கார்வி குசராத்து பவன்

தில்லியில் உள்ள குசராத் அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்லமாகும்.

கார்வி குசராத்து பவன் (Garvi Gujarat Bhavan) என்பது இந்தியாவின் தலைநகரமான தில்லியில் உள்ள குசராத் அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்லமாகும். புது தில்லி அக்பர் சாலையில் 7,066 சதுர மீட்டர் நிலப்பரப்பில் இது கட்டப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள பசுமை கட்டடம் சான்றிதழ் பெற்ற முதல் மாநில விருந்தினர் இல்லமாகவும் இது உள்ளது.[1]

கார்வி குசராத்து பவன்
Garvi Gujarat Bhavan
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிMāru-Gurjara
முகவரி25/A, அக்பர் சாலை,
புது தில்லி, தில்லி, இந்தியா
ஆள்கூற்று28°36′29″N 77°13′22″E / 28.608069°N 77.222688°E / 28.608069; 77.222688
துவக்கம்2 செப்டம்பர் 2019
செலவு126.82 கோடி (US$16 மில்லியன்)
உரிமையாளர்குசராத்து
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு7,066 சதுர மீட்டர் (தோராயமாக)
வடிவமைப்பும் கட்டுமானமும்
முதன்மை ஒப்பந்தகாரர்தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனம்

கட்டடம்.

தொகு

தவுல்பூர் மற்றும் ஆக்ரா கற்களைப் பயன்படுத்தி கார்வி குசராத்து பவன் கட்டப்பட்டுள்ளது.[2] இந்த புதிய கட்டிடம் 7,066 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது மேலும் இந்த வளாகத்தின் மொத்த செலவு ரூ 131 கோடியாகும். [3] குசராத்து பவனில் சுமார் 78 வெவ்வேறு கருப்பொருள்களுடன் விருந்தினர் அறைகள் உள்ளன. அவை ஏழு மாடிகளில் விநியோகிக்கப்படுகின்றன, இதில் 2 குடியரசுத்தலைவர் அறைகள், 17 முக்கிய விருந்தினர்கள் அறைகள் மற்றும் 59 விருந்தினர் அறைகள் உள்ளன.[4]

இந்த புதிய கார்வி குசராத்து பவனில் பின்வரும் வசதிகள் உள்ளன.[5][6]

  • 19 அடுக்கு அறைகள்
  • 59 அறைகள்
  • உணவகம்
  • பொது உணவு விடுதி
  • வணிக மையம்
  • நினைவு பரிசு கடை
  • பல்நோக்கு மண்டபம்
  • மாநாட்டு அறை
  • நான்கு ஓய்வறைகள்
  • உடற்பயிற்சிக் கூடம்
  • யோகா மையம்
  • மாடி தோட்டம்
  • நூலகம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "PM Modi Reminisces Old Times At Inauguration Of "Garvi Gujarat Bhawan"". 3 September 2019. https://www.ndtv.com/delhi-news/pm-modi-reminisces-old-times-at-inauguration-of-garvi-gujarat-bhawan-in-delhi-2094688. 
  2. "PM Narendra Modi to inaugurate Garvi Gujarat Bhavan in Delhi on September 2". DeshGujarat (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-08-21. பார்க்கப்பட்ட நாள் 2019-09-09.
  3. "Experience Gujarat at this bhavan". Ahmedabad Mirror (in ஆங்கிலம்). 3 September 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-09-09.
  4. "Interesting facts about Garvi Gujarat Bhavan that is opening its gates to Gujaratis in Delhi". Creative Yatra (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-09.
  5. Taneja, Nidhi (2019-09-02). "PM Modi inaugurates 'Garvi Gujarat Bhavan' at Akbar Road, says 'structure built before time'". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-09.Taneja, Nidhi (2 September 2019). "PM Modi inaugurates 'Garvi Gujarat Bhavan' at Akbar Road, says 'structure built before time'". www.indiatvnews.com. Retrieved 9 September 2019.
  6. "PM Modi to inaugurate new Gujarat Bhavan in Delhi today | DD News". www.ddinews.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-09-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்வி_குசராத்து_பவன்&oldid=4138939" இலிருந்து மீள்விக்கப்பட்டது