தனியெத்சுக் மக்கள் குடியரசு

தனியெத்சுக் மக்கள் குடியரசு (Donetsk People's Republic; உருசியம்: Донецкая Народная Республика, ஒ.பெ தனியெத்சுக்கயா நரோத்னயா ரிசுப்புப்ளிக்கா) என்பது 2014 ஏப்பிரல் 7 இல் உக்ரைனில் இருந்து சுய-அறிவிப்பு மூலம் பிரிந்த ஒரு மாநிலம் ஆகும். தனியெத்சுக் இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். 2018 முதல் தெனிசு புசிலின் இதன் அரசுத்தலைவராக உள்ளார்.[6][7]

தனியெத்சுக் மக்கள் குடியரசு
Donetsk People's Republic
  • Донецкая Народная Республика (உருசிய மொழி)
  • தனியெத்சுக்கயா நரோத்னயா ரிசுப்புப்ளிக்கா
கொடி of
கொடி
நாட்டுப்பண்: Славься республика
"குடியரசுக்கு மகிமை"[1]
குடியரசின் அறிவிப்புப் பகுதி (மென் பச்சை, கடும் பச்சை), கட்டுப்பாட்டுப் பகுதி (கடும் பச்சை)
குடியரசின் அறிவிப்புப் பகுதி (மென் பச்சை, கடும் பச்சை), கட்டுப்பாட்டுப் பகுதி (கடும் பச்சை)
உக்ரைனில் தனியெத்சுக் மக்கள் குடியரசு
உக்ரைனில் தனியெத்சுக் மக்கள் குடியரசு
நிலை
தலைநகரம்தோனெத்ஸ்க்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)உருசியம்[2]
அரசாங்கம்ஒருமுக அரசியலமைப்புக் குடியரசு
• தலைவர்
தெனிசு புசிலின்
• பிரதமர்
விளாதிமிர் பாசுக்கோவ்
• மக்கள் பேரவைத் தலைவர்
விளாதிமிர் பித்யோவ்க்கா
சட்டமன்றம்மக்கள் பேரவை
உக்ரைனில் இருந்து விடுதலை
• நிறுவல்
7 ஏப்ரல் 2014
• சுயாதீன மக்கள் வாக்கெடுப்பு
11 மே 2014
5 செப்டம்பர் 2014
• 2-ஆம் மின்சுக் உடன்பாடு
12 பெப்ரவரி 2015
• உருசியாவின் அங்கீகாரம்
21 பெப்ரவரி 2022
பரப்பு
• மொத்தம்
8,902 km2 (3,437 sq mi)
மக்கள் தொகை
• 2018 மதிப்பிடு
2,302,444[3] (தரம் இல்லை)
நாணயம்உருசிய ரூபிள்[4]
நேர வலயம்ஒ.அ.நே+3 (மாசுக்கோ நேரம்[5])
வாகனம் செலுத்தல்வலது

உக்ரைன் தனியெத்சுக் மக்கள் குடியரசையும், லுகான்சுக் மக்கள் குடியரசையும் பயங்கரவாத அமைப்புகளாகக் கருதுகிறது.[8] உருசிய இராணுவத் தலையீட்டின் விளைவாக "உக்ரைனின் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின்" பகுதியாக உக்ரைன் இவ்விரண்டு பகுதிகளையும் அத்துடன் கிரிமியா தன்னாட்சிக் குடியரசு, செவஸ்தபோல் ஆகியவற்றையும் கருதுகிறது.[9][10] தனியெத்சுக் மாகாணத்தின் மொத்த மக்கள்தொகையில் அரைவாசிப் பேர் (கிட்டத்தட்ட 2 மில்லியன்) தனியெத்சுக் மக்கள் குடியரசில் வாழ்கிறார்கள். கிளர்ச்சியாளர்கள் தனியெத்சுக் மாகாணத்தின் முழுப் பகுதியையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காவிட்டாலும், 7,853 சதுர கிலோமீட்டர்கள் (3,032 sq mi) பகுதியைத் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இவற்றில் முக்கிய நகரங்களான தனியெத்சுக் (தலைநகர்), மக்கீவ்க்கா, ஒர்லீவ்க்கா ஆகியவற்றைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.[11]

