காளிமுத்துப் புலவர்

காளிமுத்துப் புலவர் என்பவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர். இவர் மயிலம் பகுதியில் வாழ்ந்த வள்ளல் "குழந்தை" என்பவரால் பேணப்பட்டவர். இந்த வள்ளல் "குழந்தை விசயன்" என வழங்கப்பட்டவர். இவரது தந்தை பெயர் வேலப்பன்.

காளிமுத்துப் புலவர் பாடிய பாடல்கள் ஏழு புறத்திரட்டு நூலில் இடம் பெற்றுள்ளன. அவை அகப்பொருள் பாடல்கள். கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனவை. கோவைச் சிற்றிலக்கியப் பாடல்கள் இவ்வாறு அமைவது மரபு. எனவே இந்தப் பாடல்கள் 'குழந்தை கோவை' என்னும் நூலில் இடம் பெற்றிருந்த பாடல்களில் சில எனக் கொள்ள இடம் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிமுத்துப்_புலவர்&oldid=3998352" இலிருந்து மீள்விக்கப்பட்டது