கார்கிவ் மாகாணம்

கார்கீவ் மாகாணம் (Kharkiv Oblast) (உக்ரைனியன்: Харківська́ о́бласть, also referred to as , உக்ரைனியன்: Ха́рківщина), உக்ரைன் நாட்டின் 24 மாகாணங்களில் ஒன்றாகும்.[4]உக்ரைன் நாட்டின் வடகிழக்கில், ருசியாவின் எல்லைப்பகுதியில் அமைந்த கார்கீவ் மாகாணத்தின் தலைநகரம் கார்கீவ் மாநகரம் ஆகும். 31,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கார்கீவ் மாகாணத்தின் மக்கள் தொகை 26,33,834 ஆகும். இதன் அலுவல் மொழி உக்ரேனியம் ஆகும். இம்மாகாணம் 27 மாவட்டங்களையும், 7 பெரிய நகரங்களையும், 17 நகரங்களையும், 61 பேரூராட்சிகளையும், 1683 கிராமங்களையும் கொண்டது.

கார்கீவ் மாகாணம்
Харківська область
மாகாணம்
கார்கிவ்சா மாகாணம் [1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Харківщина (Kharkivshchyna)
ஆள்கூறுகள்: 49°35′N 36°26′E / 49.59°N 36.43°E / 49.59; 36.43
நாடு உக்ரைன்
தலைநகரம்கார்கீவ்
அரசு
 • ஆளுநர்ஒலெக்சாண்டர் சக்குன்[2]
 • கார்கிவ் மாகாண மன்றம்120 இடங்கள்
பரப்பளவு
 • மொத்தம்31,415 km2 (12,129 sq mi)
பரப்பளவு தரவரிசைநான்காமிடம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்26,33,834
 • தரவரிசைமூன்றாமிடம்
 • அடர்த்தி84/km2 (220/sq mi)
Demographics
 • அலுவல் மொழிஉக்ரேனியம்
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு எண்61-64
இடக் குறியீடு+380-57
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுISO 3166-2:UA
வாகனப் பதிவுAX
மாவட்டங்கள்27[3]
நகரங்கள்17
• பெரிய நகரங்கள்7
பேரூராட்சிகள்61
கிராமங்கள்1683
FIPS 10-4பிராந்தியக் குறியீடு: உக்ரைன் 07
இணையதளம்www.kharkivoda.gov.ua

அமைவிடம் தொகு

கார்கீவ் மாகாணத்தின் வடக்கில் உருசியா நாடும், கிழக்கில் லுகான்சுக் மாகாணும், தென்கிழக்கில் தானியெத்சுக் மாகாணமும், தென்மேற்கில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணமும், மேற்கில் பொல்டாவா மாகாணமும், வடமேற்கில் சுமி மாகாணமும் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கார்கிவ் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 28,95,800 ஆகும். அதில் ஆண்கள் 1,328,900 (45.9%) மற்றும் பெண்கள் 1,566,900 (54.1%) ஆகும். இம்மாகாணத்தில் உக்ரேனியம் 53.8%, உருசிய மொழியை 44.3% மற்றும் பிற மொழிகளை 1.9% பேர் பேசுகின்றனர். 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாகாண்த்தின் இனக்குழுக்கள்:

  • உக்ரேனிய மக்கள் – 70.7%,
  • ருசியர்கள் – 25.6%,
  • பெலரசியர்கள் – 0.5%
  • யூதர்கள் – 0.4%,
  • ஆர்மீனியர்கள் – 0.4%,
  • அசரிரியர்கள் – 0.2%,
  • ஜார்ஜியர்கள் – 0.15%,
  • தாத்தர்கள் – 0.14%,
  • பிறர் – 2.1%,;

பொருளாதாரம் தொகு

தொழில் துறை பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் இம்மாகாணத்தில், பொறியியல், உலோகவியல், உற்பத்தித் துறை, வேதியியல் பொருட்கள் உற்பத்தி, உணவுப் பதனிடுதல் முக்கியத் தொழிலாக உள்ளது. மேலும் வேளாண்மைத் துறையிலும் சிறந்து விளங்குகிறது.[5]மேலும் கார்கீவ் நகரம் வானூர்திகள் கட்டுப்பாட்டு மையம் தொடர்பான கருவிகள் உற்பத்தி செய்கிறது. இம்மாகாணம் எரிவாயு உற்பத்தி நிலையங்களைக் கொண்டுள்ளது.

