சங்க காலப் புலவர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(சங்ககால புலவர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் நமக்குக் கிடைத்துள்ள சங்கநூல்கள். ஆகும். அவற்றில் தற்போது கிடைத்துள்ள சங்கப்பாடல்கள் 2381. அவற்றுள் 2279 பாடல்களுக்கு மட்டுமே அவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. ஏனைய பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை.

சங்கநூல் சொல்லடைவு
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

பத்துப்பாட்டு நூல்கள் தொகுப்பில் உள்ள ஒவ்வொன்றும் தனித்தனி நூல். இந்தத் தொகுப்பு முழுமைக்கும் அவற்றுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை கடவுள் வாழ்த்தைப் போல முதல் நூலாக வைத்துப் பத்து என்று எண்ணப்பட்டுள்ளது. எட்டுத்தொகை நூல்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை நூல் தொகுக்கப்பட்ட காலத்தில் சேர்க்கப்பட்டவை. அவற்றையும் சேர்த்துதான் இந்த 2381. மொத்தம் உள்ள பாடல்களில் ஆசிரியர் பெயர் தெரிந்த 2279 பாடல்களைப் பாடிய புலவர்கள் 475 பேர்.

இந்தச் செய்திகள் சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் நூலின்[1] இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புலவர்களின் பெயர்கள் அகர வரிசையில் பின்வருமாறு தொகுத்துத் தரப்பட்டுள்ளன

மேலும் சங்கநூல் சொல்லடைவு [2] என்னும் நூலிலிருந்து ஒவ்வொரு சொல்லும் ஒப்புநோக்கப்பட்டுள்ளன.

தொகுப்பின் சீர்மை

தொகு

இந்தத் தொகுப்பு சங்க காலப் புலவர்களை முதலில் அகரவரிசைப் படுத்திய சு. வையாபுரிப்பிள்ளை தொகுப்பினைப் பின்பற்றியது. இதனை வழிமொழிந்து சில மாற்றங்களைக் காட்டும் தொகுப்பு ஒன்று உள்ளது.[3]

எண்ணிக்கைச் சிக்கல்கள்

தொகு

நற்றிணை ராஜம் பதிப்பு இத்தொகைநூல் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 192 என்று காட்டுகிறது. வையாபுரிப்பிள்ளை 175 என்று குறிப்பிடுகிறார்.[4] பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்பும் 175 எனக் காட்டுகிறது. இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் ஒருசில புலவர்களின் பெயர்களுக்கு உள்ள அடைமொழிகள் வேறுபட்டிருப்பதே.

மாங்குடி மருதன், மாங்குடி கிழார் என்று குறிப்பிடப்பட்டுள்ள புலவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்றும், ஈழத்துப் பூதன் தேவன், மதுரை ஈழத்துப் பூதன் தேவன் என்று குறிப்பிடப்பட்டுள்ள புலவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்றும் ராஜம் முதல் பதிப்பு கொண்டதே ஆகும்.

மேலும் புலவர் பெயர்களில் காணப்படும் பாட வேறுபாடுகளும் காரணமாகும். குறுந்தொகை 79 ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர் குடவாயில் கீரனத்தன் என்றும், குடவாயில் கீரத்தனார் என்றும் உள்ளன. குறுந்தொகை 131 ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர் ஓரேர் உழவன் என்பதற்குப் பதிலாக நக்கீரன் என்றும், குறுந்தொகை 315 ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர் மதுரை வேளாத்தத்தன் என்பதற்குப் பதிலாக தும்பிசேர் கீரனார் என்றும் பதிப்புகள் புலவர் பெயர்களை மாறுபாடுகளுடன் காட்டுகின்றன.

“மாங்குடி மருதன் தலைவன் ஆக … புலவர் பாடா வரைக என் நிலவரை” எனப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாட்டு குறிப்பிடுவதிலிருந்து அவனைப் பாடிய மாங்குடி மருதன், மாங்குடி கிழார் ஆகிய இருவரும் ஒருவரே எனத் தெளிவாகிறது.

இவ்வாறு விளக்கி ராஜம் பதிப்பு வையாபுரிப்பிள்ளை பதிப்பை வழிமொழிவதால் அப்பதிப்பு காட்டிய அகரவரிசை இங்குப் பின்பற்றப்பட்டுள்ளது.

அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை ஆகிய நானூற்றுத் தொகுப்பு-நூல்கள் காட்டும் புலவர் பெயர்களில் உள்ள இந்தச் சிக்கல்களே அன்றிக் கலித்தொகைப் பாடல்களைப் பாடிய புலவர் பெயர்களிலும் சிக்கல்கள் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் ஒரே புலவரால் பாடப்பட்டவை என்னும் கருத்துடன் ராஜம் பதிப்பு அவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் ஒதுக்கியுள்ளமை கருதத் தக்கது.

