காலிபரே மென்பொருள்

காலிப்ரே (Calibre) என்பது மின்னூல்களை உருவாக்க, நிர்வகிக்க உதவும் ஒரு கட்டற்ற மென்பொருள். இது லினக்சு, மேக், விண்டோசு ஆகிய இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இது மின்னூலகங்களை உருவாக்க உதவுகிறது. மேலும் மின்னூல்களை படிககவும், மாற்றங்கள் செய்யவும், ஒரு மின்னூல் வகையிலிருந்து வேறு வகைக்கு மாற்றவும் உதவுகிறது. கணினியில் உள்ள மின்னூல்களை பல்வேறு மின்னூல் படிக்கும் கருவிகளுக்கு அனுப்பவும் உதவுகிறது. epub, azw3 ஆகிய வகை மின்னூல்களை இதில் இயல்பாகவே மாற்றங்கள் செய்யலாம் பிற வகை மின்னூல்களை முதலில் இவ்வகைகளுக்கு மாற்றி, பிறகு மாறுதல்கள் செய்யலாம்.

காலிப்ரே
வடிவமைப்புகோவிட் கோயல்
தொடக்க வெளியீடு31 அக்டோபர் 2006; 11 ஆண்டுகளுக்கு முன் (2006-10-31)
மொழிபைதான், ஜாவாஸ்கிரிப்டு, சி, சி++
இயக்கு முறைமைலினக்சு, விண்டோசு, மேக் ஓஎஸ்
தளம்IA-32, x64
கோப்பளவு
  • Windows, IA-32: 60.4 MB
  • Windows, x64: 66.0 MB
  • macOS: 75.4 MB
  • Linux, IA-32: 58.9 MB
  • Linux, x64: 59.4 MB[1]
மென்பொருள் வகைமைமின்னூல் படிப்பான், சொற்திருத்தி
உரிமம்GPL v3
இணையத்தளம்calibre-ebook.com

GPL V3 என்ற கட்டற்ற உரிமத்தில் வழங்கப்படுவதால், மூலநிரலுடன், மாற்றங்கள் செய்யும் உரிமையும், யாவருக்கும் பகிரும் உரிமையும் வழங்க்ப்படுகிறது.

வரலாறு

தொகு

31 அக்டோபர் 2006 அன்று, சோனி நிறுவனம் PRS-500 என்ற மின்னூல் படிக்கும் கருவியை வெளியிட்டது. கோவிட் கோயல் என்பவர் லினக்சு இயங்குதளத்தில்  PRS-500 ன் மின்னூல்களைப் படிக்க  libprs500 என்ற மென்பொருளை எழுதினார்.  MobileRead எனும் இணைய உரையாடல் தள உறுப்பினர்களில் உதவியுடன், Broad Band eBook (BBeB) என்ற கோப்பு வகையைக் கையாளும் மென்பொருளையும் எழுதினார். 2008ல், அவரது நிரல் தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, calibre என்ற பெயரில் வெளியிடப்பட்டன.[2]

சிறப்புகள்

தொகு

காலிபரே மென்பொருள் பலவகையான கோப்புகளை ஆதரிக்கிறது. பெரும்பாலான கோப்பு வகைகளில், எழுத்துரு மாற்றுதல், எழுத்துரு அளவு மாற்றுதல், நூல் விவரங்கள் மாற்றம், பொருளடக்கம் சேர்த்தல் போன்ற மாறுதல்கள் செய்யலாம்.  தக்க உரிமம் உள்ள மின்னூல்களை எளிதில் கையாளலாம். ஆனால் எண்முறை உரிமைகள் முகாமைத்துவம் (Digital Rights Management/DRM) கொண்டவற்றை மாற்ற, அதெற்கென உள்ள தனி மென்பொருட்கள் தேவை. [3][4]

இது மின்னூல்களை பல்வேறு வகைகளில் அடுக்கி, வகைப்படுத்த உதவுகிறது. மின்னூல்களின் விவரங்களை ISBNdb.com போன்ற தளத்தில் இருந்து பெறுப்படுகிறது. ஆசிரியர் பெயர், வகை, நூல் பெயர், குறிச்சொற்கள் கொண்டு மின்னூல்களை வகைப்படுத்தலாம்.[5][6]

காலிபரே நூலகத்துக்கு மின்னூல்களை நாமே சேர்க்கலாம் அல்லது மின்னூல் படிப்பான் கருவிகள் மூலம் இணைக்கலாம்.  மேலும் பல்வேறு இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கலாம்.  பல்வேறு வகைக்கோப்புகளை பிற கோப்பு வகைகளுக்கு மாற்ற பைதான் மொழியில் பல்வேறு குறுநிரல்கள் எழுதப்பட்டுள்ளன [7][8][9]

