கார்பன் ஆக்சோ ஆலைடுகள்
வேதிச் சேர்மங்களின் ஒரு வகை
கார்பன் ஆக்சோ ஆலைடுகள் என்பவை வேதியியல் சேர்மங்களின் ஒரு வகை குழு ஆகும். இவை கார்பன், ஆக்சிசன் மற்றும் ஆலசன்கள் அணுக்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. இவற்றில் கார்போனைல் ஆலைடுகளும் (COX2) ஆக்சாலில் ஆலைடுகளும் (C2X2O2) அடங்கும். X எனப்படும் ஆலசன் அணுக்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை; இவை கலப்பு ஆக்சோ ஆலைடுகளில் வேறுபடுகின்றன. ஆலசன்களின் பெரும்பாலான சேர்க்கைகள் இக்குழுவில் உள்ளன ஆனால் கார்போனைல் அயோடைடு, (COI2) அறியப்படவில்லை இவை வினைத்திறன் கொண்ட ஆலசனேற்றும் முகவர்களாகும்.[1]
பெயர் | வாய்ப்பாடு | உருகுநிலை / °செல்சியசு | கொதிநிலை / °செல்சியசு |
---|---|---|---|
கார்பனைல் புளோரைடு | COF2 | −114 | −83.1 |
கார்பனைல் குளோரைடு புளோரைடு | COFCl | −42 | |
கார்பனைல் புரோமைடு புளோரைடு | COFBr | −20.6 | |
பாசுசீன் | COCl2 | −127.8 | +7.6 |
கார்பனைல் அயோடைடு புளோரைடு | COFI | −90 | +23.4 |
கார்பனைல் புரோமைடு குளோரைடு | COClBr | ||
கார்பனைல் புரோமைடு | COBr2 | +64.5 | |
ஆக்சாலில் புளோரைடு | C2F2O2 | −3 | +26.6 |
ஆக்சாலில் குளோரைடு | C2Cl2O2 | −16 | +63 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 304–305. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.