அகர வரிசைப்படி சங்கப் புலவர்கள்

தொகு
  1. இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் \ சிறுபாண் ஆற்றுப்படை
  2. இடைக்காடனார் \ பாடல் 10
  3. இடைக்குன்றூர் கிழார் \ பாடல் 4
  4. இடையன் சேந்தன் கொற்றனார் \ பாடல் 1
  5. இடையன் நெடுங்கீரனார் \ பாடல் 1
  6. இம்மென் கீரனார் \ பாடல் 1
  7. இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் \ மலைபடுகடாம் (கூத்தர் ஆற்றுப்படை)
  8. இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் \ பாடல் 1
  9. இருந்தையூர்க் கொற்றன் புலவன் \ பாடல் 1
  10. இரும்பிடர்த் தலையார் \ பாடல் 1
  11. இளங் கீரந்தையார் \ பாடல் 1
  12. இளங் கீரனார் \ பாடல் 16
  13. இள நாகனார் \ பாடல் 3
  14. இளந் திரையன் \ பாடல் 4
  15. இளந் தேவனார் \ பாடல் 4
  16. இளம்புல்லூர்க் காவிதி \ பாடல் 1
  17. இளம்பூதனார் \ பாடல் 1
  18. இளம்பெருவழுதி \ பாடல் 2
  19. இளம்போதியார் \ பாடல் 1
  20. இளவெயினனார் \ பாடல் 1
  21. இறங்குகுடிக் குன்றநாடன் \ பாடல் 1
  22. இறையனார் \ பாடல் 1
  23. இனிசந்த நாகனார் \ பாடல் 1
  1. ஈழத்துப் பூதன்தேவனார் \ பாடல் 7
  1. ஐயாதிச் சிறு வெண்டேரையார் \ பாடல் 1
  2. ஐயூர் முடவனார் \ பாடல் 10
  3. ஐயூர் மூலங்கிழார் \ பாடல் 1
  1. ஔவையார் \ பாடல் 59
  1. கங்குல் வெள்ளத்தார் - பாடல் 1
  2. கச்சிப்பேட்டு இளந்தச்சனார் - பாடல் 1
  3. கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் - பாடல் 2
  4. கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் - பாடல் 2
  5. கடம்பனூர்ச் சாண்டிலியன் - பாடல் 1
  6. கடலூர்ப் பல்கண்ணனார் - பாடல் 1
  7. கடியலூர் உருத்திரங்கண்ணனார் - பாடல் 4
  8. கடுந்தொடைக் காவினார் - பாடல் 1
  9. கடுந்தோட் கரவீரன் - பாடல் 1
  10. கடுவன் இளமள்ளனார் - பாடல் 1
  11. கடுவன் இளவெயினனார் - பாடல் 3
  12. கடுவன் மள்ளனார் - பாடல் 4
  13. கணக்காயன் தத்தனார் - பாடல் 1
  14. கணியன் பூங்குன்றனார் - பாடல் 2
  15. கண்ணகனார் - பாடல் 2
  16. கண்ணகாரன் கொற்றனார் - பாடல் 1
  17. கண்ணங் கொற்றனார் - பாடல் 1
  18. கண்ணம் புல்லனார் - பாடல் 2
  19. கண்ணனார் - பாடல் 2
  20. கதக் கண்ணனார் - பாடல் 2
  21. கதப் பிள்ளையார் - பாடல் 5
  22. கந்தரத்தனார் - பாடல் 8
  23. கபிலர் - பாடல் 235
  24. கயத்தூர் கிழார் - பாடல் 1
  25. கயமனார் - பாடல் 23
  26. கருங்குழல் ஆதனார் - பாடல் 2
  27. கரும்பிள்ளைப் பூதனார் - பாடல் 1
  28. கருவூர் கிழார் - பாடல் 1
  29. கருவூர்க் கண்ணம்பாளனார் - பாடல் 3
  30. கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் - பாடல் 3
  31. கருவூர்க் கலிங்கத்தார் - பாடல் 1
  32. கருவூர்க் கோசனார் - பாடல் 1
  33. கருவூர்ச் சேரமான் சாத்தன் - பாடல் 1
  34. கருவூர் நன்மார்பனார் - பாடல் 1
  35. கருவூர்ப் பவுத்திரனார் - பாடல் 1
  36. கருவூர்ப் பூதஞ்சாத்தனார் - பாடல் 1
  37. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார் - பாடல் 1
  38. கல்பொரு சிறுநுரையார் - பாடல் 1
  39. கல்லாடனார் - பாடல் 14
  40. கவைமகன் - பாடல் 1
  41. கழாத்தலையார் - பாடல் 6
  42. கழார்க் கீரன் எயிற்றியனார் - பாடல் 1
  43. கழார்க் கீரன் எயிற்றியார் - பாடல் 8
  44. கழைதின் யானையார் - பாடல் 1
  45. கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் - பாடல் 1
  46. கள்ளில் ஆத்திரையனார் - பாடல் 3
  1. காக்கை பாடினிடியார் நச்செள்ளையார் - பாடல் 12
  2. காசிபன் கீரன் - பாடல் 1
  3. காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் - பாடல் 1
  4. காப்பியஞ் சேந்தனார் - பாடல் 1
  5. காப்பியாற்றுக் காப்பியனார் - பாடல் 10
  6. காமஞ்சேர் குளத்தார் - பாடல் 1
  7. காரி கிழார் - பாடல் 1
  8. காலெறி கடிகையார் - பாடல் 1
  9. காவட்டனார் - பாடல் 2
  10. காவற்பெண்டு - பாடல் 1
  11. காவல் முல்லைப் பூதனார் - பாடல் 8
  12. காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் - பாடல் 1
  13. காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் - பாடல் 10
  14. காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் - பாடல் 3
  15. காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார் - பாடல் 1
  16. காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் - பாடல் 1
  1. கீரங்கீரனார் - பாடல் 1
  2. கீரந்தையார் - பாடல் 1
  1. கேசவனார் - பாடல் 1
  1. சாகலாசனார் - பாடல் 2
  2. சாத்தந்தையார் - பாடல் 5
  3. சாத்தனார் - பாடல் 1
  1. சீத்தலைச் சாத்தனார் - பாடல் 10
  1. தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் - பாடல் 1
  2. தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் - பாடல் 6
  3. தனிமகனார் - பாடல் 1
  1. திப்புத்தோளார் - பாடல் 1
  2. திருத்தாமனார் - பாடல் 1
  1. தீன்மதி நாகனார் - பாடல் 1
  1. தும்பிசேர் கீரனார் - பாடல் 7
  2. துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார் - பாடல் 1
