கார்ல் பிரீட்ரிக் நோர்
கார்ல் கிறித்தோபொரோவிச் பிரீட்ரிக் நோர் (Karl Khristoforovich Friedrich Knorre); உருசியம்: Карл Христофорович Кнорре (28 மார்ச்சு 1801 – 29 ஆகத்து 1883) பால்டிக் செருமானிய இனக்குழு சார்ந்த உருசிய வானியலாலர் ஆவார். இவர் நிகோலயேவ் வான்கானத்தை 1821 இல் நிறுவிப் பெயர்பெற்றவர்.[1] இவரது தந்தை, எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் அவர்களும் இவர் மகன், விக்தர் நோர் அவர்களும் பெயர்பெற்ற வானியலாளர்கள் ஆவர். அண்மையில் நாசா நிறுவனம் இம்மூன்று தலைமுறை நோர் வானியலாலர்களின் நினைவாக ஒரு குறுங்கோளுக்குப் பெயரிட்டுள்ளது.[2]
கார்ல் பிரீட்ரிக் நோர் | |
---|---|
பிறப்பு | கார்ல் பிரீட்ரிக் நோர் 28 மார்ச்சு 1801 தோர்பாத், உருசியப் பேரரசு |
இறப்பு | வார்ப்புரு:இரப்பும் அகவையும் பெர்லின், செருமானியப் பேரரசு |
படித்த கல்வி நிறுவனங்கள் | தோர்பாத் பல்கலிக்கழகம் |
அமைப்பு(கள்) | அரசு வானியல் கழகம் |
அறியப்படுவது | நிகோலயேவ் வான்கானகம் நிறுவல் |
பெற்றோர் | எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் |
பிள்ளைகள் | விக்தர் நோர் |
வாழ்வும் பணியும்
தொகுநோர் இன்றைய எசுதோனியாவைச் சேர்ந்த, அன்று உருசியப் பேரரசில் இருந்த தார்பாத்தில் பிறந்தார். இவரது தந்தையார் எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் எனும் செருமனியில் பிறந்த வானியலாளர் ஆவார். இவரது மனைவி சென்ஃப் என்கிற சோப்ஃபி ஆவார். இவரது தந்தையார் 1801 இல் இவர் ஒன்பதாம் அகவை அடையும்போதே இறந்தாலும், தந்தையாரின் வாழ்க்கை தாஒபாத் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகவும் தார்பாத் வான்காணக நோக்கீட்டாளராகவும் அமைந்தமை இவரைப் பெரிதும் கவர்ந்ததால் கணிதத்திலும் அறிவியலிலும் கல்வி கறக சேர்ந்துள்ளார். ஏழ்மை வாய்ந்த தன் தாய் இவரது கல்விக்கான செலவை ஈடுசெய்ய இவர் பள்ளி மாணவருக்கும் பெரியவர்களுக்கும்கூட இலத்தீன் மொழியைக் கற்பித்துள்ளார்.[3]
தார்பாத் பல்கலைக்கழகத்தில் ஓவியத் துறையில் இருந்த இவரது தாய்மாமன் கார்ல் ஆகத்து சென்ஃப் அவர்களது வீட்டில் தாயுடன் வாழும்போது தன் 15 ஆம் அகவையில் அதே பல்கலைக்கழகத்தில் கல்விகற்க சேர்ந்துள்ளார். இவர் தன் தந்தையைப் போலவே வானியலாளராக விரும்பினார். அவர் தொட்டு முடிக்காமல் சென்ற பணிகளை முழுமைப்படுத எண்ணினார், ஆனால் இவரது மாமா இவரை சமயக் கல்வியில் ச்செர்த்தால் வாழ்க்கை வளமுறும் எனக் கருதியுள்ளார். எனவே இவரை இறையியலை எடுத்துப் படிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இவர் அதை ஏற்று இறையியலில் கல்வி கற்கும்போதும் தனியாக பல வானியல் விரிவுரைகளைக் கேட்டும் படித்தும் வானியலில் ஆர்வம் குன்றாமல் விளங்கினார்.[4][5]
இவர் வான்காணகத்தின் புதிய தலைவராக விளங்கிய வில்கெல்ம் சுத்ரூவ அவர்களிடம் உதவியாளராகப் பணிபுரிய தன்னை ஒப்படைத்தார். சுத்ரூவ்வின் வழிகாட்டுதலின்கீழ், புவிப்புற அளவையியலில் திறம்பட்ட வல்லுனர் ஆனார். பத்தொன்பது அகவையில் இவரது திறமையைக் கண்டு வியந்த சுத்ரூவ இவரை கருங்கடலில் நிகோலயேவில் ஒரு வான்காணகம் நிறுவ, மதிநுட்பம் வாய்ந்த ஓர் இளம்வானியலாளரைத் தேடிக்கொண்டிருந்த அலெக்சேய் கிரெய்குவிடம் பரிந்துரைத்தார்."[6]
