அசிட்டமைடு

வேதியியல் கலவை

அசிட்டமைடு அல்லது அசெட்டமைடு (Acetamide, ஐயூபிஏசி: எத்தனமைடு, ethanamide) என்பது CH3CONH2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது அசிட்டிக் காடியில் இருந்து பெறப்பட்ட ஓர் எளிய அமைடு ஆகும். அசிட்டமைடு தொழிற் துறையில் கரைப்பானாகவும் நெகிழியாக்கியாகவும் செயல்படுகிறது.[2] இதனுடன் தொடர்புள்ள N,N இருமீத்தைல் அசிட்டமைடு (DMA) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது அசிட்டமைடில் இருந்து தயாரிக்கப்படுவதில்லை.

அசிட்டமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
அசிட்டமைடு
எத்தனமைடு
வேறு பெயர்கள்
அசிட்டிக் அமிலமைடு
இனங்காட்டிகள்
60-35-5 Y
ChEBI CHEBI:27856 Y
ChEMBL ChEMBL16081 Y
ChemSpider 173 Y
DrugBank DB02736 Y
EC number 200-473-5
InChI
  • InChI=1S/C2H5NO/c1-2(3)4/h1H3,(H2,3,4) Y
    Key: DLFVBJFMPXGRIB-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2H5NH2/c1-2(3)4/h1H3,(H2,3,4)
    Key: DLFVBJFMPXGRIB-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C06244 Y
பப்கெம் 178
வே.ந.வி.ப எண் AB4025000
  • O=C(N)C
UNII 8XOE1JSO29 Y
பண்புகள்
C2H5NO
வாய்ப்பாட்டு எடை 59.07 g·mol−1
தோற்றம் colorless, நீர் உறிஞ்சும் திறன்
மணம் odorless
mouse-like with impurities
அடர்த்தி 1.159 g/cm³
உருகுநிலை 79 °C (174 °F; 352 K)
கொதிநிலை 221.2 °C (430.2 °F; 494.3 K)
2000 g L-1[1]
கரைதிறன் எத்தனால் 500 g L-1[1]
பிரிடின் 166.67 g L-1[1]
soluble in குளோரோஃபார்ம், கிளிசரால், பென்சீன்[1]
மட. P -1.26
ஆவியமுக்கம் 1.3 Pa
காடித்தன்மை எண் (pKa) 16.5
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4274
பிசுக்குமை 2.052 cP (91 °C)
கட்டமைப்பு
படிக அமைப்பு trigonal
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு Harmful (Xn)
புற்று. அட். 3
R-சொற்றொடர்கள் R40
S-சொற்றொடர்கள் (S2) S36/37
தீப்பற்றும் வெப்பநிலை 126 °C (259 °F; 399 K)
Lethal dose or concentration (LD, LC):
700 mg/kg (rat, oral)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

ஆய்வகத் தயாரிப்பு

தொகு

அம்மோனியம் அசிட்டேட்டை வெப்பப்படுத்தி நீர் அகற்றுவதன் மூலமாக அசிட்டமைடு சேர்மத்தை தயாரிக்கலாம்.[3]

CH3COONH4 → CH3C(O)NH2 + H2O

அசிட்டைல் அசிட்டோனை அமைனாக்கலின் போதுள்ள நிபந்தனைகளின்படி அம்மோனியாவாக்கல் வினைக்குட்படுத்தினால் அசிட்டமைடை அதிக அளவில் ஆய்வகத்தில் தயாரிக்கலாம்[4].

தொழிற்துறை தயாரிப்பு

தொகு

சில ஆய்வக முறைகளில் தயாரிக்கப்பட்டது போலவே அம்மோனியம் அசிட்டேட்டை நீர்நீக்கம் செய்து அல்லது அசிட்டோநைட்ரைலை நீராற்பகுத்து பெருமளவில் அசிட்டமைடு தயாரிக்கப்படுகிறது. அசிட்டோ நைட்ரைல், அக்ரைலோ நைட்ரைல் தயாரிக்கும் போது கிடைக்கும் உடன் விளை பொருளாகும் [2]

CH3CN + H2O → CH3C(O)NH2

பயன்

தொகு

தையோ அசிட்டமைடு தயாரிப்புக்கு ஒரு முன்னோடியாக அசிட்டமைடு இருக்கிறது.

தோற்றம்

தொகு

பால் வெளி விண்மீன் திறள் [5] மையத்திற்கு அருகே அசிட்டமைடு நிறைந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், புரதங்களில் காணப்படும் அமினோ அமிலங்களில் உள்ள அத்தியாவசியமான பிணைப்பைப் போல்வே அசிட்டமைடிலுள்ள அமைடு பிணைப்புகளும் காணப்படுகின்றன. உயிர் வாழ்வதற்கு கரிம மூலக்கூறுகளே அடிப்படையாகின்றன என்ற கோட்பாடு பூமியில் நாம் அறிந்திருக்கிறோம். பால்வெளியில் கரிம மூலக்கூறான அசிட்டமைடின் கண்டுபிடிப்பு அங்கும் வாழும் சூழலை ஏற்படுத்தலாம் என்ற கருத்துக்கு நம்பிக்கையை வழங்கியிருக்கிறது.

எப்போதாவது பற்றி எரியும் நிலக்கரி கழிவுகளில் அசிட்டமைடு இதே பெயரில் தாதுவாக காணப்படுவது கூடுதல் ஆதாரமாகும்.[6][7]

 
அசிட்டமைடின் படிக அமைப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 The Merck Index, 14th Edition, 36
  2. 2.0 2.1 Cheung, H.; Tanke, R. S.; Torrence, G. P. (2005), "Acetic Acid", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a01_045.pub2{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Coleman, G. H.; Alvarado, A. M. (1923). "Acetamide". Organic Syntheses 3: 3. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0003. ; Collective Volume, vol. 1, p. 3
  4. Schwoegler, Edward J.; Adkins, Homer (1939). "Preparation of Certain Amines". Journal of the American Chemical Society 61 (12): 3499-3502. doi:10.1021/ja01267a081. 
  5. Hollis, J. M.; Lovas, F. J.; Remijan, A. J.; Jewell, P. R.; Ilyushin, V. V.; Kleiner, I. (2006). "Detection of Acetamide (CH3CONH2): The Largest Interstellar Molecule with a Peptide Bond" (pdf). The Astrophysical Journal 643 (1): L25–L28. doi:10.1086/505110. Bibcode: 2006ApJ...643L..25H. http://iopscience.iop.org/1538-4357/643/1/L25/pdf/1538-4357_643_1_L25.pdf. 
  6. "Acetamide". Mindat.org.
  7. "Acetamide" (pdf). Handbook of Mineralogy. RRUFF Project.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டமைடு&oldid=2213551" இலிருந்து மீள்விக்கப்பட்டது