கார்போவைதரேட் அசிட்டைலேற்ற வினை
கரிம வேதியியலில் கார்போவைதரேட் அசிட்டைலேற்றம் (carbohydrate acetalisation) என்பது பாதுகாப்புக் குழு ஒன்றை வழங்கக்கூடிய மிகவும் மதிப்பு மிக்க ஓர் கரிம வேதி வினையாகும். உதாரணமாக இங்கு தரப்பட்டுள்ள அசிட்டைலேற்ற வினையில் அரபுச் சக்கரை என்றழைக்கப்படும் டி-ரைபோசு 1 அசிட்டைலேற்றியான அசிட்டோன் அல்லது 2,2-இருமீத்தாக்சிபுரோப்பேன் முன்னிலையில் வெப்பவியக்க ஆற்றல் கட்டுப்பாட்டு வினையின் விளைவாக பெந்தோசு 2 ஐக் கொடுக்கிறது. இரண்டாவதாகக் கூறப்பட்டுள்ள அசிட்டைலேற்றி 2,2 இருமீத்தாக்சிபுரோப்பேன் தானே ஒரு அசிட்டால் என்பதால் உண்மையில் இவ்வினை ஒரு குறுக்கு அசிட்டைலேற்ற வினையாகும்.
2- மீத்தாக்சிபுரோபேன் அசிட்டைலேற்றியாக செயல்படுவதால் இயக்க ஆற்றல் வினையைக் கட்டுப்படுத்துகிறது. டி-ரைபோசு தானே ஒரு எமிஅசிட்டால் என்பதால் பைரனோசு 3 உடன் சமநிலை கொள்கிறது. நீர்த்த கரைசலில் ரைபோசு 75 சதவீதம் பைரனோசும் 25 சதவீதம் பீயூரனோசும் மற்றும் வேறுபட்ட அசிட்டால் 4 உம் உருவாகின்றன.
மேற்கோள்கள்
தொகு- Preparative Carbohydrate Chemistry Calinaud, P.; Gelas, J. in . Hanessian, S. Ed. Marcel Dekker, Inc.: New York, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-9802-3