  3. துறையூர் ஓடைகிழார் - பாடல் 1
  1. தூங்கலோரியார் - பாடல் 3
  1. தொடித்தலை விழுத்தண்டினார் - பாடல் 1
  2. தொண்டி ஆமூர்ச் சாத்தனார் - பாடல் 1
  3. தொல்கபிலர் - பாடல் 6
  1. நக்கண்ணையார் - பாடல் 6
  2. நக்கீரர் - பாடல் 37
  3. நப்பசலையார் - பாடல் 1
  4. நப்பண்ணனார் - பாடல் 1
  5. நப்பாலத்தனார் - பாடல் 2
  6. நம்பி குட்டுவன் - பாடல் 5
  7. நரிவெரூஉத் தலையார் - பாடல் 4
  8. நரைமுடி நெட்டையார் - பாடல் 1
  9. நல்லச்சுதனார் - பாடல் 1
  10. நல்லந்துவனார் - பாடல் 40
  11. நல்லழிசியார் - பாடல் 2
  12. நல்லாவூர் கிழார் - பாடல் 2
  13. நல்லிறையனார் - பாடல் 1
  14. நல்லுருத்திரனார் - 17
  15. நல்லூர்ச் சிறுமேதாவியார் - பாடல் 1
  16. நல்லெழுநியார் - பாடல் 1
  17. நல்வழுதியார் - பாடல் 1
  18. நல்விளக்கனார் - பாடல் 1
  19. நல்வெள்ளியார் - பாடல் 4
  20. நல்வேட்டனார் - பாடல் 5
  21. நற்சேந்தனார் - பாடல் 1
  22. நற்றங் கொற்றனார் - பாடல் 1
  23. நற்றமனார் - பாடல் 1
  24. நன்பலூர்ச் சிறுமேதாவியார் - பாடல் 2
  25. நன்னாகனார் - பாடல் 5
  26. நன்னாகையார் - பாடல் 8
  1. நாகம்போத்தன் - பாடல் 1
  2. நாமலார் மகன் இளங்கண்ணன் - பாடல் 1
  1. நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் - பாடல் 1
  1. நொச்சி நியமங்கிழார் - பாடல் 5
  1. நோய்பாடியார் - பாடல் 1
  1. புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் - பாடல் 1
  2. புல்லாற்றூர் எயிற்றியனார் - பாடல் 1
  3. புறத்திணை நன்னாகனார்
  1. போதனார் - பாடல் 1
  2. போந்தைப் பசலையார் - பாடல் 1
  1. மடல் பாடிய மாதங்கீரனார் - பாடல் 2
  2. மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் - பாடல் 13
  3. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் - பாடல் 12
  4. மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் - பாடல் 1
  5. மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் - பாடல் 1
  6. மதுரை இளங்கௌசிகனார் - பாடல் 1
  7. மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் - பாடல் 3
  8. மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் - பாடல் 1
  9. மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் - பாடல் 2
  10. மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார் - பாடல் 1
  11. மதுரைக் கணக்காயனார் - பாடல் 5
  12. மதுரைக் கண்டராதித்தனார் - பாடல் 1
  13. மதுரைக் கண்ணத்தனார் - பாடல் 2
  14. மதுரைக் கவுணியன் பூதத்தனார் - பாடல் 1
  15. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் - பாடல் 2
  16. மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் - பாடல் 1
  17. மதுரைக் காருலவியங் கூத்தனார் - பாடல் 1
  18. மதுரைக் கூத்தனார் - பாடல் 1
  19. மதுரைக் கொல்லன் புல்லன் - பாடல் 1
  20. மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் - பாடல் 2
  21. மதுரைச் சுள்ளம் போதனார் - பாடல் 1
  22. மதுரைத் தத்தங்கண்ணனார் - பாடல் 1
  23. மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார் - பாடல் 1
  24. மதுரைத் தமிழக் கூத்தனார் - பாடல் 1
  25. மதுரைப் படைமங்க மன்னியார் - பாடல் 1
  26. மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் - பாடல் 1
  27. மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் - பாடல் 1
  28. மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் - பாடல் 1
  29. மதுரைப் புல்லங்கண்ணனார் - பாடல் 1
  30. மதுரைப் பூதன் இளநாகனார் - பாடல் 1
  31. மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் - பாடல் 1
  32. மதுரைப் பெருங்கொல்லன் - பாடல் 1
  33. மதுரைப் பெருமருதனார் - பாடல் 1
  34. மதுரைப் பெருமருது இளநாகனார் - பாடல் 1
  35. மதுரைப் போத்தனார் - பாடல் 1
  36. மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் - பாடல் 2
  37. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் - பாடல் 3
  38. மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் - பாடல் 1
  39. மதுரை வேளாசன் - பாடல் 1
  40. மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார் - பாடல் 1
  41. மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் - பாடல் 1
  42. மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார் - பாடல் 1
  43. மருதம் பாடிய இளங்கடுங்கோ - பாடல் 3
  44. மருதன் இளநாகனார் - பாடல் 79
  45. மலையனார் - பாடல் 1
  46. மள்ளனார் - பாடல் 2
  1. மிளைக் கந்தன் - பாடல் 1
  2. மிளைப் பெருங்கந்தன் - பாடல் 3
  3. மிளைவேள் தித்தன் - பாடல் 1
  1. மீனெறி தூண்டிலார் - பாடல் 1
  1. மூலங்கீரனார் - பாடல் 1
  1. மையோடக் கோவனார் - பாடல் 1
  1. வீரை வெளியனார் - பாடல் 1
  2. வீரை வெளியன் தித்தனார் - பாடல் 1
  1. வேட்டகண்ணன் - பாடல் 1
  2. வேம்பற்றூர்க் கண்ணன்கூத்தன் - பாடல் 1
  3. வேம்பற்றூர்க் குமரனார் - பாடல் 2

