கார்பாக்சிபென்சைல்

வேதி வினைக்குழு

கார்பாக்சிபென்சைல் (Carboxybenzyl) என்பது ஒரு கார்பமேட்டு வகைச் சேர்மமாகும். லியோனிதாசு செர்வாசு இதைக் கண்டுபிடித்தார் [1]. கரிமத் தொகுப்பு வினைகளில் அமீன் பாதுகாப்புக் குழுவாக கார்பாக்சிபென்சைல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக பெப்டைடு தொகுப்பு வினையில் இது பயன்படுத்தப்படுகிறது [2]. வலிமையற்ற காரத்தின் முன்னிலையில் பென்சைல் குளோரோபார்மேட்டுடன் அமீன் செயல்கூறு வினைபுரிவதால் கார்பாக்சிபென்சைல் பாதுகாப்புக்குழு அறிமுகப்படுத்தப்படுகிறது.

பென்சைல் குளோரோபார்மேட்டு 1 அமினோ அமிலம் 2 உடன் வினைபுரிந்து கார்பாக்சிபென்சைலால் –பாதுகாக்கப்பட்ட அமினோ அமிலம் 3 சேர்மத்தைக் கொடுக்கிறது.

ஐசோசயனேட்டுடன் பென்சைல் ஆல்ககாலை கர்டியசு மறுசீராக்கல் வினைக்கு உட்படுத்தி மாற்று வழிமுறையில் கார்பாக்சிபென்சைல் பாதுகாப்பு அமீன்கள் உருவாக்கப்படுகின்றன.

மின்னணுகவரிகளிடமிருந்து அமீன்களைப் பாதுகாக்க இது பயன்படுத்தப்படுகிறது. வினையூக்க ஐதரசனேற்றம் அல்லது ஐதரசன்புரோமைடுடன் சேர்த்து சூடுபடுத்தினால் பாதுகாக்கப்பட்ட அமீனை பாதுகாப்பு நீக்கம் செய்ய இயலும். இவ்வினையில் முதலில் விளிம்புநிலை கார்பமிக் அமிலம் உற்பத்தியாகி உடனடியாக கார்பாக்சிலேட்டு நீக்கம் நிகழ்ந்து அமீன் தனித்து விடப்படுகிறது.

மேக்சு பெர்க்மானும் கியோனிதாசு செர்வாசும் 1932 ஆம் ஆண்டில் பெப்டைடு தொகுப்பு வினைக்காக இம்முறையை பயன்படுத்தினார்கள் [3]. செர்வாசை நினைவுகூறும் விதமாக இவ்வினையைச் சுருக்கமாக இசட் என்ற ஆங்கில எழுத்தால் அடையாளப்படுத்துகிறார்கள்.

அமீன் பாதுகாப்பு

தொகு
 
ஓர் அமீனை கார்பாக்சிபென்சைல் குழு பாதுகாக்கிறது.

கார்பாக்சிபென்சைல் குழு பொதுவாக கரிமத்தொகுப்பு வினைகளில் அமீன்களைப் பாதுகாக்கும் குழுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவான அமீன் பாதுகாப்பு முறைகள்

தொகு
  • பென்சைல் குளோரோபார்மேட்டும் தண்ணீரில் உள்ள சோடியம் கார்பனேட்டு போன்ற ஒரு காரமும் 0 °செல்சியசில்[3]

°செல்சியசில் மீள்வினை[4]

பாதுகாப்பு நீக்கம்

தொகு

பல்வேறு பலேடியம் அடிப்படையிலான வினையூக்கிகளின் முன்னிலையில் ஐதரசனாற்பகுப்பு வினைக்கு உட்படுத்துவது வழக்கமான பாதுகாப்பு நீக்க செயல்முறையாகும். மரக்கரியில் இடப்பட்ட பலேடியத்தை குறிப்பாகக் கூறலாம்[6]

 

மாறாக வலிமையான இலூயிசு அமிலங்கள் பயன்படுத்தப்படுகிறது. வெளியாகும் பென்சைல் கார்போ நேர்மின் அயனியைப் பிடிக்க ஒரு வழியும் கிடைக்கிறது[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Jakubke, Hans-Dieter; Sewald, Norbert (2008). Peptides from A to Z: A Concise Encyclopedia. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-62117-0.
  2. வார்ப்புரு:Clayden
  3. 3.0 3.1 Max Bergmann; Leonidas Zervas (1932). "Über ein allgemeines Verfahren der Peptid-Synthese". Berichte der deutschen chemischen Gesellschaft 65 (7): 1192–1201. doi:10.1002/cber.19320650722. 
  4. Dymicky, M. (1989-02-01). "Preparation of Carbobenzoxy-L-Tyrosine Methyl and Ethyl Esters and of the Corresponding Carbobenzoxy Hydrazides". Organic Preparations and Procedures International 21 (1): 83–90. doi:10.1080/00304948909356350. பன்னாட்டுத் தர தொடர் எண்:0030-4948. 
  5. Aggarwal, Varinder K.; Humphries, Paul S.; Fenwick, Ashley (1999). "A Formal Asymmetric Synthesis of Anatoxin-a Using an Enantioselective Deprotonation Strategy on an Eight-Membered Ring". Angewandte Chemie International Edition 38 (13–14): 1985–1986. doi:10.1002/(SICI)1521-3773(19990712)38:13/14<1985::AID-ANIE1985>3.0.CO;2-7. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/(SICI)1521-3773(19990712)38:13/14%3C1985::AID-ANIE1985%3E3.0.CO;2-7/abstract. 
  6. Felpin, François-Xavier; Fouquet, Eric (2010-11-02). "A Useful, Reliable and Safer Protocol for Hydrogenation and the Hydrogenolysis of O-Benzyl Groups: The In Situ Preparation of an Active Pd0/C Catalyst with Well-Defined Properties" (in en). Chemistry – A European Journal 16 (41): 12440–12445. doi:10.1002/chem.201001377. பன்னாட்டுத் தர தொடர் எண்:1521-3765. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/chem.201001377/abstract. 
  7. Theodora W. Greene, Peter G. M. Wuts (1999). Protecting Groups in Organic Synthesis (3 ed.). J. Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-16019-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பாக்சிபென்சைல்&oldid=3825972" இலிருந்து மீள்விக்கப்பட்டது