வான்காணகத்துக்கான கருவிகளைத் தேர்வது நோருக்கு ஓர் அறைகூவலாக விளங்கியது. இவர் இதற்காக ஐரோப்பாவில் உள்ள வான்காணகங்களைப் பார்வையிட அலெக்சேய் கிரெய்கிடம் ஒப்புதல் கேட்டார். அவரும் இணங்கவே இவர் குதிரை வண்டியில் இரண்டாண்டுகள் ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்டார். செருமனியில் இவர் பிரீட்ர்க் பெசல், யோகான் பிரான்சு என்கே, ஈன்ரிச் கிறித்தியான் சுமாக்கர் ஆகிய வானியலாளர்களையும் பாரீசில் பிரான்கோயிசு அராகோ அவர்களையும் சந்தித்தார். பின்னர் அங்கிருந்து கிரீன்விச்சுக்கும் டர்பிலினுக்கும் சென்று காலவரைவியல் கருவிக் குழுமங்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். பயணத்தில் இருந்து திரும்பிய இவர் தன் மனப்பதிவுகளை அலெக்சேய் கிரெய்கிடம் பகிர்ந்துள்ளார். பிறகு வான்காணகத்துக்குத் தேவையான கருவிகளைக் கொள்முதல் செய்துள்ளார். இக்கருவிகளில் இதள் செயற்கைத் தொடுவான் ஆடியும் ஒன்றாகும். அளவைப் பொய்ப்புகளைத் தவிர்க்க முதலில் தொலைநோக்கி வழியாக விண்மீன்களை நேரடியாக நோக்குவதோடு இதல் ஆடி வழியாகவும் மறைமுகமாக நோக்கலாம்.
இவர் அரசு வானியல் கழக உறுப்பினர் ஆவார். இவர் மூன்று மனைவிகளை மணந்தவர். முதல் மனைவி எல்சபெத் (திருமனம்1829) தியெதெரிக் குடும்பத்தினர் ஆவார். இவர் மூன்றே ஆண்டுகளில் இறந்துவிடவே, எலிசபெத்தின் தங்கையான டோரத்தியா வான் தியெதெரிக்கை நோர் 1833 இல் மணந்தார். இவரும் தன் 37 ஆம் அகவையில் 13 குழந்தைகளைப் பெற்ருவிட்டு இறக்கவே, மூன்றாவதாக, எமிலி கேவ் அவர்களை 1852 இல் மண்ந்தார். இவர் நோர் இறக்கையில் உயிருடன் இருந்தார். நோருக்கு 15 பிள்லைகல் உண்டு. இவர்களில் இவரது ஐந்தாம் மகனான விக்தர் நோர் புகழ்பெற்ற வானியலாளர் ஆவார். இவர் வானியல் ஆய்வு செய்ய, 1862 இல் பெர்லினுக்குச் சென்றார். நோர் 1871 இல் நிகோலயேவ் வான்காணகத்தில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றதும் இவர் தன் மகன் விக்தருடன் வாழ பெர்லினுக்குச் சென்றார். அங்கே இவர் 1883 இல் இறந்தார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Homepage of the Nikolaev Astronomical Observatory http://www.nao.nikolaev.ua/index.php?catalog_id=368
- ↑ "Asteroid named after the three generations of Knorre Astronomers". California Institute of Technology: Jet Propulsion Laboratory.
- ↑ "Associate Deceased, Obituary". Monthly Notices of the Royal Astronomical Society 49: 169–71. 1889. doi:10.1093/mnras/49.4.169a. Bibcode: 1889MNRAS..49S.169..
- ↑ Poggendorff, J.C. (1898). Biographisch-literarisches Handwörterbuch zur Geschichte der exacten Wissenschaften. Vol. 3. pp. 730–731.
- ↑ Encke, J.F. (1826). "Auszug aus einem Schreiben des Herrn Prof. Encke an den Herausgeber" (in German). Astronomische Nachrichten 4: 227. doi:10.1002/asna.18260041503. Bibcode: 1825AN......4..227E.
- ↑ Héral, Susan. "Astronomers and Other Professions in the Knorre Family". The Dynasty of Knorre Astronomers. Nikolaev: Irina Gudym Publishing. பார்க்கப்பட்ட நாள் 9 September 2012.
- ↑ Petrov, G.M.; G.I. Pinigin (2002). "Karl Knorre, the First Astronomer of Nikolaev Observatory on the Occasion of his Bicentenary". Astronomische Nachrichten 323 (6): 559–561. doi:10.1002/1521-3994(200212)323:6<559::AID-ASNA559>3.0.CO;2-3. Bibcode: 2002AN....323..559P.