நிர்வாகப் பிரிவுகள் தொகு

கார்கீவ் மாகாணம் 7 நகரங்களாகவும், 7 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

பெயர் பரப்பளவு (சகிமீ) மக்கள் தொகை
கணக்கெடுப்பு ஆண்டு 2015[6]
நிர்வாகத் தலைமையிடம் நகர்புற மக்கள் தொகை
கார்கீவ் நகரம் 350 1,449,674 கார்கிவ் 1,449,674
சுகுயிவ் நகரம் 13 33,243 சுகுயிவ் 32,401
இசியும் நகரம் 44 49,822 இசியும் 49,822
குப்யான்ஸ்க் நகரம் 33 56,704 குப்யான்ஸ்க் 56,704
லிபோடின் நகரம் 31 24,442 லிபோடின் 21,619
லொசோவா நகரம் 18 65,950 லொசோவா 64,269
மே தின நகரம் 15 30,616 மே தினம் 30,616
பாலக்லியா மாவட்டம் 1,986 82,003 பாலக்லியா 51,886
பார்வின்கோவ் மாவட்டம் 1,364 21,919 பார்வின்கோவ் 9,057
பிளையனியுக்கு மாவட்டம் 1,380 19,144 பிளையனியுக்கு 3,790
Bohodukhiv Raion 1,160 39,182 Bohodukhiv 18,998
Borova Raion 875 16,938 Borova 5,624
Chuhuiv Raion 1,148 46,579 Chuhui N/A *
Derhachivs'kyi raion]] 900 95,122 Derhachi 67,908
Dvorichna Raion 1,112 17,775 Dvorichna 3,669
Izium Raion 1,553 17,382 Izium N/A *
Kehychivka Raion 782 21,058 Kehychivka 8,799
Kharkiv Raion 1,403 182,239 Kharkiv N/A *
Kolomak Raion 330 7,099 Kolomak 2,919
Krasnohrad Raion 985 44,742 Krasnohrad 21,008
Krasnokutsk Raion 1,040 28,260 Krasnokutsk 8,895
Kupiansk Raion 1,280 24,769 Kupiansk N/A *
Lozova Raion 1,403 29,139 Lozova N/A *
Nova Vodolaha Raion 1,182 33,175 Nova Vodolaha 11,850
Pechenihy Raion 467 10,113 Pechenihy 5,340
Pervomaiskyi Raion 1,225 16,027 Pervomaiskyi N/A *
Sakhnovshchyna Raion 1,170 21,377 Sakhnovshchyna 7,333
Shevchenkove Raion 977 20,480 Shevchenkove 6,957
Valky Raion 1,011 31,897 Valky 14,174
Velykyi Burluk Raion 1,221 22,541 Velykyi Burluk 6,049
Vovchansk Raion 1,888 47,172 Vovchansk 28,143
Zachepylivka Raion 794 15,329 achepylivka 3,642
Zmiiv Raion 1,365 71,887 Zmiiv 33,366
Zolochivs'kyi raion 969 26,543 Zolochiv 8,916
 
கார்கிவ் மாகாணத்தின் வரைபடம்

மேற்கோள்கள் தொகு

  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF). United Nations Statistics Division. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. ISBN 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
  2. President appoints acting chairman of Kharkiv Regional State Administration, Ukrinform (12 August 2021)
  3. (in உக்குரேனிய மொழி) Local elections. Kharkiv region: new block and "big change of shoes", The Ukrainian Week (7 September 2020)
  4. Oblasts of Ukraine
  5. (in உருசிய மொழி) Agriculture in 2015: results SQ News (13 February 2016)
  6. "Population Quantity". UkrStat (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 7 January 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்கிவ்_மாகாணம்&oldid=3842757" இலிருந்து மீள்விக்கப்பட்டது