கால்சியம் பென்சோயேட்டு
கால்சியம் பென்சோயேட்டு (Calcium benzoate) என்பது Ca(C7H5O2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். பென்சோயிக் அமிலத்தினுடைய கால்சியம் உப்பான இச்சேர்மம் உணவுத் தொழிற்சாலைகளில் பாதுகாப்புப் பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது. உணவுக் கூட்டுப் பொருளுக்கான இதனுடைய ஐ எண் 213 மற்றும் சர்வதேச திட்ட எண்ணிடலில் இதனுடைய உணவுக் கூட்டுப் பொருளுக்கான எண் ச.தே.தி எண் 213 ஆக குறிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம்[1], ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் கால்சியம் பென்சோயேட்டு ஒரு உணவுக் கூட்டுப்பொருளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது[2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் டைபென்சோயேட்டு
| |
வேறு பெயர்கள்
E213
Benzoic acid, calcium salt | |
இனங்காட்டிகள் | |
2090-05-3 | |
ChemSpider | 56210 |
EC number | 218-235-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 62425 |
| |
பண்புகள் | |
Ca(C7H5O2)2 | |
வாய்ப்பாட்டு எடை | 282.31 கி/மோல் |
2.32 கி/100 மி.லி (0 °செ) 2.72 கி/100 மி.லி (20 °செ) 8.7 கி/100 மி.லி (100 °செ) | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கால்சியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற உலோகங்களின் கால்சியம் கார்பாக்சிலேட்டு வழிப்பொருட்கள் யாவும் அணைவுச் சேர்மங்களாகும். பொதுவாக இவற்றின் ஒருங்கிணைப்பு எண் 8 ஆகும். தவிர கார்பாக்சிலேட்டுகள் Ca-O பிணைப்புகளாக உருவாகின்றன. இவற்றின் நீரேறும் அளவு மற்றொரு மாறுபடும் பொருளாகக் கருதப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
- ↑ Australia New Zealand Food Standards Code"Standard 1.2.4 - Labelling of ingredients". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
- ↑ H. Einspahr and C. E. Bugg "The geometry of calcium carboxylate interactions in crystalline complexes" Acta Cryst. (1981). B37, pages 1044-1052. எஆசு:10.1107/S0567740881005037