அட்டவணை

தொகு

கீழுள்ள பட்டியலில் சங்ககாலப் புலவர்களும் அவர்கள் இயற்றிய பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

எண் சங்ககாலப் புலவர்கள் இயற்றிய பாடல்கள் (வரி எண்கள்)
1 பெயர் தெரியாத புலவர்கள் பாடியவை அகநானூறு (114, 117, 165), குறுந்தொகை (191, 256, 313, 321, 326, 375, 379, 381, 395), நற்றிணை (8, 10, 22, 24, 45, 46, 84, 92, 107, 108, 111, 115, 125, 126, 132, 134, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 182, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 188, 189, 190, 192, 193, 195, 207, 229, 235, 271, 355, 385, 396), புறநானூறு (244, 256, 257, 263, 297, 307, 323, 327, 328, 333, 339, 355), பரிப்பாடல் (1, 22)
2 ஐயாதிச் சிறுவெண்தேரையார் புறநானூறு (363)
3 ஐயூர் மூலங்கிழார் புறநானூறு (21)
4 ஐயூர் முடவனார் அகநானூறு (216), குறுந்தொகை (123, 206, 322), நற்றிணை (206, 334), புறநானூறு (51, 228, 314, 399)
5 அகம்பன் மாலாதனார் நற்றிணை (81)
6 ஆலம்பேரி சாத்தனார் அகநானூறு (47, 81, 143, 175), நற்றிணை (152, 255)
7 ஆலங்குடி வங்கனார் அகநானூறு (106), குறுந்தொகை (8, 45), புறநானூறு (319)
8 ஆலத்தூர் கிழார் குறுந்தொகை (112, 350), புறநானூறு (34, 36, 69, 225, 324)
9 அழிசி நச்சாத்தனார் குறுந்தொகை (271)
10 அல்லங்கீரனார் நற்றிணை (245)
11 அள்ளூர் நன்முல்லையார் அகநானூறு (46), குறுந்தொகை (32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237), புறநானூறு (306, 340)
12 அம்மள்ளனார் நற்றிணை (82)
13 அம்மெய்யன் நாகனார் நற்றிணை (252)
14 அம்மூவனார் ஐங்குறுனூறு (101–200), அகநானூறு (10, 140, 280, 370, 390), குறுந்தொகை (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401), நற்றிணை (4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397)
15 அண்டர் மகன் குறுவழுதியார் அகநானூறு (228), குறுந்தொகை (345), புறநானூறு (346)
16 அண்டர் நடும் கல்லினார் புறநானூறு (283, 344, 345)
17 அணிலாடு முன்றிலார் குறுந்தொகை (41)
18 அஞ்சில் அஞ்சியார் நற்றிணை (90)
19 அஞ்சில் ஆந்தையார் குறுந்தொகை (294), நற்றிணை (233)
20 அஞ்சியத்தை மகள் நாகையார் அகநானூறு (352)
21 அந்தி இளங்கீரனார் அகநானூறு (71)
22 அரிசில் கிழார் குறுந்தொகை (193), பதிற்றுப்பத்து (71–80), புறநானூறு (146, 230, 281, 285, 300, 304, 342)
23 ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூறு (183)
24 ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் அகநானூறு (64)
25 ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன் குறுந்தொகை (184)
26 ஆசிரியர் பெருங்கண்ணனார் குறுந்தொகை (239)
27 ஆதிமந்தியார் குறுந்தொகை (31)
28 அதியன் விண்ணத்தனார் அகநானூறு (301)
29 ஆவடுதுறை மாசாத்தனார் புறநானூறு (227)
30 ஆவியார் புறநானூறு (298)
31 ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் நற்றிணை (264)
32 ஆவூர் கிழார் புறநானூறு (322)
33 ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் அகநானூறு (202)
34 ஆவூர் மூலங்கிழார் அகநானூறு (24, 156, 341), புறநானூறு (38, 40, 166, 177, 178, 196, 261, 301)
35 ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலை சாத்தனார் அகநானூறு (224)
36 ஔவையார் (முதலாம்) அகநானூறு (11, 147, 273, 303), குறுந்தொகை (15, 23, 28, 29, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388), நற்றிணை (129, 187, 295, 371, 381, 390, 394), புறநானூறு (87–104, 140, 187, 206, 231, 232, 235, 269, 286, 290, 295, 311, 315, 367, 390, 392)
37 சேந்தன் கீரனார் குறுந்தொகை (311)
38 சேந்தங் கண்ணனார் அகநானூறு (350), நற்றிணை (54)
39 சேரமான் இளங்குட்டுவன் அகநானூறு (153)
40 சேரமான் கணைக்கால் இரும்பொறை புறநானூறு (74)
41 சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை புறநானூறு (245)
42 சேரமானெந்தை குறுந்தொகை (22)
43 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் புறநானூறு (173)
44 சோழன் நலங்கிள்ளி புறநானூறு (73, 75)
45 சோழன் நல்லுருத்திரன் புறநானூறு (190), கலித்தொகை (101–117)
46 சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் புறநானூறு (181, 265)
47 ஈழத்துப் பூதன்தேவனார் அகநானூறு (88), குறுந்தொகை (343)
48 எழூஉப்பன்றி நாகன் குமரனார் அகநானூறு (138, 240)
49 எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் அகநானூறு (149, 319, 357), புறநானூறு (397)
50 எருமை வெளியனார் அகநானூறு (73), புறநானூறு (273, 303)
51 எருமை வெளியனார் மகனார் கடலனார் அகநானூறு (72)
52 எயினந்தை மகன் இளங்கீரனார் அகநானூறு (3, 225, 239, 289, 299, 361, 371, 395, 399), நற்றிணை (269, 308, 346)
53 எயினந்தையார் நற்றிணை (43)
54 எயிற்றியனார் குறுந்தொகை (286)
55 இடைக்காடனார் அகநானூறு (139, 194, 274, 284, 304, 374), குறுந்தொகை (251), நற்றிணை (142, 221, 316), புறநானூறு (42)
56 இடைக்குன்றூர் கிழார் புறநானூறு (76, 77, 78, 79)
57 இடையன் சேந்தங்கொற்றனார் அகநானூறு (375)
58 இடையன் நெடுங்கீரனார் அகநானூறு (166)
59 இளம்பெருவழுதியார் பரிப்பாடல் (15)
60 இளம்பூதனார் குறுந்தொகை (334)
61 இளம்போதியார் நற்றிணை (72)
62 இளம்புல்லூர்க் காவிதி நற்றிணை (89)
63 இளநாகனார் நற்றிணை (151, 205, 231)
64 இளங்கடுங்கோ அகநானூறு (96, 176)
65 இளங் கண்ணனார் அகநானூறு (264)
66 இளங்கீரனார் குறுந்தொகை (116), நற்றிணை (3), (62, 113)
67 இளங்கீரந்தையார் குறுந்தொகை (148)
68 இளங்கௌசிகனார் அகநானூறு (381)
69 இளந்தேவனார் நற்றிணை (41)
70 இளந்திரையனார் நற்றிணை (94, 99)
71 இளவேட்டனார் நற்றிணை (33, 157)
72 இளவெயினனார் நற்றிணை (263)
73 இம்மென் கீரனார் அகநானூறு (398)
74 இனிசந்தநாகனார் நற்றிணை (66)
75 இறையனார் குறுந்தொகை (2)
76 இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் மலைப்படுக்காலம்
77 இறங்குகுடிக் குன்ற நாடன் அகநானூறு (215)
78 இரும்பிடர்த் தலையார் புறநானூறு (3)
79 இருங்கோன் ஒல்லையான் செங்கண்ணனார் அகநானூறு (279)
80 இருந்தையூர்க் கொற்றன் புலவனார் குறுந்தொகை (335)
81 கச்சிப்பேட்டு இளந்தச்சனார் நற்றிணை (266)
82 கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் குறுந்தொகை (213, 216)
