காரென் தேசிய விடுதலைப் படைகள்

காரென் தேசிய விடுதலைப் படைகள் (Karen National Liberation Army (சுருக்கமாக: KNLA), மியான்மர் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கில் செயல்படும் காரென் தேசிய ஒன்றியத்தின் (Karen National Union) (KNU),ஆயுதக் குழுவாகும்.மியான்மர் நாட்டின் தாய்லாந்து எல்லையை ஒட்டிய காயா மாநிலம், காயின் மாநிலம், தாநின்தாரி பிரதேசம், பகோ மாநிலம் மற்றும் மொன் மாநிலங்களில் வாழும் காரென் மக்களுக்கான மாநில தன்னாட்சி உரிமைக்கு போராடுவதே இதன் நோக்கமாகும். இப்படைகள் 1949ஆம் ஆண்டிலிருந்தே மியான்மர் அரசுக்கு எதிராக போராடி வருகிறது. 2021ஆம் ஆண்டில் இப்படையில் 15,000 வீரர்கள் உள்ளனர்[4]

காரென் தேசிய விடுதலைப் படைகள்
கொடி
தலைவர்கள்ஜெனரல் சா ஜானி
லெப். ஜெனரல் சா பா யாவ் ஹே
செயல்பாட்டுக் காலம்1949 – தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்)காயா மாநிலம்
காயின் மாநிலம்
தாநின்தாரி பிரதேசம்
பகோ மாநிலம்
மொன் மாநிலம்[1]
மியான்மர்-தாய்லாந்து எல்லைப்புறங்கள்
சித்தாந்தம்காரென் தேசியவாதம்
பிரதேச தன்னாட்சி
மத்தியில் கூட்டாட்சி
தலைமையகம்லை வா
கூட்டாளிகள்
4கே கூட்டணி[2][3]
  • காரென்னி படைகள்
  • காரென்னி தேசிய மக்கள் விடுதலை முன்னணி
  • காரென்னி தேசியவாதிகள் பாதுகாப்பு படைகள்
எதிரிகள்
  •  மியான்மர்
    • மியான்மர் இராணுவம்
    • எல்லைப் பாதுகாப்புப் படைகள்
    • மியான்மர் காவல்துறை
யுத்தங்கள் மற்றும் போர்கள்மியான்மர் உள்நாட்டு கிளர்ச்சிகள் & மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை)
காரென் தேசிய விடுதலைப் படைகள் (Karen National Liberation Army) கட்டுப்பாட்டில் இருக்கும் மியான்மர் பகுதிகள் (நீல நிறம்)

2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட மியான்மர் உள்நாட்டுப் போரில் இப்படையானது தனது கூட்டாளிகளான காரென்னி படைகள், காரென்னி தேசிய மக்கள் விடுதலை முன்னணி மற்றும் காரென்னி தேசியவாதிகள் பாதுகாப்பு படைகளுடன் இணைந்து மியான்மர் இராணுவத்திற்கு எதிராக போரிட்டு, மியான்மர் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைப்புறப் பகுதிகளை கைப்பற்றி தன்னாட்சி நிர்வாகம் நடத்துகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "KNU and NMSP agree to temporary ceasefire" (in en). The Myanmar Times. 14 March 2018 இம் மூலத்தில் இருந்து 29 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210429053824/https://www.mmtimes.com/news/knu-and-nmsp-agree-temporary-ceasefire.html. 
  2. "Intense clash in Mese, Karenni State". Democratic Voice of Burma. 20 June 2023. https://burmese.dvb.no/archives/599992. 
  3. "The 4K, the clash in Mese, and the military movement of Karenni State". People's Spring. 20 June 2023. https://www.ludunwayoo.com/feature-mm/2023/06/20/79886/. 
  4. "ชาติพันธุ์กระเหรี่ยง ต่อสู้เพื่อความฝัน "รัฐกะเหรี่ยง"". pptvhd36.com (in தாய்). 30 March 2021. Archived from the original on 30 March 2021. பார்க்கப்பட்ட நாள் 3 April 2021.

வெளி இணைப்புகள்

தொகு