காரின் ஆலிவியர்

காரின் ஆலிவியர் (பிறப்பு 1968) பிலடெல்பியாவை பூர்விகமாக கொண்ட ஒரு கலைஞர் ஆவார். இவர் பொதுக்கலை, சிற்பங்கள், நிறுவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை உருவாக்குகிறார். ஒலிவியர் பழக்கமான பொருள்கள், இடங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் இருப்பிடங்களை தன கலையால் மாற்றி அமைக்கிறார். இவரது பணி வரலாற்றுக நினைவுகளை இன்றைய கதைகளுடன் இணைக்கின்றன.[1]

காரின் ஆலிவியர்
பிறப்பு1968
போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட் மற்றும் டொபாகோ
கல்விடார்ட்மத் கல்லூரி
கிராண்ப்ரூக் கலை கல்லூரி
அறியப்படுவதுபொது கலை, நிறுவல், சிற்பம், சமூக நடைமுறை, புகைப்படம் எடுத்தல்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

ஆலிவியர் 1968 இல் போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட் மற்றும் டொபாகோவில் பிறந்தார். அங்கு அவரும் அவரது இரட்டை சகோதரியும் நியூயார்க்கின் புரூக்ளினுக்குச் செல்வதற்கு முன்பு தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். ஆலிவியர் 1989 இல் டார்ட்மவுத் கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டமும், 2001 இல் கிராண்ப்ரூக் கலை கல்லூரியில் இருந்து மட்பாண்ட கலைகளில் முதுகலை பட்டமும் பெற்றார். இவர் இப்போது பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவில் ஜெர்மன் டவுன் சுற்றுப்புறத்தில் வசிக்கிறார்.[2][3]

கலை தொகு

ஆலிவியரின் படைப்பில், பழக்கமான பொருள்கள், இடைவெளிகள் மற்றும் இருப்பிடங்கள் செயல்பாடு மற்றும் ஊடகத்தில் மாற்றப்படுகின்றன.[4] இவரது சிற்பங்கள், நிறுவல்கள், பொதுக் கலைகள் மற்றும் கவிதைகள் பார்வையாளர்களின் சொந்த அனுபவத்தையும் ஈடுபாட்டையும் ஆராய்கின்றன.[5] ஆலிவயர் தற்காலிக மற்றும் நிரந்தர சிற்பங்கள், நிறுவல்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.[1][6][7] 2023-24 ரோம் பரிசு வென்றவர்களைத் தேர்வு செய்த நடுவர் குழுவில் ஆலிவியர் பணியாற்றினார்.[8]

ஆலிவியர் பிலடெல்பியாவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகத்தில் உள்ள டைலர் கலைப் பள்ளியில் சிற்பவியல் துறையில் இணை பேராசிரியராக உள்ளார்.[9][10] 2005 முதல் 2007 வரை பார்ட் கல்லூரியில் உள்ள மில்டன் ஏவரி கலைப் பள்ளியில் சிற்பக் கலை ஆசிரிய உறுப்பினராக இருந்தார். டைலர் கலைப் பள்ளியில் சேருவதற்கு முன்பு, இவர் ஹூஸ்டன் பல்கலைக்கழக கலைப் பள்ளியில் உதவி சிற்பப் பேராசிரியராகவும், பீங்கான் துறைத் தலைவராகவும் இருந்தார்.[11]

படைப்புகள் தொகு

  • தி பாட்டில்  இஸ் ஜோய்ன்ட் (The Battle Is Joined) என்பது ஒரு தற்காலிக பொதுச் சிற்பமாகும்.[12][13][14] [15][16][17][18]
  • விட்னஸ் (Witness): கென்டக்கி பல்கலைக்கழகத்தின் நினைவு மண்டபத்தில் ஒரு நிரந்தர தளம் சார்ந்த நிறுவலை உருவாக்கினார், ஆபிரிக்க அமெரிக்க மற்றும் பூர்வீக அமெரிக்க உருவங்களை ஒரு சர்ச்சைக்குரிய கால சுவரோவியத்தில் இருந்து மீண்டும் உருவாக்கினார்.[19][20][21][21][22]
  • ஹியர் அண்ட் நவ்/கிளேசியர், ஷார்ட், ராக் (Here and Now/Glacier, Shard, Rock) என்பது கிரியேட்டிவ் டைம் கண்காட்சியின் ஒரு பகுதியாக ஆலிவியர் உருவாக்கினார்.[23] அது மாறுபட்ட நிலப்பரப்பு மற்றும் மானுடவியல் வரலாறுகளை மூன்று படங்கள் மூலம் விவரிக்கிறது-ஒரு பனிப்பாறை, வரலாற்று செனெகா கிராமத்தின் குடியேற்றத்திலிருந்து ஒரு மட்பாண்டத் துண்டு மற்றும் சமகால நிலப்பரப்பின் படம்.[24][25][26]