83 கச்சிப்பேட்டு நன்னாகையார் குறுந்தொகை (30, 172, 180, 192, 197, 287)
84 கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் நற்றிணை (144, 213)
85 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பரிப்பாடல் (15), புறநானூறு (182)
86 கடம்பனூர்ச் சாண்டிலியனார் குறுந்தொகை (307)
87 கடியலூர் உருத்திரங்கண்ணனார் அகநானூறு (167), குறுந்தொகை (352), பெருமன்னாற்றுப்படை, பட்டினப்பாலை
88 கடுகு பெருந்தேவனார் குறுந்தொகை (255)
89 கடுந்தோட் கரவீரனார் குறுந்தொகை (69)
90 கடுந்தொடைக் காவினார் அகநானூறு (109)
91 கடுவன் இளமள்ளனார் நற்றிணை (150)
92 கடுவன் இளவெயினனார் பரிப்பாடல் (3, 4, 5)
93 கடுவன் மள்ளனார் (மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்) அகநானூறு (70, 256, 354), குறுந்தொகை (82)
94 காக்கை பாடினியார் நச்செள்ளையார் குறுந்தொகை (210), புறநானூறு (278), பதிற்றுப்பத்து (51–60)
95 கழைதின் யானையார் புறநானூறு (204)
96 கழார்க்கீரன் எயிற்றியார் அகநானூறு (163, 217, 235, 294), குறுந்தொகை (35, 261, 330), நற்றிணை (281, 312)
97 கழாத்தலையார் புறநானூறு (62, 65, 270, 288, 289, 368)
98 காலெறி கடிகையார் குறுந்தொகை (267)
99 கல்லாடனார் அகநானூறு (9, 83, 113, 171, 199, 209, 333), குறுந்தொகை (260, 269), புறநானூறு (23, 25, 371, 385, 391)
100 கள்ளம்பாளனார் நற்றிணை (148)
101 கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் நற்றிணை (333)
102 கள்ளில் ஆத்திரையனார் குறுந்தொகை (293), புறநானூறு (175, 389)
103 கல்பொரு சிறுநுரையார் குறுந்தொகை (290)
104 காமக்கணிப் பசலையார் நற்றிணை (243)
105 காமஞ்சேர் குளத்தார் குறுந்தொகை (4)
106 கணக்காயனார் நற்றிணை (23)
107 கணக்காயர் தத்தனார் குறுந்தொகை (304)
108 கங்குல் வெள்ளத்தார் குறுந்தொகை (387)
109 கணி புன்குன்றனார் நற்றிணை (226)
110 கணியன் பூங்குன்றனார் புறநானூறு (192)
111 கண்ணகனார் நற்றிணை (79), புறநானூறு (218)
112 கண்ணகாரன் கொற்றனார் நற்றிணை (143)
113 கண்ணம் புல்லனார் அகநானூறு (63), நற்றிணை (159)
114 கண்ணனார் குறுந்தொகை (244)
115 கண்ணங் கொற்றனார் நற்றிணை (156)
116 கந்தக்கண்ணனார் குறுந்தொகை (94)
117 கந்தரத்தனார் நற்றிணை (116, 146, 238)
118 கபிலர் ஐங்குறுனூறு (201–300), அகநானூறு (2, 12, 18, 42, 82, 118, 128, 158, 182, 203, 218, 238, 248, 278, 292, 318, 332, 382), குறுந்தொகை (13, 18, 25, 38, 42, 87, 95, 100, 106, 115, 121, 142, 153, 187, 198, 208, 225, 241, 246, 249, 264, 288, 291, 312, 355, 357, 361, 385), நற்றிணை (1, 13, 32, 59, 65, 77, 217, 222, 225, 253, 267, 291, 309, 320, 336, 353, 359, 368, 373, 376), புறநானூறு (8, 14, 105–111, 113–124, 143, 200–202, 236, 337, 347), பதிற்றுப்பத்து (71–80), குறிஞ்சிப்பாட்டு, கலித்தொகை (37–65)
119 காப்பியஞ் சேந்தனார் நற்றிணை (246)
120 காப்பியாற்றுக் காப்பியனார் பதிற்றுப்பத்து (31–40)
121 காரிகிழார் புறநானூறு (6)
122 காரிக்கண்ணனார் நற்றிணை (237)
123 கரும்பிள்ளைப் பூதனார் பரிப்பாடல் (10)
124 கருங்குழல் ஆதனார் புறநானூறு (7, 224)
125 கருவூர்ச் சேரமான் சாத்தனார் குறுந்தொகை (268)
126 கருவூர் கலிங்கத்தார் அகநானூறு (183)
127 கருவூர்க் கண்ணம்புல்லனார் அகநானூறு (63)
128 கருவூர்க் கண்ணம்பாளனார் அகநானூறு (180, 263)
129 கருவூர்க் கதப்பிள்ளை குறுந்தொகை (64, 265, 380), புறநானூறு (380)
130 கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் (கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார்) அகநானூறு (309), நற்றிணை (343), புறநானூறு (168)
131 கருவூர் கிழார் குறுந்தொகை (170)
132 கருவூர்க் கோசனார் நற்றிணை (214)
133 கருவூர் நன்மார்பன் அகநானூறு (277)
134 கருவூர் ஓதஞானியார் குறுந்தொகை (71)
135 கருவூர் பவுத்திரனார் குறுந்தொகை (162)
136 கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் புறநானூறு (219)
137 கருவூர் பூதஞ்சாத்தனார் அகநானூறு (50)
138 காசிபன் கீரனார் நற்றிணை (248)
139 கதையங்கண்ணனார் புறநானூறு (356)
140 கதப் பிள்ளையார் நற்றிணை (135)
141 காட்டூர் கிழார் மகனார் அகநானூறு (85)
142 கவை மகனார் குறுந்தொகை (324)
143 காவன்முல்லைப் பூதனார் அகநானூறு (21, 241, 293, 391), குறுந்தொகை (104, 211), நற்றிணை (274)
144 காவன்முல்லைப் பூதரத்தனார் அகநானூறு (151)
145 காவற்பெண்டு புறநானூறு (86)
146 காவட்டனார் அகநானூறு (378)
147 காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் அகநானூறு (103, 271), நற்றிணை (389)
148 காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணனார் குறுந்தொகை (347)
149 காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் குறுந்தொகை (342)
150 காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் அகநானூறு (107, 123, 285), குறுந்தொகை (297), புறநானூறு (57, 58, 169, 171, 353)
151 காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகர் மகனார் நப்பூதனார் முல்லைப்பாட்டு
152 காவிட்டனார் புறநானூறு (359)
153 கவுதமன் சாதேவனார் (ஆமூர் கவுதமன் சாதேவனார்) அகநானூறு (159)
154 கயமனார் அகநானூறு (7, 17, 145, 189, 195, 219, 221, 259, 275, 321, 383, 397), குறுந்தொகை (9, 356, 378, 396), நற்றிணை (12, 198, 279, 293, 305, 324), புறநானூறு (254, 361)
155 கயத்தூர் கிழார் குறுந்தொகை (354)
156 கீரங்கீரனார் நற்றிணை (78)
157 கீரந்தையார் பரிப்பாடல் (2)
158 கீரத்தனார் நற்றிணை (42)
159 கேசவனார் பரிப்பாடல் (14)
160 கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் நற்றிணை (364)
161 கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் நற்றிணை (218)
162 கிடங்கில் குலபதி நக்கண்ணனார் குறுந்தொகை (252)
163 கிள்ளிமங்கலங்கிழார் குறுந்தொகை (76, 110, 152, 181)
164 கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரகோவனார் நற்றிணை (365)
165 கோடை பாடிய பெரும்பூதனார் புறநானூறு (259)
166 கொடியூர் கிழார் மகனார் நெய்தற்றத்தனார் அகநானூறு (243)
167 கோக்குளமுற்றனார் குறுந்தொகை (98), நற்றிணை (96)
168 கோழிக் கொற்றனார் குறுந்தொகை (276)
169 கோளியூர் கிழார் மகனார் செழியனார் நற்றிணை (383)
170 கொள்ளம்பக்கனார் நற்றிணை (147)
