட்டுகிறது.[1]

காய்-ரோ சின்னம்

பாகாலை வழிபட்ட கிரேக்கர்களினால் முக்கிய செய்தியை குறிப்பிட காய்-ரோ குறியீடு பயன்பட்டது. அங்கு காய்-ரோ என்பது chrēston என்பதன் சுருக்கமாகப் பயன்பட்டது. இதன் அர்த்தம் "நல்லது" என்பதாகும்.[2] மூன்றாம் பிடோம்லியின் (ஏ. 246–222 கி.மு.) சில நாணயங்களில் காய்-ரோ அடையாளம் காணப்பட்டது.[3]

உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைனால் படத்துறைக் கொடிகளிலும், கான்ஸ்டன்டைன் கொடியிலும் காய்-ரோ அடையாளம் பயன்படுத்தப்பட்டது. ஆரம்ப காய்-ரோ அடையாளங்கள் சிலுவை போன்றும் () IX கூட்டிணைவெழுத்து முத்திரையாகவும் () காணப்பட்டன.

இவற்றையும் காண்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chi Rho
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

உசாத்துணை தொகு

  1. Steffler 2002, ப. 66.
  2. Southern 2001, ப. 281; Grant 1998, ப. 142.
  3. von Reden 2007, ப. 69: "The chi-rho series of Euergetes' reign had been the most extensive series of bronze coins ever minted, comprising eight denominations from 1 chalkous to 4 obols."
"https://ta.wikipedia.org/w/index.php?title=காய்_ரோ&oldid=1813303" இலிருந்து மீள்விக்கப்பட்டது