காலா நமக் (நெல்)

காலா நமக் அல்லது காளாநமக் (Kalanamak) என்னும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[1] இந்தியாவின் சிறந்த மற்றும் நறுமணம் மிகுந்த நெல் வகையான இது, புத்தக் காலமான கி. மு 6 ஆம் நூற்றாண்டு (600 BC) முதலே சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளதாக கருதப்படுகிறது. கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் இமாலய பகுதியில் உள்ள தெராய் நிலப்பரப்பில் பிரதானமாக விளைவிக்கப்பட்ட இந்நெல் இரகம், 1998 - 1999 ஆண்டுகளில் ஏற்பட்ட இதன் பூங்கொத்து வெடிப்பும், மற்றும் சில தொற்றுநோய்கள் காரணமாகவும், இந்த நெல் சாகுபடி, படிப்படியாக குறைந்து அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.[2]

காலா நமக்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
கி. மு 600 ஆண்டு முந்தையது
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா
காலா நமக் நெல் தானியங்கள்
காலா நமக் அரிசி தானியங்கள்

பெயர் மரபு

தொகு

இந்திய வடமொழியில் பெயரைக் கொண்டுள்ள இந்த காலா நமக் நெல், ‘காலா’ → “கருப்பு”, ‘நமக்’ → “உப்பு” (Black salt) கருப்பு நிற மேலுறையோடு (உமி) காணப்படுவதாலும், அல்லது, அமில நிலை 9.0 - 9.5 என்ற அளவிலுள்ள உவர் (உப்பு (களர்) நிலங்களில் செழித்து வளர்வதாலும் இப்பெயர் பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது.[3]

மருத்துவ குணம்

தொகு

மனிதனின் முக்குணங்களில் முதன்மையான குணமான சாத்விக குணத்தை தரவல்ல காலா நமக், சிறுநீரகம், இரத்தப் புற்று நோய், மூளை, மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களையும் எதிர்க்கும் திறனுடையதாக கருதப்படுகிறது. மேலும், இவ்வரிசிச் சோறு தொடர்ந்து உண்பதன் மூலம், நீரிழிவு மற்றும் குருதி அழுத்தம் (BP) போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தவதாக கூறப்படுகிறது.[4]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. காலா நமக் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Reproduced from Asian Agri-History Vol. 9, No. 3, 2005 (211–219) - Kalanamak". asianagrihistory.org (ஆங்கிலம்) - 2015. Archived from the original on 2015-04-03. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  3. "Traditional Varieties grown in Tamil nadu - Kalanamak". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-02-28.
  4. "TRADITIONAL RICE - Kala Namak (Crop duration is 120 days)". COPYRIGHT ASWAT ECO ORGANIC (ஆங்கிலம்) - 2013. பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலா_நமக்_(நெல்)&oldid=3856588" இலிருந்து மீள்விக்கப்பட்டது