காரு இராம் பகத்

இந்திய அரசியல்வாதி

காரு ராம் பகத் (Gharu Ram Bhagat) சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் ஆவார். பகத் சம்மு மாவட்டத்தில் உள்ள ரன்பீர் சிங்புரா சட்டமன்றத் தொகுதியின் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக 2008லிருந்து பணியாற்றினார். இவர் 2016 வரை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருந்தார். 2016இல், இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[1] ஆகத்து 30,2022 அன்று, குலாம் நபி ஆசாத் ஆதரவாகக் காங்கிரசிலிருந்து விலகினார்.[2] பின்னர் மீண்டும் பாஜகவில் சேர்ந்து 2024 சட்டமன்றத் தேர்தலில் சுசேத்கர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

காரு இராம் பகத்
சட்டமன்ற உறுப்பினர்-சம்மு காசுமீர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
தொகுதிசுசேத்கர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி, இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரு_இராம்_பகத்&oldid=4138276" இலிருந்து மீள்விக்கப்பட்டது