காரி என்கிவிசுட்டு
காரி - பெக்கா என்குவிசுட்டு (பிறப்பு: பிப்ரவரி 16,1954) கெல்சின்கி பல்கலைக்கழகத்தின் இயற்பியல் அறிவியல் துறையில் அண்டவியல் பேராசிரியராக உள்ளார். 1983 ஆம் ஆண்டில் என்குவிசுட்டு கோட்பாட்டு இயற்பியலில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
பிறப்பு | பெப்ரவரி 15, 1954 இலாகிதி, பின்லாந்து |
---|---|
தேசியம் | பின்லாந்தியர் |
என்குவிசுட்டு ஐயுறவுவாதி; பின்லாந்து ஐயுறவுவாதக் கழகத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் , இயற்பியலை பரப்ப பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
1997 ஆம் ஆண்டில் என்குவிசுட்டுக்கு துகள் இயற்பியல் மற்றும் அண்டவியல் ஆகியவற்றில் அவரது அரிய பணிகளுக்காக மேக்னசு எர்ன்ரூத் அறக்கட்டளை இயற்பியல் விருது வழங்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டில் , ஒலிமிசன் போர்ட்டில்லா (Óat the Gates of Being) என்ற அவரது புத்தகத்திற்காக புனைகதை அல்லாத பின்லாந்தின் மிக முதன்மையான விருது அவருக்கு வழங்கப்பட்டது.
என்குவிசுட்டு 2019 இல் கெல்ல்சின்கி பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Puttonen, Mikko (1 March 2019). "Opiskelu ei sujunut Kari Enqvistiltä – kunnes hän kohtasi kvanttimekaniikan". Helsingin Sanomat. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.