கார்த்திகை மனோகரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கார்த்திகை மனோகரம் அல்லது அவல் பொரி கிளறல் என அழைக்கப்படுவது தமிழ்நாட்டில் முருகப்பெருமான் பிறந்த நாளான கார்த்திகை தீபம் திருநாளில் சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறி வழியாக முருகன் பிறந்ததை வழிபடும் விதமாகப் படைக்கபடும் மிகவும் முக்கியமான இனிப்புப் பண்டமாகும். இதன் செய்முறையானது அவல் சோனை பொரியுடன் ஏலக்காய் கலந்த வெல்லப்பாகுடன் சிறிதளவு தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை சேர்த்து கிளறப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது. இத்துடன் சேர்த்து பொரி உருண்டை, அப்பம் போன்ற பல இனிப்பு வகைகள் சேர்த்துப் படைக்கபடுகிறது.