கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
காவிதிக் கீரங்கண்ணனார் சங்ககால புலவர்களில் ஒருவர் ஆவார். இவர் கிடங்கில் என்னும் ஊரில் வாழ்ந்தவர்.[1] உழவரில் சிறந்து விளங்கிக் கிடங்கில் அரசனால் சிறப்பிக்கப்பட்டவர். கிடங்கில் அரசன் இவருக்குக் 'காவிதி' என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளான்.
இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 218 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கக. மாநகர்ப் புலவர்கள் -2. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 76.