171 கொல்லன் அழிசியார் குறுந்தொகை (26, 138, 145, 240)
172 கொல்லிக் கண்ணனார் குறுந்தொகை (34)
173 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் புறநானூறு (54, 61, 167, 180, 197, 394)
174 கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் அகநானூறு (179, 232)
175 கோண்மா நெடுங்கோட்டனார் நற்றிணை (40)
176 கூடலூர் கிழார் குறுந்தொகை (166, 167, 214), புறநானூறு (229)
177 கூடலூர்ப் பல்கண்ணனார் நற்றிணை (200, 380)
178 கூகைக் கோழியார் புறநானூறு (364)
179 கூற்றங்குமரனார் நற்றிணை (244)
180 கூவன் மைந்தனார் குறுந்தொகை (224)
181 கோப்பெருஞ்சோழன் புறநானூறு (214, 215, 216), குறுந்தொகை (20, 53, 129, 147)
182 கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் அகநானூறு (168)
183 கோதமனார் புறநானூறு (366)
184 கொற்றனார் குறுந்தொகை (218, 358), நற்றிணை (30)
185 கொற்றங்கொற்றனார் அகநானூறு (54), நற்றிணை (259)
186 கோட்டம்பலவனார் நற்றிணை (95)
187 கோட்டியூர் நல்லந்தையார் நற்றிணை (211)
188 கோவர்த்தனார் குறுந்தொகை (66, 194)
189 கோவேங்கைப் பெருங்கதவனார் குறுந்தொகை (134)
190 கோவூர் கிழார் குறுந்தொகை (65), புறநானூறு (31–33, 41, 44–47, 68, 70, 308, 373, 382, 386, 400), நற்றிணை (393)
191 குடபுலவியனார் புறநானூறு (18, 19)
192 குடவாயில் கீரனக்கனார் குறுந்தொகை (79)
193 குடவாயில் கீரத்தனார் அகநானூறு (35, 60, 79, 119, 129, 287, 315, 345, 366, 385), நற்றிணை (27, 212, 379), குறுந்தொகை (281, 369), புறநானூறு (242)
194 குளம்பனார் நற்றிணை (288)
195 குளம்பந்தாயனார் புறநானூறு (253)
196 குழற்றத்தனார் குறுந்தொகை (242)
197 குமட்டூர் கண்ணனார் பதிற்றுப்பத்து (11–20)
198 குமிழி ஞாழலார் நப்பசலையார் அகநானூறு (160)
199 குன்றியனார் அகநானூறு (40, 41), குறுந்தொகை (50, 51, 117, 238, 301, 336), நற்றிணை (117, 239)
200 குன்றுகட் பாலியாதனார் புறநானூறு (387)
201 குன்றூர் கிழார் மகனார் புறநானூறு (338)
202 குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் நற்றிணை (332)
203 குண்டுகட் பாலியாதனார் நற்றிணை (220)
204 குப்பைக்கோழியார் குறுந்தொகை (305)
205 குறமகள் இளவெயினி புறநானூறு (157)
206 குறமகள் குறியெயினியார் நற்றிணை (357)
207 குறியிரையார் குறுந்தொகை (394)
208 குறும்பூதனார் (குன்றம்பூதனார்) பரிப்பாடல் (9, 18)
209 குறுங்குடி மருதனார் அகநானூறு (4), குறுந்தொகை (344)
210 குறுங்கீரனார் குறுந்தொகை (382)
211 குறுங்கோழியூர் கிழார் புறநானூறு (17, 20, 22)
212 குறுவழுதியார் அகநானூறு (150)
213 குதிரைத் தறியனார் நற்றிணை (296)
214 குட்டுவன் கண்ணனார் குறுந்தொகை (179)
215 குட்டுவன் கீரனார் புறநானூறு (240)
216 மடல் பாடிய மாதங்கீரனார் குறுந்தொகை (182), நற்றிணை (377)
217 மாடலூர் கிழார் குறுந்தொகை (150)
218 மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் அகநானூறு (33, 144, 174, 244, 314, 344, 353), குறுந்தொகை (188, 215), நற்றிணை (297, 321), புறநானூறு (388)
219 மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் நற்றிணை (303, 338)
220 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் அகநானூறு (56, 272, 302, 124, 254, 230), குறுந்தொகை (185), நற்றிணை (344), புறநானூறு (329)
221 மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார் குறுந்தொகை (144)
222 மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் (நல்லந்துவனார்) அகநானூறு (43), நற்றிணை (88), பரிப்பாடல் (6, 8, 11, 20), கலித்தொகை (118–150)
223 மதுரை செங்கண்ணனார் அகநானூறு (39)
224 மதுரை ஈழத்துப் பூதன்தேவனார் (ஈழத்துப் பூதன்தேவனார்) அகநானூறு (231, 307), குறுந்தொகை (189, 360), நற்றிணை (366)
225 மதுரை எழுத்தாளன் அகநானூறு (84)
226 மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார் (சேந்தன் பூதனார்) அகநானூறு (207), குறுந்தொகை (90, 226, 247), நற்றிணை (261)
227 மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் அகநானூறு (102, 108, 348), நற்றிணை (273), புறநானூறு (251)
228 மதுரை இளங்கண்ணிக் கோசிகனார் புறநானூறு (309)
229 மதுரை இளங்கௌசிகனார் அகநானூறு (381)
230 மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார் குறுந்தொகை (223)
231 மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் அகநானூறு (170), புறநானூறு (316)
232 மதுரைக் காமக்கனி நப்பாலத்தனார் அகநானூறு (204)
233 மதுரைக் கணக்காயனார் அகநானூறு (27, 338, 342), புறநானூறு (330)
234 மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (கணக்காயர் மகனார் நக்கீரர்) அகநானூறு (93), குறுந்தொகை (143), புறநானூறு (56, 189), Tirumurugatruppadai, Nedunalvaadai
235 மதுரைக் காஞ்சிப் புலவர் அகநானூறு (89)
236 மதுரைக் கண்டரதத்தனார் குறுந்தொகை (317)
237 மதுரைக் கண்ணனார் குறுந்தொகை (107)
238 மதுரைக் கண்ணத்தனார் அகநானூறு (360), நற்றிணை (351)
239 மதுரைக் காருலவியங் கூத்தனார் நற்றிணை (325)
240 மதுரைக் கதக்கண்ணனார் குறுந்தொகை (88)
241 மதுரைக் கவுணியன் பூதத்தனார் அகநானூறு (74)
242 மதுரைக் கொல்லம் புல்லனார் குறுந்தொகை (373)
243 மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் அகநானூறு (363), நற்றிணை (285)
244 மதுரைக் கூத்தனார் அகநானூறு (334)
245 மதுரை மருதன் இளநாகனார் அகநானூறு (34, 59, 77, 90, 104, 121, 131, 184, 193, 206, 220, 245, 255, 269, 312, 343, 358, 365, 368, 380, 387), குறுந்தொகை (77, 160, 279, 367), நற்றிணை (194, 216, 251, 283, 290, 297, 302, 326, 341, 343, 362, 392), புறநானூறு (55, 349)
246 மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார் குறுந்தொகை (332)
247 மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார் அகநானூறு (247, 364), நற்றிணை (388)
248 மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் நற்றிணை (352)
249 மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் நற்றிணை (329)
250 மதுரை மேலைக்கடைக் கண்ணம்புகுத்தார் ஆயத்தனார் புறநானூறு (350)
251 மதுரை நக்கீரனார் அகநானூறு (78)
252 மதுரை நக்கீரர் அகநானூறு (36), புறநானூறு (395)
253 மதுரை நல்வெள்ளியார் (நல்வெள்ளியார்) அகநானூறு (32), குறுந்தொகை (365), நற்றிணை (7, 47)
