காலின் மெக்கன்சி

(காலின் மெக்கன்சீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காலின் மெக்கன்சி (Colin Mackenzie, 1754 – 8 மே 1821) ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்காட்லாந்திய இராணுவ அதிகாரி.[1] 1815 ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் முதல் தலைமை மதிப்பீட்டாளர் ஆனார்.

காலின் மெக்கன்சி
காலின் மெக்கன்சி (1816)
பிறப்பு1754
ஸ்டோர்னோவாய்
இறப்பு8 மே 1821
கொல்கத்தா
கல்லறைSouth Park Street Cemetery
படித்த இடங்கள்
  • Dollar Academy
பணிபடைவீரர்

மெக்கன்சி, தொல்பொருள் சேகரிப்பு மற்றும் ஒரு கீழ்த்திசை நாட்டு ஆர்வலர்.[2][3] ஆரம்பத்தில் தனிப்பட்ட ஆர்வத்தாலும் பின்னர் மதிப்பீட்டாளர் பணியின் பொருட்டும் தென்னிந்தியாவின் சமயம், செவிவழி வரலாறு, கல்வெட்டுகள் முதலியவற்றை உள்ளூர் உரைபெயர்ப்பாளர்களையும் அறிஞர்களையும் பயன்படுத்திப் பட்டியலிட்டார். 1799 ஆம் ஆண்டு திப்பு சுல்தானை ஆங்கிலேயர்கள் வென்ற பிறகு மைசூர் வட்டாரத்தை மதிப்பிட பணிக்கப்பட்டார்.

மைசூர் வட்டாரத்தின் நிலப்பரப்பு விளக்கப்படங்கள், குறிப்புகள், தொல்பொருள் சிறப்புமிக்க இடங்கள் முதலியவற்றைக் கொண்ட நில வரைபடங்களை முதன்முதலாக உருவாக்கினார். ஆயிரக்கணக்கான சுவடிகள், கல்வெட்டுகள், மொழிபெயர்ப்புகள், நாணயங்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்ட அவரது திரட்டுகளை இந்திய அரசு நூலகம் அவரது இறப்பிற்குப் பின் கையகப்படுத்தியது. அவரது திரட்டுகள் இந்திய வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள இன்றியமையாத சான்றுகளாகத் திகழ்கின்றன.

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலின்_மெக்கன்சி&oldid=3893922" இலிருந்து மீள்விக்கப்பட்டது