காற்றுத் தரச் சுட்டெண்

காற்றுத் தரச் சுட்டெண் (ஆங்கிலத்தில்: AIR QUALITY INDEX (AQI)) என்பது மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் சுவாசிக்கத் தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதன் அளவீடு ஆகும். காற்றுத் தரம் குறை அடையும் போது பல்வேறு மோசமான உடல் நலக் கேடுகள் விளையும். காற்றுத் தரச் சுட்டெண் அல்லது காற்று மாசுச் சுட்டெண் அல்லது மாசுத் தரச் சுட்டெண் ஆகியன அரச திணைக்களங்களால் ஒரு இடத்தில் காற்றின் தரத்தை மதிப்பிட்டு வெளியிடப்படும் அளவீடுகள் ஆகும். அவற்றுள் சில, கனடாவில் காற்றுத் தர உடல்நல குறியீடு(Air Quality Health Index), மலேசியாவில் காற்று மாசுபாடு குறியீடு (Air Pollution Index) மற்றும் சிங்கப்பூரில் மாசுபடுத்தி நியமங்கள் குறியீட்டெண் (Pollutant Standards Index)[1] எனக் குறிப்பிடப்படுகிறது.

கிரிசின் பகுதிகளில் அதிகரிக்கப்பட்ட காற்றுத் தரச் சுட்டெண்னை காட்டுத்தீ ஏற்படுத்துகிறது
சீனாவின் பீஜிங் நகரில் காற்று மாசு தடுப்பானாக முகமூடி அணிந்து செல்லும் பெண்

இந்தியா

தொகு

17 செப்டம்பர் 2014ல், சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை அமைச்சர், பிரகாஷ் ஜாவேத்கர் புதுதில்லியில் காற்றுத் தர குறியீட்டு எண்ணை(AQI) அறிமுகம் செய்துவைத்தார். அனைத்து குடிமகன்களும் தங்கள் சுற்றுப்புற காற்றின் தரத்தினை எளிதில் அறியும் வண்ணம் 'ஒரே எண் - ஒரே நிறம் - ஒரே விளக்கம்' என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த குறியீட்டு எண் திட்டமானது அரசாங்கத்தின் தூய்மை கலாச்சார எண்ணத்தினை பிரதிபலிக்கிறது.[2]

தேசிய காற்று கண்காணிப்பு திட்டத்தினை (National Air Monitoring Program (NAMP)) நாடு முழுவதும் 240 நகரங்களில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து மேற்கொள்கிறது. சில நகரங்களில் நிகழ்நேர தகவுகளை தரும் வண்ணம் தொடர்ச்சியாக கண்காணிக்கும் அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

2014ல் கான்பூர் ஐஐடி, நிபுணர் குழுவுடன் இணைந்து காற்றுத் தரச் சுட்டெண் திட்டத்தினை அரசுக்கு பரிந்துரை செய்தது.[3]

தேசிய சுற்றுப்புற காற்றுக் தர நிர்ணயமானது எட்டு காற்று மாசுபடுத்திகளான (PM10, PM2.5, NO2, SO2, CO, O3, NH3, மற்றும் Pb) போன்றவற்றின் 24 மணிநேர சராசரி கால அளவினை வைத்து பின்வரும் ஆறு பகுப்புகளாக பிரிக்கப்படுகிறது. அவை, நல்ல, திருப்திகரமான, மிதமான மாசுபாடு, மோசமான, மிகமோசமான, கடுமையான போன்றவை ஆகும்.[4]

கா.த.சு பகுப்பு, மாசுபாடுகள் மற்றும் சுகாதாரப் புள்ளிகள்
AQI பகுப்பு (விகிதாச்சாரம்) PM10 (24hr) PM2.5 (24hr) NO2 (24hr) O3 (8hr) CO (8hr) SO2 (24hr) NH3 (24hr) Pb (24hr)
நல்லது (0-50) 0-50 0-30 0-40 0-50 0-1.0 0-40 0-200 0-0.5
திருப்திகரமான (51-100) 51-100 31-60 41-80 51-100 1.1-2.0 41-80 201-400 0.5-1.0
மிதமான மாசுபாடு(101-200) 101-250 61-90 81-180 101-168 2.1-10 81-380 401-800 1.1-2.0
மோசம் (201-300) 251-350 91-120 181-280 169-208 10-17 381-800 801-1200 2.1-3.0
மிக மோசம் (301-400) 351-430 121-250 281-400 209-748 17-34 801-1600 1200-1800 3.1-3.5
கடுமையான (401-500) 430+ 250+ 400+ 748+ 34+ 1600+ 1800+ 3.5+
AQI உடல்நல பாதிப்புகள்
நல்ல (0-50) குறைந்த பாதிப்பு
திருப்திகரமான (51-100) எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய நபர்களுக்கு மூச்சுக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு.
மிதமான மாசு (101–200) நுரையீரல் நோய் (ஆஸ்துமா), இருதய நோய் கொண்டவர்களுக்கும், மேலும் சிறார் மற்றும் முதியோர்களுக்கும் மூச்சு விடுவதில் கோளாறு ஏற்படுத்தும்.
மோசம் (201-300) மாசுக்காற்றினை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு மூச்சு கோளாறும், ஏற்கனவே இருதய நோய் உடையோருக்கு அதிக கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
மிக மோசம் (301-400) மாசுக்காற்றினை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும், மேலும் இருதய, நுரையீரல் நோய் உடையவர்களுக்கு மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கடுமையான (401-500) நல்ல உடல்நலத்துடன் இருக்கும் நபர்களுக்கு மூச்சு சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்புண்டு, மேலும் நுரையீரல்/இருதய நோய் உடையோர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

சான்றுகள்

தொகு
  1. "PSI". பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 14, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Rama Lakshmi (17 October 2014). "India launches its own Air Quality Index. Can its numbers be trusted?". Washington Post. பார்க்கப்பட்ட நாள் 20 August 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-07. பார்க்கப்பட்ட நாள் 2015-09-14.
  4. "::: Central Pollution Control Board :::". பார்க்கப்பட்ட நாள் 20 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றுத்_தரச்_சுட்டெண்&oldid=3549492" இலிருந்து மீள்விக்கப்பட்டது