காழ்க் குழற்போலி

காழ்க் குழற்போலி என்பது (Tracheid) காழ் இழையத்தின் நான்கு வகை உயிரணுக்களில் ஒன்றாகும்[1]. காழ்க் குழற்போலி, காழ்க்கலன் மூலகங்கள், காழ்நார்கள், காழ்ப் புடைக்கலவிழையம் முதலிய நால்வகை உயிரணுக்களும் ஒன்றிணைந்து, தொகுப்பாகச் செயற்படுகின்றன. இந்நான்கின் ஒருங்கிணைந்த தொகுப்பானது, தாவரத்திற்குத் தேவையானக் கனிம உப்புக்களையும், நீரையும் வேரிலிருந்து, தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் எடுத்து செல்லும் பணியைச் செய்கின்றது.

குழற்போலிக் கலமொன்றின் நெடுக்கு வெட்டு முகத் தோற்றம். பல குழிகளை இங்கு அவதானிக்க முடியும்.

கட்டமைப்புதொகு

காழ்க் குழற்போலி என்பது நீளமாகவும் மழுங்கியமுனைகளுடனும் உள்ளன. இதன் உயிரணு அறை, மற்ற நார்களின் அறைகளை விட அகலமாக இருக்கிறது. இவற்றின் இரண்டாம் உயிரணுச்சுவர், 'லிக்னின்' என்ற வேதிப்பொருளால் தடித்துக் காணப்படுகிறது. குறுக்குவெட்டுத் தோற்றத்தில் இவைகள், பல கோணங்களுடனும், தடித்த உயிரணுச்சுவருடனும் காணப்படுகின்றன. உயிரணுச்சுவரில் காணப்படும் நீர்மங்கள் அழிந்து[2] காணப்படுவதால் குழிகள் காணப்படுகின்றன. குழிகள், எளிய குழிகளாகவோ அல்லது வரம்புடைய குழிகளாகவோக் காணப்படுகின்றன. இரண்டாம் உயிரணுச்சுவரில் பொருள்கள் படிவதன் காரணமாக, இவைகளின் உயிரணுச்சுவர், பலவகையான தடிப்புடன் காணப்படுகின்றன. அவை வளையத் தடிப்பு. சுருள் தடிப்பு, ஏணித் தடிப்பு, வலைத் தடிப்பு, குழித்தடிப்பு என பலவகைப்படுகின்றன.

இவற்றின் முனைகள் துளைகள் அற்றவையாக (Imperforate) இருக்கின்றன.[3] இந்த முனை சுவரில் (End walls) வரம்புடைய குழிகள் காணப்படுகின்றன.[4] இவைகள் ஒன்றின் முனையின் மீது ஒன்றாக, நீள்வரிசையில் அமைந்துள்ளன. வித்துமூடியிலி களிலும், டெரிடோஃபைட்டுகளிலும்(Pteridophyte) இந்த காழ்க்கலன்கள் தான், நீரைக்கடத்தும் முக்கிய கூறுகளாக உள்ளன. காழ்க்கலன்களில் நீரும், கனிம உப்புக்களும், வரம்புடைய குழிகள் மூலம் கடத்தப்படுகின்றன. காழ்க்கலன்கள் தாவரத்திற்கு வலிமை அளிக்கின்றன.

மேற்கோள்கள்தொகு

  1. "Tracheid". Encyclopædia Britannica, Inc. 2014-03-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. சூன் 11, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. Peter A. Raven, Ray F. Evert, Susan E. Eichhorn (1999). Biology of Plants. W.H. Freeman and Company. பக். 576–577. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-57259-611-2. 
  3. Esau, K. (1977). Anatomy of seed plants. New York: John Wiley and Sons. 
  4. Plant anatomy Retrieved 2013-02-07.

மேலும், விவரங்கள்தொகு

  • Wilson, K. & D.J.B. White (1986). The Anatomy of Wood: its Diversity and variability. Stobart & Son Ltd, London

புற இணைய இணப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காழ்க்_குழற்போலி&oldid=3366038" இருந்து மீள்விக்கப்பட்டது