கார்ட்டோசாட்-2

புவி நோக்கு செயற்கைக்கோள்

கார்டோசாட்-2 என்பது கதிரவனொத்துப் பாதையில் வலம்வரும் ஓர் புவிநோக்குச் செயற்கைக்கோள் அல்லது செய்மதியாகும். இந்தக் கோளை வடிவமைத்து, ஏவி, பராமரித்து வருவது இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகும். இது சுமார் 680 கிலோ எடையுடன் நிலப்பட வரைவியல் துறைக்காக இந்தியாவில் பயன்படுத்த விண்ணில் ஏவப்பட்டதாகும். இதனை முனைய துணைக்கோள் ஏவுகலத்தினால் 2007 சனவரி 10 ஆம் நாளன்று ஏவப்பட்டது.

கார்ட்டோசாட்-2 மின்காந்த நிறமாலையில் உள்ள பூமியின் காண்பகுதியை கருப்பு வெள்ளை படமாக எடுக்கும் கலைநிலையான சகலநிறமுணர் (சநிமு) படம்பிடி கருவியை கொண்டதாகும். பூமியின் வரைப்பாதையை இந்த உயர் நுணுக்க சநிமு படம்பிடிக் கருவிகள் 9.6 கி.மீ தொலைவாகவும், அதன் இட நுணுக்கத்தை 1 மீ-க்கு குறைவாகவும் எடுக்கக் கூடியது. இந்த செயற்கைக்கோள் 45 கோண அளவில் பூமியை நோக்கித் திருப்பவும், அதே போல் அதன் சுற்றுப்பாதையை நோக்கி திருப்பவும் முடியும்.

கார்ட்டோசாட்-2 ஒரு குறித்தக் காட்சிப் புள்ளியின் ஒளிப்படத் தொகுதியை தரும் அளவிற்கு மேம்பட்ட ஒரு தொலையுணர்வு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோளின் புகைப்படத்தைக் கொண்டு விவரமான வரைபடம் தயாரிப்பதும், பிற நிலப்பட வரைவியல் பணிகளைச் செய்வதும், கிராம புற மற்றும் நகர கட்டுமான, மேம்பாட்டு திட்டங்களுக்கும், புவியியல் மற்றும் நில விவர அமைப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த செயற்கைக்கோளிடம் இருந்து கிடைத்த முதல் ஒளிப்படத் தொகுதியானது சனவரி 12, 2007 ஆம் ஆண்டு கிடைத்தது. அது சுமார் 280 கி.மீ தொலைவுடன் ஷிவாலிக் பகுதியில் இருந்து டெல்லி வரை கொண்டதாகும். மற்றொரு தொகுதியாக சுமார் 50 கி.மீ தொலைவுள்ள கோவாவின் இராதா நகரி பகுதியில் இருந்து சகோன் பகுதி வரை கொண்டதாகும். ஹைதராபாதில் உள்ள ஷட்நகர் தேசிய தொலையுணர்வு அமைப்பின் தரவு உள்வாங்கு நிலையத்தில் கிடைத்த முதல் ஒளிப்பட தொகுதியானது உயர்மட்ட ஒளிப்படக் கருவியின் உன்னத செயலை நிரூபித்தது.

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ட்டோசாட்-2&oldid=2916183" இலிருந்து மீள்விக்கப்பட்டது