கார ஈய பாசுப்பைட்டு
பாசுபைட்டு எதிர்மின் அயனினைக் கொண்டுள்ளது
கார ஈய பாசுப்பைட்டு (Basic lead phosphite) என்பது Pb3O(OH)2(HPO3).[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இந்தச் சேர்மம் பாசுபைட்டு எதிர்மின் அயனினைக் கொண்டுள்ளது, இவ்வயனிகள் சேர்மத்துடன் தொடர்புடைய ஒடுக்கும் பண்புகளை இச்சேர்மத்திற்கு வழங்குகின்றன.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கார ஈய பாசுப்போனைட்டு
| |
இனங்காட்டிகள் | |
1344-40-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 71300865 |
| |
பண்புகள் | |
H3O6PPb3 | |
வாய்ப்பாட்டு எடை | 751.59 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H228, H350, H360, H370, H372 | |
P201, P202, P210, P240, P241, P260, P264, P270, P280, P281, P307+311, P308+313, P314, P321 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குளோரின் கொண்ட பலபடிகள், குறிப்பாக பாலிவினைல் குளோரைடு சேர்மத்தில் ஒரு நிலைப்படுத்தியாக கார ஈய பாசுப்பைட்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது [2]. சாதாரண ஈய பாசுப்பைட்டு ( PbHPO3 ) உள்ளிட்ட மற்ற ஈய பாசுபைட்டுகளும் அறியப்படுகின்றன [3]. இருப்பினும் கார உப்பு குறிப்பாக அதிக வினைப்பயனுள்ளதாக இருக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Richard F. Grossman; Dale Krausnick (1998). "The structure of lead stabilizers. 2: Basic salts of inorganic acids". Vinyl and Additive Technology 4: 179–181. doi:10.1002/vnl.10038.
- ↑ Betterman, G.; Krause, W.; Riess, G.; Hofmann, T. “Phosphorus Compounds, Inorganic” Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a19_527 10.1002/14356007.a19_527.
- ↑ Song, Jun-Ling; Hu, Chun-Li; Xu, Xiang; Kong, Fang; Mao, Jiang-Gao (2015). "Synthesis, crystal structures and properties of lead phosphite compounds". Journal of Solid State Chemistry 231: 198-203. doi:10.1016/j.jssc.2015.08.031.