ஒரே பிணையத்தில் இருக்கும் கணிப்பொறிகள், கருவிகள் மூலம், காலிபரேவில் இருக்கும் மின்னூலகத்தை எளிதில் அணுகலாம்.  இதன் மின்னூலகத்தை, இணையத்தில் உள்ள Dropbox, Google Drive, Box.net போன்ற சேவைகளில் சேமிப்பதன் மூலம், எங்கிருந்தும் மின்னூல்களை அணுகலாம். [10][11][12][13][14][சான்று தேவை]

மின்னூல்களை ஒரு வகையிலிருத்து மற்றொரு வகைக்கு மாற்றுதல் மூலம், பல்வேறு கருவிகளில் மின்னூல்களை எளிதில் படிக்கலாம். doc வகைக் கோப்புகளை epub ஆக மாற்றி கைபேசிகளில் எளிதில் படிக்கலாம். mobi வகைக் கோப்புகளாக மாற்றி கிண்டில் கருவிகளில் படிக்கலாம். வரைகலை இடைமுகப்பு மட்டுமின்றி கட்டளை இடைமுகப்பில் இயங்கும் பல்வேறு வசதிகளைத் தருதால், எளிதில் பலநூறு கோப்பு வகைகளையும் பிற வகைகளுக்கு மாற்றிவிட முடியும்.

காலிபரே சார்ந்த கைபேசி செயலிகள்

தொகு
  • Calibre Cloud (free) மற்றும் Calibre Cloud Pro (paid) செயலிகள், Dropbox, Box,  Google Drive folder, போன்றவற்றில் இருக்கும் மின்னூல்களைப் படிக்க உதவுகின்றன [15][16]
  • Calibre Companion (paid) செயலியானது, கணினிகளையும் பல்வேறு  கருவிகளையும் இணைத்து, மின்னூலகத்தை எங்கும் பயன்படுத்த உதவுகிறது.
  • Calibre Library (paid), ஆனது Calibre Cloud போலவே எங்கும் மின்னூல்களை இணையம் மூலம் அணுக உதவுகிறது. .

உசாத்துணைகள்

தொகு
  1. Goyal, Kovid. "calibre release (3.10.0)". calibre-ebook.com. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
  2. "calibre – About". November 2009. பார்க்கப்பட்ட நாள் 2013-07-29.
  3. Sorrel, Charlie. "How To Strip DRM from Kindle E-Books and Others". Wired.com. https://www.wired.com/gadgetlab/2011/01/how-to-strip-drm-from-kindle-e-books-and-others/. 
  4. Zukerman, Erez (December 28, 2012). "How To Break The DRM On Kindle eBooks So You Can Enjoy Them Anywhere". MakeUseOf. http://www.makeuseof.com/tag/how-to-break-the-drm-on-kindle-ebooks-so-you-can-enjoy-them-anywhere/. 
  5. "User named kovidgoyal on fulltext search in TODO list". 2010-08-01. Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 2018-04-29.
  6. "User named Kovid Goyal (kovid) on fulltext search request". 2011-05-23.
  7. "About Calibre".
  8. Hoffmann, Eric. "EBook Software: Calibre".
  9. "Featured Tips n Tricks: How to Use Dropbox to store all your ebooks in the cloud". December 5, 2011. Archived from the original on நவம்பர் 11, 2018. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 29, 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  10. Wallen, Jack (February 28, 2011). "How to Use Calibre to Access Your eBook Collection Online". TechRepublic. http://www.techrepublic.com/blog/linux-and-open-source/how-to-use-calibre-to-access-your-ebook-collection-online/. 
  11. Biba, Paul (February 18, 2010). "How to Create Your Own Cloud of eBooks with Calibre, Dropbox, and Calibre OPDS". TeleRead. http://www.teleread.com/paul-biba/create-your-own-cloud-of-ebooks-with-calibre-dropbox-and-calibre-opds/. 
  12. "Calibre2OPDS".
  13. Slangen, Simon (August 5, 2013). "How To Manage Your Ebook Collection For The Amazon Kindle With Calibre".
  14. Litte, Jane (July 24, 2011). "Create Your Own Cloud of Ebooks with Calibre + Calibre OPDS..." பார்க்கப்பட்ட நாள் July 24, 2011.
  15. "Calibre Cloud". Google, Inc. பார்க்கப்பட்ட நாள் October 23, 2017.
  16. Jermey, John (September 30, 2012). "Calibre Tools For Your Android Device". Teleread இம் மூலத்தில் இருந்து June 18, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130618013355/http://www.teleread.com/android/calibre-tools-for-your-android-device/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலிபரே_மென்பொருள்&oldid=3928836" இலிருந்து மீள்விக்கப்பட்டது