கார்த்திகேய மூர்த்தி

இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்,பாடலாசிரியர்

கார்த்திகேய மூர்த்தி (Karthikeya Murthy) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும், பாடலாசிரியரும், இசைத் தயாரிப்பாளரும் ஆவார்.[1] இவர் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியிடப்பட்ட மூணே மூணு வார்த்தை திரைப்படத்தில் அறிமுகமானார்.[2] கே. டி. (கருப்புதுறை) திரைப்படத்தில் இசையமைத்ததற்காக அறியப்படுகிறார்.

கார்த்திகேய மூர்த்தி
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்கார்த்திக் ஐயர், கே. எம்
பிறப்பு16 மே 1985 (1985-05-16) (அகவை 39)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணி இசை,
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர்,
இசைக்கருவி(கள்)கின்னரப்பெட்டி, கிளபம்
இசைத்துறையில்2014–தற்போது வரை
வெளியீட்டு நிறுவனங்கள்சரிகம, திங் மியூசிக்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கார்த்திகேயன் கருநாடகப் பாரம்பரிய இசையை செங்கல்பட்டு அரங்கநாதன், டி. கே. ஜே. சுகன்யா, பிரேமலதா ஆகியோரிடமிருந்து பயிற்சி பெற்றார். மேற்கத்தியப் பாரம்பரிய இசையை அப்துல் சத்தாரிடமிருந்து பயிற்சி பெற்றார். மிருதங்க இசைக்கலைஞர் டி. கே. மூர்த்தியின் பேரன் கார்த்திகேயன். இவரது தந்தை சென்னை அகில இந்திய வானொலி இசையமைப்பாளராக இருந்தார். பௌதீசுவர பாகவதர் (கருநாடகப் பாடகர்), தாணு பாகவதர் (கருநாடகப் பாடகர்), சுப்பிரமணிய பாகவதர் (கருநாடகப் பாடகர்), தாணு சுப்பிரமணிய பாகவதர், மிருதங்கம் டி. கே. ஜெயராமன் என இவரது குடும்பத்தில் 7-ஆவது தலைமுறை இசைக்கலைஞராக உள்ளார். இவரது மூதாதையர்கள் அரசவை இசைக்கலைஞர்கள் ஆவர்.[3][4]

தொழில் வாழ்க்கை

தொகு

கார்த்திகேய மூர்த்தி பள்ளியில் படிக்கும் போது "புரோ-டீன்சு" என்ற இசைக்குழுவை உருவாக்கி, தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சன் தொலைக்காட்சி இசைக்குழுவின் தேடல் போட்டிக்காக "மெட்ராசு டியூன்சு" என்று மறுபெயரிடப்பட்டது. திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பு ஒரு தனி இசையமைப்பாளராக குறும்படங்கள், விளம்பரப் படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றில் பணியாற்றினார். மெட்ராசு டியூன்சின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானும்,  சரிகம நிறுவனமும் இணைந்து நடத்திய "ஊ ல ல லா" என்ற இசைக்குழுத் தேடல் போட்டியில் வெற்றி பெற்றார். ரகுமானின் பதிவரங்கில் ஆவணப்படம் ஒன்றைப் பதிவு செய்து வென்ற பிறகு, "ஒரு கூடை பாசம்" என்ற இயக்குநர் கே. பாலச்சந்தரின் கடைசி மேடை நிகழ்ச்சிக்கு "கார்த்திக் ஐயர்" என்ற மேடைப் பெயரில் இசைக் குறிப்புகளை எழுதினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "'BAFTA Reveals Breakthrough India Talent, Applications For Next Round Delayed Due to COVID-19'". 10 June 2021 – via www.variety.com.
  2. Dundoo, Sangeetha Devi (20 January 2015). "'You shouldn't delay an idea'". The Hindu. https://www.thehindu.com/features/metroplus/you-shouldnt-delay-an-idea/article6805208.ece. 
  3. Raghavan, Nikhil (24 சனவரி 2015). "Tunes from the third generation". தி இந்து. https://www.thehindu.com/features/cinema/tunes-from-the-third-generation/article6818545.ece. 
  4. Ganesh, Deepa (29 சனவரி 2015). "Sparrow's monstrous talent". தி இந்து. https://www.thehindu.com/features/friday-review/sparrows-monstrous-talent/article6834536.ece. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திகேய_மூர்த்தி&oldid=4142525" இலிருந்து மீள்விக்கப்பட்டது