யோகான் பிரான்சு என்கே

யோகான் பிரான்சு என்கே (Johann Franz Encke, 23 செப்டம்பர் 1791 – 26 ஆகத்து 1865) செருமானிய வானியலாளர் ஆவார். இவரது ஆய்வுகளில் புவிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தொலைவை அளத்தல், சனிக் கோளின் நோக்காய்வுகள், வால்வெள்ளிகள், சிறுகோள்கள் ஆகியவற்றின் வட்டணைச் சுழல்வு நேரங்களைக் கணக்கிடல் ஆகியவை முதன்மையானவை.

யோகான் பிரான்சு என்கே
Johann Franz Encke
பிறப்பு(1791-09-23)23 செப்டம்பர் 1791
ஆம்பர்க், புனித உரோமைப் பேரரசு
இறப்பு26 ஆகத்து 1865(1865-08-26) (அகவை 73)
ஸ்பான்டோ, (இன்றைய பெர்லினில்)
தேசியம்செருமனியர்
துறைவானியல்
பணியிடங்கள்பெர்லின் பகலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கோட்டிஞ்சன் பல்கலைக்கழகம்
கற்கை ஆலோசகர்கள்கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
லெப்பால்டு குரோனெக்கர்
அறியப்படுவது12பி/பொன்சு-புரூக்சு வால்வெள்ளி
விருதுகள்கொட்டா பரிசு (1817)
ராயல் விருது (1928)

வாழ்க்கை

தொகு

என்கே ஃஅம்பர்கில் பிறந்தார். இவரது தந்தை ஜாகோபுகிர்ச்சுவில் எழுத்தராகப் பணிபுரிந்துள்ளார் . இவர் எட்டுபேரில் கடைசியாகப் பிறந்தவர். இவருக்கு அகவை நான்கு ஆகும்போது தந்தை இறந்துவிட்டர். தனாசிரியரின் உதவியால் இவர் கெலெகிரிடென்ழ்சூல் தெசு ஜொகான்னியூம்சு வில் கல்வி பயின்றுள்ளார். இவர் கணிதவியலும், வானியலும் 1811இல் இருந்துகோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் கார்ல் பிரீடுரிக் காசு விடம் பயின்றுள்ளார்; ஆனால் இவர் ஓல்சுட்டின், மெக்லென்பர்கு சார்ந்த பிரசியக் காலாட்படையில் படைமேலராக1813-1814 போருக்காக ஃஆன்சியாட்டிக் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.மீண்டும் 1814இல் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடர்ந்துள்ளார் ஆனால் நெப்போலியன் எல்பாவில் இருந்து தப்பிச் சென்றதும் இவர் மீண்டும் படையில் சேர்ந்து 1815 வரை பணிபுரிந்து படைத்தலைவராகியுள்ளார்.

இவர் 1816இல் கோட்டிங்கனுக்குத் திரும்பியதும், கோத்தா அருகில் இருந்த சீபர்கு வான்காணகத்தில் உடனே பனியில் பெனார்டித் வான் இலிண்டேனௌவால் தன் உதவியாளராக சேர்க்கப்பட்டுள்ளார் (வான் இலிண்டேனௌ இவருக்கு படைப்பணியில் பழக்கமானவர்). இவர் 1680 வால்வெள்ளியைப் பற்றி ஆய்வு செய்தார். இதற்காக 1817இல் இவருக்குக் கோட்ட பரிசு காசு, ஓல்பர்சு ஆஹிய இரு நடுவர்களால் வழங்கப்பட்டது; இவர் 1812இல் தோன்றிய வால்வெள்ளி மீண்டும் 71 ஆண்டுகளில் வரும் எனச் சரியான முன்கணிப்பைச் செய்தார். இந்த வால்வெள்ளி இப்போது 12பி/பொன்சு புரூக்சு என அழைக்கப்படுகிறது.

தகைமைகள்

தொகு
  • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்1824இலும் 1830இலும் இருமுறை பெற்றுள்ளார்.
  • நிலாவின் குழிப்பள்ளம் ஒன்று "என்கே குழிப்பள்ளம்" எனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • 9134என்கே என இவர் பெயரால் சிறுகோள் ஒன்று அழைக்கப்படுகிறது.
  • சனிக்கோளின் வலயங்கள் "என்கே இடைவெளி" என இவர் பெயரால் அழைக்கப்படுகிறது.
  • ஒரு சிறுகோளின் வட்டணை சுழல்நேரத்தைக் கணக்கிட்டதால் அது இவர் பெயரால் வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகான்_பிரான்சு_என்கே&oldid=4022975" இலிருந்து மீள்விக்கப்பட்டது