கால்னா கோட்டை
கால்னா கோட்டை என்பது மகாராட்டிராவில் காந்தேசு பிரதேசத்தின் மாலேகான் வட்டத்தில் உள்ள முக்கியமான கோட்டை ஆகும். இந்தக் கோட்டையானது புர்கான்பூர்-சூரத் வணிகப் பாதையில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும். மகாராட்டிராவில் உள்ள பாதுகாப்பான கோட்டை மற்றும் நல்ல நிலையில் உள்ள நுழைவாயில்களுடன் கூடிய கோட்டைகளுள் ஒன்றாகும். மாலேகான் மற்றும் துலே மலைகளுக்கிடையே இக்கோட்டை அமைந்துள்ளது.
கால்னா கோட்டை | |
---|---|
கால்னா, நாசிக் | |
கால்ன மலைக்கோட்டை 1804-இல் | |
ஆள்கூறுகள் | 20°46′24″N 74°32′00″E / 20.7733387°N 74.5333314°E |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இந்திய அரசு |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | நல்ல நிலையில் |
இட வரலாறு | |
கட்டிடப் பொருள் |
கற்கல், சுண்ணாம்பு, ஈயம் |
உயரம் | 2000 m |
காவற்படைத் தகவல் | |
தங்கியிருப்போர் | மாலிக் வுஜி & மாலிக் அசரப், , மாலிக் அகமது நிசாம் சா, சிவாஜி, கோல்க்ரா, பிரித்தானியர் |
அணுகல்
தொகுஇந்த கோட்டை நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் வட்டத்தில் அமைந்துள்ளது. மலையடி கிராமமான கல்னா மாலேகான் மற்றும் துலே பகுதியிலிருந்து வாகனம் வசதி மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மாலேகானிலிருந்து டோங்கராலே கிராமத்திற்கு வழக்கமான பொதுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. டோங்கராலே கிராமம் மாலேகான் மற்றும் துலேவிலிருந்து 30-15 கிமீ தொலைவில் உள்ளது. டோங்கரலே முதல் கல்னா வரையிலான தூரம் 4 கிமீ. ஆகும்.
வரலாறு
தொகுபதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் கல்னா ஒரு முக்கியமான இடமாக இருந்தது. இது தக்காணத்தின் எல்லையில் அமைந்திருந்தது. 1487ஆம் ஆண்டில், தௌலதாபாத்தின் ஆளுநர்களான மாலிக் வுஜி மற்றும் மாலிக் அசுரப் என்ற இரு சகோதரர்கள் கோட்டையினைச் சிறிது காலம் தமது வைத்திருந்தனர். 1506-இல் மாலிக் வௌஜியின் கொலைக்குப் பிறகு, இக்கோட்டை அகமதுநகரின் மாலிக் அகமது சா நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1510-இல் அகமத்நகரின் மாலிக் அகமது சா நிஜாம் இறந்த பிறகு, கோட்டை மீண்டும் முசல்மான் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் மராட்டியத் தலைவருக்கு அஞ்சலி செலுத்த மறுத்தார். 1634-இல், கல்னாவின் முசல்மான் தளபதி முகமது கான் முகலாயர்களுக்கு இவர்களின் அஞ்சலிகளை வழங்கினார். இதன் பின்னர் 1704-இல் அவுரங்கசீப்பால் தாக்கப்பட்டு 1705-இல் கோட்டைக் கைப்பற்றப்பட்டது. அக்டோபர்-நவம்பர் 1804-இல், இந்தக் கோட்டை கர்னல் வாலசின் கீழ் ஒரு படையால் கோல்கரி கைப்பற்றப்பட்டது. இறுதியாக, மார்ச் 1818-இல் இது பூர்வீக காலாட்படையால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1818க்குப் பிறகு சில வருடங்கள் கல்னாவில் ஒரு மம்லதார் அலுவலகம் நடத்தினார். [1]
-
கல்னா கோட்டை நுழைவாயில்
-
கோட்டைக் காட்சி
-
பள்ளிவாசல்
-
பார்சி கல்வெட்டுகள்
-
கல்னா கிராமம் கோட்டையிலிருந்து
மேற்கோள்கள்
தொகு- ↑ https://cultural[தொடர்பிழந்த இணைப்பு]. maharashtra.gov.in/english/gazetteer/Nasik/022%20Places/001%20Place.htm#GalnaFort