காவல்துறை உங்கள் நண்பன்

2020 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்

காவல்துறை உங்கள் நண்பன் (Kavalthurai Ungal Nanban) என்பது ஆர்.டி.எம் என்பவரால் எழுதி இயக்கி 2020இல் வெளிவந்த இந்திய தமிழ் மொழி குற்றப்புனைவு படமாகும். பி.ஆர். டாக்கீஸ் கார்ப்பரேஷன், வைட் மூன் டாக்கீசு என்ற பதாகையின் கீழ் இராசபாண்டியன், பாஸ்கரன் பி, சுரேஷ் ரவி ஆகியோர் தயாரித்திருந்தனர். இப்படத்தில் சுரேஷ் ரவி மற்றும் இரவீனா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆர். ஜே. முன்னா, சூப்பர்குட் சுப்பிரமணி மற்றும் சரத் ரவி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். படம் 27 நவம்பர் 2020 அன்று வெளியிடப்பட்டது.[1]

காவல்துறை உங்கள் நண்பன்
இயக்கம்ஆர்.டி.எம்
தயாரிப்புஇராசபாண்டியன்
பாஸ்கரன் பி
சுரேஷ் ரவி
கதைஆர்.டி.எம்
இசைஆதித்யா
சூர்யா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. எஸ். விஷ்ணுசிறீ
படத்தொகுப்புவடிவேல்
விமல்ராஜ்
கலையகம்பி.ஆர். டாக்கீஸ் கார்ப்பரேஷன்
வைட் மூன் டாக்கீஸ்
விநியோகம்ஜி. தனஞ்செயன்
வெளியீடுநவம்பர் 27, 2020 (2020-11-27)
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
  • பிரபுவாக சுரேஷ் ரவி
  • இந்துவாக ரவீனா ரவி
  • கண்ணபிரானாக மைம் கோபி
  • முருகேசனாக சூப்பர்குட் சுப்ரமணியன்
  • சதீஷாக சரத் இரவி
  • சத்யனாக ஆர்.ஜே முன்னா
  • மணிகண்டனாக கதிரவன் பாலு
  • செந்திலாக சத்யன்

தயாரிப்பு

தொகு

2018 ஆம் ஆண்டில், இரஞ்சித் மணிகண்டன் என்றும் அழைக்கப்படும் திரைப்பட இயக்குனர் ஆர்.டி.எம், தனது அடுத்த படத்தின் தலைப்புக்காக "காவல்துறை உங்கள் நண்பன்" என்ற பிரபல வாக்கியத்தைத் தலைப்பாக்கிக் கொண்டார். தொலைக்காட்சித் தொகுப்பாளர் சுரேஷ் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்பட இயக்குனரும் நடிகரும் முன்பு 2014 ஆம் ஆண்டில் "அதி மேதாவிகள்" என்ற நகைச்சுவைப் படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தனர். இப்படம் திரையரங்கினில் வெளியாகவில்லை. இந்தப்படம் பற்றி பேசிய சுரேஷ் ரவி, “ காவல்துறை உங்கள் நண்பன் எனது தொழில் வாழ்க்கையின் முதல் கனமான படமாக இருக்கும். தற்செயலாக ஒன்றிணையும் ஒரு காவல்துறை அதிகாரிக்கும் உணவு விநியோக பையனுக்கும் இடையிலான உறவு குறித்து இந்த படம் பேசும் "என்றார். 2020 சனவரியில், திரைப்பட தயாரிப்பாளர் ஜி.தனஞ்சயன் படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றிருந்தார்.[2]

வரவேற்பு

தொகு

பிலிம் கம்பானியன் சௌத் என்ற பொழுதுபோக்கு வலைதளத்தில் பரத்வாஜ் ரங்கன் எழுதினார், "எழுத்தாளர்-இயக்குனர் ஆர்.டி.எம். வயதானவர் போல் தோன்றியுள்ளார். நான் உண்மையிலேயே கணிக்க முடியாத ஒரு படத்தைப் பார்த்தேன் ".[3] எம். சுகந்த் இந்த படத்தை 5க்கு 3.5 என மதிப்பிட்டு, "அதிகார நிறுவனங்கள் அதை எவ்வாறு துஷ்பிரயோகம் செய்கின்றன என்பதற்கான ஒரு மோசமான கணக்கு" என்றார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசின் விமர்சனத்தில் நவீன் தர்சன் எழுதுகையில், இந்த படம் சில வணிக சமரசங்களுக்கு இரையாகாமல் இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும் " என்று எழுதினார். "காவல்துறை உங்கள் நண்பன்" என்ற தலைப்பு காவல்துறையினரை மகிமைப்படுத்தும் மற்றொரு கற்பனையான கதை என்று தெரிகிறது. ஆனால் படத்தின் இயக்குனர் ஆர்.டி.எம் தனது முதல் முயற்சியால் காவல் துறையின் தீய பக்கத்தை பதிவு செய்துள்ளார், இது கடினமானது " என்று சிஃபி. விமர்சனம் செய்தது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "'Kavalthurai Ungal Nanban' release date confirmed". Kollyinsider. பார்க்கப்பட்ட நாள் 2020-11-19.
  2. "G. Dhananjayan acquires an interesting film". IndiaGlitz.com. 29 January 2020. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
  3. Rangan, Baradwaj (26 November 2020). "Kavalthurai Ungal Anban Review". அனுபமா சோப்ரா. பார்க்கப்பட்ட நாள் 26 November 2020.
  4. "Kaavalthurai Ungal Nanban - Realistic & hard-hitting". Sify. 24 November 2020. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவல்துறை_உங்கள்_நண்பன்&oldid=4095262" இலிருந்து மீள்விக்கப்பட்டது