காவல்துறையின் நண்பர்கள்

காவல்துறையின் நண்பர்கள் (Friends of Police (FoP) தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், காவல் துறையினருக்கு உதவிட 1993ஆம் ஆண்டில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வி. பிலிப் (இகாப நிறுவிய சமூக காவல் திட்டமாகும்.. இதுவே இந்தியாவில் நிறுவப்பட்ட முதலாவது காவல்துறையின் நண்பர்கள் திட்டமாகும்.[1]

1994ஆம் ஆண்டில் காவல்துறையின் நண்பர்கள் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. சூலை 2020ஆம் ஆண்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் காவல் மரணங்கள்[2] தொடர்பாக காவல்துறை நண்பர்களால் ஏற்பட்ட சர்ச்சையால் காவல்துறையின் நண்பர்கள் எனும் காவல் சமூகத் திட்டம் தமிழ்நாட்டில் கைவிடப்பட்டது.[3]

தற்போது மேற்கு வங்காளம் மாநிலத்தில் காவல் சமூகத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு