கார்பாக்சமைடு
கார்பாக்சமைடுகள் (carboxamides ) என்பவை கரிம வேதியியலில் R-CO-NR'R′′ என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் வேதி வினைக்குழுக்களைக் குறிக்கும். வாய்ப்பாட்டில் இடம்பெற்றுள்ள R, R', R′′ என்பவை கரிம பதிலிகள் அல்லது ஐதரசன் அணுவைக் குறிக்கின்றன. இவ்வகை குழுவை அமினோ கார்பனைல்கள் என்ற பெயராலும் அழைக்கலாம் [1].
அசுபரகீன், குளுட்டமீன் உள்ளிட்ட அமினோ அமிலங்கள் அவற்றின் வாய்ப்பாட்டில் கார்பாக்சமைடு குழுவைப் பெற்றுள்ளன. கார்பனைல் ஆக்சிசன், -NH2 குழுவின் ஐதரசன் பிணைப்பு உருவாகும் தன்மைக்கேற்பவே கார்பாக்சமைடு குழுவின் பண்புகளும் வினைத்திறனும் தோன்றுகின்றன. மேலும், கார்பாக்சமைடிலுள்ள கார்பன் அணுவானது குறைவாக ஆக்ரமித்துள்ள மூலக்கூற்று சுற்றுப்பாதையைப் பெற்றுள்ளது. அதாவது கார்பன்-ஆக்சிசன் பிணைப்பு வலிமையை பலவீனப்படுத்தும் நைட்ரசன் அணுவின் மீதுள்ள பிணைப்பில் ஈடுபடாத தனி இணை எலக்ட்ரான் அடர்த்தியை ஏற்றுக்கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது என்றும் கூறலாம்.
எளிய கார்பாக்சமைடுகள்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Chapter 21: Amides and Imides". Nomenclature of Organic Compounds. Vol. Volume 126. pp. 166–173. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/ba-1974-0126.ch021. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780841201910.
{{cite book}}
:|volume=
has extra text (help);|work=
ignored (help)