காவிதி
காவிதி என்பது சங்ககாலத்தில் உழவரில் சிறந்தவர்களுக்கு அக்காலத்து மன்னர்கள் வழங்கிய விருது. உண்டி முதற்றே உணவின் பிண்டமாகிய நம் உடல் ஆகையால் உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் உழவர்களை அரசன் காவுதி (=காப்பாற்றுவாயாக) என்று வேண்டிக்கொள்வானாய் வாங்கிய விருதின் மருவிய பெயரே காவிதி.
காவிதி விருதினைப் பெற்ற சங்ககாலத்தவர்
தொகு- ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்.
- இளம்புல்லூர்க் காவிதி
- கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
- கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்
- காண்க - பண்டைய தமிழர் விருதுகள்