காரபான்
காரபான் (Carabane அல்லது Karabane) என்பது செனகல் நாட்டின் தென்மேற்குப்பகுதியில் காசாமன்ஸ் ஆற்றின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு மற்றும் கிராமம் ஆகும்.
ஆரம்பகாலத்தில் இத்தீவுப்பகுதியில் வாழ்ந்தமக்களாக ஜோலா இனமக்கள் அறியப்படுகின்றனர். இன்றளவும் இத்தீவுப்பகுதியில் மக்கள்தொகை மிகுந்த இனமாக இச்ஜோலா இனமக்கள் இருக்கின்றனர். ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டிற்குச் செலுத்த வேண்டிய தொகை 196 பிராங்கை இக்கிராமதலைவர் காக்ளெட் திருப்பி செலுத்தாததால் 1836 ஆம்ஆண்டு ஜனவரி 22-ம் தேதி இத்தீவு பிரான்ஸ் நாட்டிற்கு அடிபணிந்தது. 1869-ல் காரபான் தீவு தன்னாட்சி பெற்றதாக விளங்கினாலும் 1886-ல் ஆண்டு செதியவ்வுடன் இணைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் இத்தீவின் மக்கள்தொகை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் வறட்சி, காசாமன்ஸ் போராட்டம் மற்றும் 2002-ல் ஜுலாவின் போக்குவரத்து குறைந்தது போன்றவையும் சில காரணங்களாகும். காரபானிலிருந்து மக்கள் வணிகம் செய்யவும் உல்லாசப் பயணிகள் வந்து செல்லவும் ஜுலா தலையாய போக்குவரத்தாகும். அரசியல் ரீதியாக செனகலிலிருந்து தனித்து இருந்த போதிலும் காரபான் இக்கிராமத்தின் தலைநகராக விளங்கியது. செனகல் அரசாங்கத்தின் நிர்வாக அமைப்புடன் எந்தவகையிலும் காரபான் பொருந்தவில்லை. இருந்தபோதிலும் இத்தீவில் ஒரு உல்லாசப் பயணங்கள் ஏற்பாடு செய்யும் தொழிற்சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இங்கு வசிப்பவர்கள் இதில் விருப்பமில்லாமல் பங்கேற்றனர்.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- "Population and sanitation" (in பிரெஞ்சு). Programme d'eau potable et d'assainissement du Milénaire. Archived from the original on ஜூலை 24, 2011. பார்க்கப்பட்ட நாள் June 7, 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - "Economic activities and project financing" (in பிரெஞ்சு). SEM. Archived from the original on பிப்ரவரி 24, 2011. பார்க்கப்பட்ட நாள் June 7, 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unfit URL (link) - "Application for inclusion on the World Heritage List" (in பிரெஞ்சு). UNESCO. பார்க்கப்பட்ட நாள் June 7, 2008.
- "Photos of Carabane and the surrounding saltwater streams" (in பிரெஞ்சு). Kassoumay. Archived from the original on மே 26, 2008. பார்க்கப்பட்ட நாள் June 7, 2008.