254 மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் நற்றிணை (250, 369)
255 மதுரைப் படைமங்க மன்னியார் புறநானூறு (351)
256 மதுரைப் படைமங்க மன்னியார் புறநானூறு (351)
257 மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் நற்றிணை (322)
258 மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் அகநானூறு (172)
259 மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் அகநானூறு (92)
260 மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் அகநானூறு (58, 298, 328)
261 மதுரைப் பேராலவாயர் அகநானூறு (87, 296), நற்றிணை (361), புறநானூறு (247, 262)
262 மதுரைப் பெருமருதன் இளநாகனார் நற்றிணை (251)
263 மதுரைப் பெருமருதனார் நற்றிணை (241)
264 மதுரைப் பெருங்கொல்லனார் குறுந்தொகை (141)
265 மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் அகநானூறு (363)
266 மதுரைப் பூதன் இளநாகனார் புறநானூறு (276)
267 மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் நற்றிணை (317)
268 மதுரைப் போத்தனார் அகநானூறு (75)
269 மதுரைப் புல்லங்கண்ணனார் அகநானூறு (161)
270 மதுரைச் சுள்ளம் போதனார் நற்றிணை (215)
271 மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார் அகநானூறு (354)
272 மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார் அகநானூறு (164)
273 மதுரைத் தமிழ்க் கூத்தனார் புறநானூறு (334)
274 மதுரைத் தத்தங்கண்ணனார் அகநானூறு (335)
275 மதுரை வேளாசான் புறநானூறு (305)
276 மதுரை வேளாதத்தனார் குறுந்தொகை (315)
277 மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் அகநானூறு (229, 306, 320), புறநானூறு (59)
278 மையோடக் கோவனார் பரிப்பாடல் (7)
279 மாலைமாறனார் குறுந்தொகை (245)
280 மலையனார் நற்றிணை (93)
281 மள்ளனார் குறுந்தொகை (72), நற்றிணை (204)
282 மாமலாடனார் குறுந்தொகை (46)
283 மாமூலனார் அகநானூறு (1, 15, 31, 55, 61, 65, 91, 97, 101, 115, 127, 187, 197, 201, 211, 233, 251, 265, 281, 311, 325, 331, 347, 349, 359, 393, 281, 295), குறுந்தொகை (11), நற்றிணை (14, 75)
284 மாங்குடி மருதனார் (மாங்குடி கிழார், மதுரை காஞ்சி புலவர், காஞ்சிப்புலவனார்) அகநானூறு (89), குறுந்தொகை (164, 173, 302), நற்றிணை (120, 123), புறநானூறு (24, 26, 313, 335, 372, 396), மதுரைக்காஞ்சி
285 மாறன் வழுதி நற்றிணை (97)
286 மாரிப்பித்தியார் புறநானூறு (251, 252)
287 மார்க்கண்டேயனார் புறநானூறு (365)
288 மாறோக்கத்து நப்பசலையார் நற்றிணை (304), புறநானூறு (37, 39, 126, 174, 226, 280, 383)
289 மாறோகத்து காமக்கணி நப்பாலத்தனார் அகநானூறு (377)
290 மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார் அகநானூறு (80)
291 மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் அகநானூறு (327)
292 மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் நற்றிணை (289)
293 மருதம் பாடிய இளங்கடுங்கோ அகநானூறு (96, 176), நற்றிணை (50)
294 மருதன் இளநாகனார் நற்றிணை (21, 39, 103), புறநானூறு (52, 138, 139), கலித்தொகை (66–100)
295 மாத்திரத்தனார் குறுந்தொகை (113)
296 மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் அகநானூறு (54)
297 மாவளத்தனார் குறுந்தொகை (348)
298 மாயெண்டனார் (மாயேண்டனார்) குறுந்தொகை (235)
299 மீளிப் பெரும்பதுமனார் நற்றிணை (109)
300 மீனெறி தூண்டிலார் குறுந்தொகை (54)
301 மிளைக் கந்தனார் குறுந்தொகை (196)
302 மிளை கிழார் நல்வேட்டனார் குறுந்தொகை (341), நற்றிணை (210, 349)
303 மிளைப் பெருங் கந்தனார் குறுந்தொகை (136, 204, 234)
304 மிளை வேள் தித்தனார் குறுந்தொகை (284)
305 மூலங்கீரனார் நற்றிணை (73)
306 மோசி கண்ணத்தனார் நற்றிணை (124)
307 மோசிக் கரையனார் அகநானூறு (260)
308 மோசி கீரனார் அகநானூறு (392), குறுந்தொகை (59, 84), நற்றிணை (342), புறநானூறு (50, 154, 155, 156, 186)
309 மோசி கொற்றனார் குறுந்தொகை (377)
310 மோசி சாத்தனார் புறநானூறு (272)
311 மோதாசானார் குறுந்தொகை (229)
312 முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் அகநானூறு (30)
313 முடத்திருமாறனார் நற்றிணை (105, 228)
314 முடத்தாமக்கண்ணியார் பொருனராற்றுப்படை
315 முக்கல் ஆசான் நல்வெள்ளையார் நற்றிணை (272)
316 முள்ளியூர்ப் பூதியார் அகநானூறு (173)
317 முப்பேர் நாகனார் நற்றிணை (314)
318 முரஞ்சியூர் முடிநாகனார் புறநானூறு (2)
319 முதுகூற்றனார் நற்றிணை (28, 58)
320 முதுவெங்கண்ணனார் நற்றிணை (232)
321 நாகம் போத்தனார் குறுந்தொகை (282)
322 நக்கண்ணையார் (பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணையார்) அகநானூறு (252), நற்றிணை (19, 87), புறநானூறு (83, 84, 85)
323 நக்கீரனார் அகநானூறு (120, 249, 310, 340, 389), குறுந்தொகை (78, 105, 161, 266, 280, 368), நற்றிணை (31), நெடுனல்வாடை
324 நக்கீரர் அகநானூறு (57, 126, 141, 205, 227, 253, 290, 346, 369), குறுந்தொகை (78, 105, 161, 266, 280, 368), நற்றிணை (86, 197, 258, 340, 358, 367), திருமுருகாற்றுப்படை
325 நல்லச்சுதனார் பரிப்பாடல் (21)
326 நல்லழிசியார் பரிப்பாடல் (16, 17)
327 நல்லாவூர் கிழார் அகநானூறு (86), நற்றிணை (154)
328 நல்லெழுதியார் (நல்லெழுநியார்) பரிப்பாடல் (13)
329 நல்லிறையனார் புறநானூறு (393)
330 இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபனாற்றுப்படை
331 நல்லூர்ச் சிறுமேதாவியார் நற்றிணை (282)
332 நல்வழுதியார் பரிப்பாடல் (12)
333 நல்வேட்டனார் நற்றிணை (53, 292)
334 நல்விளக்கனார் நற்றிணை (85)
335 நாமலார் மகனார் இளங்கண்ணனார் குறுந்தொகை (250)
336 நம்பி குட்டுவனார் குறுந்தொகை (109, 243), நற்றிணை (145, 236, 345)
337 நம்பி நெடுஞ்செழியன் புறநானூறு (239)
338 நன்னாகையார் குறுந்தொகை (118, 325)
339 நன்பலூர் சிறு மேதாவியார் அகநானூறு (94, 394)
340 நப்பாலத்தனார் நற்றிணை (240)
341 நப்பண்ணனார் பரிப்பாடல் (19)
342 நரைமுடி நெட்டையர் அகநானூறு (339)
343 நற்சேந்தனார் நற்றிணை (128)
344 நரிவெரூஉத் தலையார் குறுந்தொகை (5, 236), புறநானூறு (5, 195)
345 நற்றமனார் நற்றிணை (133)
346 நற்றங் கொற்றனார் நற்றிணை (136)
347 நெடும்பல்லியத்தை குறுந்தொகை (178)
348 நெடும்பல்லியத்தனார் குறுந்தொகை (203), புறநானூறு (64)