2022 பெப்ரவரி 21 இல், உருசியா தனியெத்சுக், லுகான்சுக் குடியரசுகளை தனிநாடுகளாக அங்கீகரித்தது.[12][13] ஆனாலும், 2017 பிப்ரவரி முதல் தனியெசுக் குடியரசு வழங்கிவந்த அடையாள ஆவணங்கள், டிப்புளோமாக்கள், பிறப்பு, திருமணச் சான்றிதழ்கள், வாகனப் பதிவுத் தகடுகள் ஆகியவற்றை உருசியா ஏற்கனவே அங்கீகரித்திருந்தது.[14][15]

இவற்றையும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. National Anthem of Donetsk People's Republic - Славься республика, наша народная (도네츠크 인민 공화국의 국가) (YouTube). Donetsk. 17 November 2018. பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
  2. Русский признали в ДНР единственным государственным языком [The Russian language has become the sole state language in the DPR]. Российская газета (in ரஷியன்). Archived from the original on 28 February 2021. பார்க்கப்பட்ட நாள் 7 March 2020.
  3. "Численность населения Донецкой Народной Республики на 1 января 2018 года" (PDF). Archived from the original (PDF) on 16 May 2018. பார்க்கப்பட்ட நாள் 28 May 2018.
  4. "Постановление Президиума Совета Министров ДНР № 18-3 от 28.09.2015 г." Archived from the original on 1 December 2020. பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  5. "DPR and LPR switch over to Moscow time". Information Telegraph Agency of Russia. 26 October 2014 இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150220213347/http://tass.ru/en/world/756540. 
  6. "Парламент ДНР сменил исполняющего обязанности главы республики". Meduza (Meduza). 7 September 2018 இம் மூலத்தில் இருந்து 14 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210614160528/https://meduza.io/news/2018/09/07/parlament-dnr-smenil-ispolnyayuschego-obyazannosti-glavy-respubliki. "Народный совет самопровозглашенной Донецкой народной республики (ДНР) сменил исполняющего обязанности главы республики – вместо вице-премьера Дмитрия Трапезникова им стал председатель парламента Денис Пушилин, пишет «Интерфакс»." 
  7. "South Ossetia recognises independence of Donetsk People's Republic". Information Telegraph Agency of Russia. 27 June 2014 இம் மூலத்தில் இருந்து 17 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161117173807/http://tass.com/world/738110. 
  8. "Ukraine's prosecutor general classifies self-declared Donetsk and Lugansk republics as terrorist organizations". Kyiv Post. 16 May 2014 இம் மூலத்தில் இருந்து 24 February 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160224162350/http://www.kyivpost.com/article/content/ukraine/ukraines-prosecutor-general-classifies-self-declared-donetsk-and-luhansk-republics-as-terrorist-organizations-348212.html. 
  9. "Набув чинності закон про окуповані території України" (in uk). Mirror Weekly. 15 May 2014 இம் மூலத்தில் இருந்து 25 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141125161444/http://dt.ua/POLITICS/nabuv-chinnosti-zakon-pro-okupovani-teritoriyi-ukrayini-143258_.html. 
  10. Higher educational institutions at the temporarily occupied territories of Ukraine will not work – the minister of education. Newsru. 1 October 2014
  11. "Self-proclaimed Luhansk People's Republic governs most residents". Information Telegraph Agency of Russia. 25 September 2014. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 September 2014.
    "Nowhere to Run in Eastern Ukraine". The New York Times. 13 November 2014 இம் மூலத்தில் இருந்து 14 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141114102934/http://www.nytimes.com/2014/11/14/world/europe/nowhere-to-run-in-eastern-ukraine-.html. 
  12. "Russia recognises Ukraine separatist regions as independent states". BBC News. Archived from the original on 21 February 2022. பார்க்கப்பட்ட நாள் 21 February 2022.
  13. Wamsley, Laurel (2022-02-21). "Putin recognizes breakaway regions' independence from Ukraine, raising attack fears". NPR இம் மூலத்தில் இருந்து 21 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220221201206/https://www.npr.org/2022/02/21/1082146367/putin-ukraine-donetsk-luhansk/. 
  14. "Putin orders Russia to recognize documents issued in rebel-held east Ukraine". Reuters. 18 February 2017 இம் மூலத்தில் இருந்து 19 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170219040112/http://www.reuters.com/article/us-ukraine-crisis-russia-documents-idUSKBN15X0KR. 
  15. "U.S. embassy in Kiev critical of Moscow order on Ukrainian documentation". Reuters. 19 February 2017 இம் மூலத்தில் இருந்து 19 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170219163938/http://www.reuters.com/article/us-ukraine-crisis-russia-documents-idUSKBN15Y0O3. 

வெளி இணைப்புகள்

தொகு