கார்ட்டோசாட்-2எ

கார்ட்டோசாட்-2எ (Cartosat-2A) என்பது கதிரவனொத்துப் பாதையில் வலம்வரும் ஓர் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அல்லது செய்மதியாகும்.இந்தக் கோளை வடிவமைத்து, ஏவி, பராமரித்து வருவது இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகும். இது அம்மையத்தின் பதிமூன்றாவது இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள் ஆகும். இது முனைய துணைக்கோள் ஏவுகலத்தினால்( PSLV-C9) ஏப்ரல் 28, 2008 அன்று விண்ணில் ஏவியதாகும்.

இந்த செயற்கைக்கோள் மின்காந்த நிறமாலையில் உள்ள பூமியின் காண்பகுதியை கருப்பு வெள்ளை படமாக எடுக்கக் கூடிய சகலநிறமுணர் (சநிமு) படம்பிடி கருவியை ஏந்தி சென்றது. மேலும் அது 45 கோண அளவிற்கு நகரும் பாதைத்திருப்பங்களை அடிக்கடி மேற்கொள்ளும் வகையில் அமைந்ததாகும்.

மேலும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ட்டோசாட்-2எ&oldid=2616110" இலிருந்து மீள்விக்கப்பட்டது