கார்செல் (Carcel) என்பது ஒளியின் செறிவை அளவிடப் பயன்பட்ட ஓர் பிரஞ்சு அலகாகும். 1860 ஆல் ஆண்டுகளில் இந்த அலகு கார்செல் விளக்குகளின் ஒளிச்செறிவை அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. இவ்விளக்கு செந்தர அடுப்பு மற்றும் புகைப்போக்கி பரிமாண அளவுகளில் இலைக்காய்களில் இருந்து பெறப்படும் கொல்சா வித்து எண்ணெய் அல்லது கோசுக்கீரை விதை எண்ணெயில் எரியும். ஒரு மணி நேரத்திற்கு 42 [1] கிராம் அளவுள்ள கொல்சா வித்தெண்ணெய் 40 மில்லிமீட்டர் உயரத்திற்கு எரிந்தால் அது ஒரு கார்செல் அளவு ஆகும் [2][3]. தற்காலத்தில் ஒரு கார்செல் என்பது 9.74 கேண்டலாவுக்குச் சமமாகும் [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Rowlett, Russ. "Carcel entry". How Many? A Dictionary of Units of Measurement. University of North Carolina at Chapel Hill. Archived from the original on 2013-08-16. பார்க்கப்பட்ட நாள் 2009-05-13.
  2. "Carcel definition". Webster's Revised Unabridged Dictionary, published 1913 by C. & G. Merriam Co. The Free Dictionary. 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-05-13.
  3. Johnston, S.F. (Feb 23, 2004). "History of light and color" (PDF). eknigu Science library. Archived from the original (PDF) on 2010-06-16. பார்க்கப்பட்ட நாள் 2009-05-13.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்செல்&oldid=3745196" இலிருந்து மீள்விக்கப்பட்டது