விருதுகள் தொகு

  • கலைக்கான அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் விருது, 2020
  • கலை மற்றும் பாரம்பரியத்திற்கான பியூ மைய விருது, 2019
  • ரோம் பரிசு, அமெரிக்கன் அகாடமி, 2018 [27] [28]
  • கலைகளுக்கான நியூயார்க் அறக்கட்டளை விருது, 2011
  • வில்லியம் எச் ஜான்சன் பரிசு, 2010
  • ஜோன் மிட்செல் அறக்கட்டளை விருது, 2007
  • லூயிஸ் கம்ஃபோர்ட் டிஃப்பனி அறக்கட்டளையின் இருபதாண்டு விருது, 2003

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Karyn Olivier: Everything That's Alive Moves - ICA Philadelphia". Institute of Contemporary Art - Philadelphia, PA. 2019-10-22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "KARYN OLIVIER » bio". பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  3. "Karyn Olivier". Tyler School of Art. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  4. "LPD Dialogue on Culture - Because Time In This Place Does Not Obey An Order- Art and Social Justice: Engaging with the Past - Olivier Karyn, Artist, American Academy in Rome". lapietradialogues.org. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  5. "Because Time In This Place Does Not Obey An Order | Karyn Olivier BHMF". Le Murate PAC. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  6. Chernick, Karen (April 30, 2020). "Philadelphia Will Finally Memorialize an Enslaved Woman Freed in 1776". Atlas Obscura.
  7. "Karyn Olivier Subverts the Formal Seriousness of Monuments". Hyperallergic. May 6, 2020.
  8. Maximilíano Durón (24 April 2023), Artists Win Coveted Rome Prize, Including Dread Scott and Nao Bustamante ARTnews.
  9. "Karyn Olivier". Tyler School of Art.
  10. "Karyn Olivier". Tyler School of Art. பார்க்கப்பட்ட நாள் 2020-01-06.
  11. "Resume" (PDF). karynolivier.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
  12. "Art project cloaks Germantown monument on anniversary of historic battle". metro.us. 6 October 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  13. Gerbner. Quaker Roots. 
  14. "Battle of Germantown". HISTORY. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  15. "The Battle Is Joined". Mural Arts Philadelphia. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  16. "Philadelphia's Monument Lab Asks, "What's Right for Public Space?"". Hyperallergic. 2017-10-09. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  17. aclair (2019-10-21). "Karyn Olivier". The Pew Center for Arts & Heritage. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  18. "Monument as 'Restless Object': An Interview with Karyn Olivier". Mural Arts Philadelphia. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  19. "Memorial Hall Visitors 'Witness' New Perspective on Kentucky History". UKNow. 2018-08-24. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  20. James, Josh. "Memorial Hall Artist Karyn Olivier Isn't After Resolution. She Wants More Questions". wuky.org. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  21. 21.0 21.1 Childress, Rick. "Once anonymous, now revered: Memorial Hall art adds context to debate of race in art". The Kentucky Kernel. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  22. "A picture-perfect response at the University of Kentucky". Lexington Herald Reader. September 2018.
  23. "Drifting in Daylight: Art in Central Park". Creative Time. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  24. June 2015, Manon Verchot4 (2015-06-04). "Artist Reawakens Glacial Past In Central Park". GlacierHub. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  25. "Karyn Olivier". Creative Time. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  26. "Nature's Nation: American Art and Environment". Panorama. 2019. doi:10.24926/24716839.1709. பன்னாட்டுத் தர தொடர் எண்:2471-6839. 
  27. "Tyler's Karyn Olivier wins Rome Prize". Tyler School of Art. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  28. "American Academy in Rome Announces 2018–19 Fellows". Artforum. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரின்_ஆலிவியர்&oldid=3903681" இலிருந்து மீள்விக்கப்பட்டது