காலித் அல்-தோசரி


காலித் அல்-தோசரி (பிறப்பு: 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11) ஓர் சவூதி அரேபிய டைக்குவாண்டோ பயிற்சியாளர். இவர் ஆண்கள் +80 கிலோ போட்டி பிரிவில் 2000 கோடைகால ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொண்டார். இவர் முதல் சுற்றில் தென் கொரியாவின் கிம் கியோங்-ஹுனால் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் வெண்கலப் பதக்கப் போட்டியில் பிரான்சின் பாஸ்கல் ஜென்டிலிடம் தோற்றதற்கு முன்பு, நிக்கராகுவாவின் கார்லோஸ் டெல்கடோ மற்றும் கொலம்பியாவின் மில்டன் காஸ்ட்ரோ ஆகியோரை தோற்கடித்தார். ஒலிம்பிக் திறப்பு விழாவில் சவூதி அரேபியாவின் தேசிய கொடி ஏந்தியவராகவும் அல்-தோசரி இருந்தார்.[1]

காலித் அல்-தோசரி
தனிநபர் தகவல்
தேசியம்சவூதி அரேபியா
பிறப்பு11 August 1972 (1972-08-11) (வயது 52)
விளையாட்டு
விளையாட்டுடேக்காண்டோ
பதக்கத் தகவல்கள்

சாதனைகள்

தொகு
ஆண்டு போட்டி இடம் எடை வகுப்பு
2004 ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 3 வது ஹெவிவெயிட் (84 கிலோ)
2002 ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 3 வது ஹெவிவெயிட் (84 கிலோ)
ஆசிய விளையாட்டு 5 வது ஹெவிவெயிட் (84 கிலோ)
2000 கோடை ஒலிம்பிக் 5 வது ஹெவிவெயிட் (80 கிலோ)
1998 ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2 வது ஹெவிவெயிட் (83 கிலோ)
1997 உலக டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 3 வது ஹெவிவெயிட் (83 கிலோ)
1996 ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 3 வது ஹெவிவெயிட் (83 கிலோ)

குறிப்புகள்

தொகு
  1. "காலித் அல்-தோசரி". Sports-Reference.com. Sports Reference LLC. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. பார்க்கப்பட்ட நாள் 2020-10-11.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலித்_அல்-தோசரி&oldid=3731419" இலிருந்து மீள்விக்கப்பட்டது