349 நெடுங்களத்துப் பரணர் புறநானூறு (291)
350 நெடுவெண்ணிலவினார் குறுந்தொகை (47)
351 நெட்டிமையார் புறநானூறு (9, 12, 15)
352 நெய்தல் கார்க்கியர் குறுந்தொகை (55, 212)
353 நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார் அகநானூறு (112)
354 நெய்தல் தத்தனார் அகநானூறு (243), நற்றிணை (49, 130)
355 நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் நற்றிணை (382)
356 நொச்சி நியமங்கிழார் அகநானூறு (52), நற்றிணை (17, 208, 209), புறநானூறு (293)
357 நோய் பாடியார் அகநானூறு (67)
358 ஒக்கூர் மாசாத்தனார் அகநானூறு (14), புறநானூறு (248)
359 ஒக்கூர் மாசாத்தியார் அகநானூறு (324, 384), குறுந்தொகை (126, 139, 186, 220, 275), புறநானூறு (279)
360 ஒல்லையாயன் செங்கண்ணனார் அகநானூறு (279)
361 ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் புறநானூறு (242, 243)
362 ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அகநானூறு (25), புறநானூறு (71)
363 ஊண் பித்தையார் குறுந்தொகை (232)
364 ஊன்பொதி பசுங்குடையார் புறநானூறு (10, 203, 370, 378)
365 ஊட்டியார் அகநானூறு (68, 388)
366 ஓர் ஏர் உழவனார் குறுந்தொகை (131), புறநானூறு (193)
367 ஓரம்போகியார் ஐங்குறுனூறு (1–100), அகநானூறு (286, 316), குறுந்தொகை (10, 70, 122, 127, 384), நற்றிணை (20, 360), புறநானூறு (284)
368 ஓரில் பிச்சையார் குறுந்தொகை (277)
369 ஓரோடோகத்து கந்தரத்தனார் அகநானூறு (23, 95, 191)
370 ஒரு சிறைப் பெரியனார் குறுந்தொகை (272), நற்றிணை (121), புறநானூறு (137)
371 ஒரூஉத்தனார் புறநானூறு (275)
372 ஓதஞானியார் குறுந்தொகை (227)
373 ஓதலாந்தையார் Ainkurunuru (301–400), குறுந்தொகை (12, 21, 329)
374 படுமரத்து மோசிகீரனார் குறுந்தொகை (33, 75, 383)
375 படுமாத்து மோசிகொற்றனார் குறுந்தொகை (376)
376 பக்குடுக்கை நன்கணியார் புறநானூறு (194)
377 பாலைக் கெளதமனார் பதிற்றுப்பத்து (21–30)
378 பாலை பாடிய பெருங்கடுங்கோ அகநானூறு (5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379), குறுந்தொகை (16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398), நற்றிணை (9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391), கலித்தொகை (2–36)
379 பாலத்தனார் நற்றிணை (52)
380 பனம்பாரனார் குறுந்தொகை (52)
381 பாண்டரங்கண்ணனார் புறநானூறு (16)
382 பாண்டியன் அறிவுடைநம்பி அகநானூறு (28), குறுந்தொகை (230), நற்றிணை (15), புறநானூறு (188)
383 பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூறு (183)
384 பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் அகநானூறு (373), குறுந்தொகை (156)
385 பாண்டியன் மாறன் வழுதி நற்றிணை (301)
386 பாண்டியன் பன்னாடு தந்தான் குறுந்தொகை (270)
387 பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் புறநானூறு (72)
388 பரணர் அகநானூறு (6, 62, 76, 116, 122, 125, 135, 142, 148, 152, 162, 178, 181, 186, 196, 198, 208, 212, 222, 226, 236, 246, 258, 262, 266, 276, 322, 326, 356, 367, 372, 376, 386, 396), குறுந்தொகை (19, 24, 36, 60, 73, 89, 120, 128, 165, 199, 258, 259, 292, 298, 328, 393, 399), நற்றிணை (6, 100, 201, 247, 260, 265, 270, 280, 300, 310, 350, 356), புறநானூறு (4, 63, 141, 142, 144, 145, 336, 341, 343, 348, 352, 354, 369), பதிற்றுப்பத்து (41–50)
389 பராயனார் நற்றிணை (155)
390 பாரி மகளிர் புறநானூறு (112)
391 பார்காப்பானார் (பாரகாபரர்) குறுந்தொகை (254)
392 பரூஉ மோவாய்ப் பதுமனார் குறுந்தொகை (101)
393 பதடி வைகலார் குறுந்தொகை (323)
394 பதுமனார் குறுந்தொகை (6)
395 பாவை கொட்டிலார் அகநானூறு (336)
396 பேராலவாயர் நற்றிணை (51)
397 பேரெயில் முறுவலார் (பேரெயின் முறுவலார்) குறுந்தொகை (17), புறநானூறு (239)
398 பெரும்பாக்கனார் குறுந்தொகை (296)
399 பெரும்பதுமனார் குறுந்தொகை (7), நற்றிணை (2), புறநானூறு (199)
400 பெருஞ்சாத்தனார் குறுந்தொகை (263)
401 பெருஞ்சித்திரனார் புறநானூறு (158–163, 207, 208, 237, 238)
402 பெருங்கண்ணனார் குறுந்தொகை (289, 310), நற்றிணை (137)
403 பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் புறநானூறு (83, 84, 85)
404 பெருங்கௌசிகனார் நற்றிணை (44, 139), மலைப்படுகடாம்
405 பெருங்குன்றூர் கிழார் அகநானூறு (8), குறுந்தொகை (338), நற்றிணை (5, 112, 119, 347), புறநானூறு (147, 210, 211, 266, 318), பதிற்றுப்பத்து (81–90)
406 பெருந்தலைச் சாத்தனார் அகநானூறு (13), நற்றிணை (262), புறநானூறு (151, 164, 165, 205, 209, 294)
407 பெருந்தேவனார் அகநானூறு (51), நற்றிணை (83)
408 பெருந்தோட் குறுஞ்சாத்தனார் குறுந்தொகை (308)
409 பெருவழுதி நற்றிணை (55, 56)
410 பேயனார் ஐங்குறுனூறு (401–500), அகநானூறு (234), குறுந்தொகை (233, 359, 400)
411 பேயார் குறுந்தொகை (339)
412 பேய்மகள் இளவெயினியார் புறநானூறு (11)
413 பிரமனார் புறநானூறு (357)
414 பிரமசாரி நற்றிணை (34)
415 பிரான் சாத்தனார் நற்றிணை (68)
416 பிசிராந்தையார் அகநானூறு (308), நற்றிணை (91), புறநானூறு (67, 184, 191, 212)
417 பொன்மணியார் குறுந்தொகை (391)
418 பொன்முடியார் புறநானூறு (299, 310, 312)
419 பொன்னாகனார் குறுந்தொகை (114)
420 போந்தைப் பசலையார் அகநானூறு (110)
421 பூங்கண்ணனார் குறுந்தொகை (253)
422 பூங்கணுத்திரையார் குறுந்தொகை (48, 171), புறநானூறு (277)
423 பூதத் தேவனார் குறுந்தொகை (285), நற்றிணை (80)
424 பூதம்புல்லனார் (பூதம் புலவர்) குறுந்தொகை (190)
425 பூதனார் நற்றிணை (29)
426 பூதங்கண்ணனார் நற்றிணை (140)
427 பொருந்தில் இளங்கீரனார் அகநானூறு (19, 351), புறநானூறு (53)
428 போதனார் நற்றிணை (110)
429 பொத்தியார் புறநானூறு (217, 220, 221, 222, 223)
430 பொதுக்கயத்துக் கீரந்தையார் குறுந்தொகை (337)
431 பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் அகநானூறு (192)
432 பொதும்பில் கிழார் நற்றிணை (57)
433 பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் நற்றிணை (375, 387)
434 பொதும்பில் புல்லாளங் கண்ணினார் அகநானூறு (154)
435 பொய்கையார் நற்றிணை (18), புறநானூறு (48, 49)
436 புல்லாற்றூர் எயிற்றியனார் புறநானூறு (213)
437 புறநாட்டுப் பெருங் கொற்றனார் அகநானூறு (323)
438 புறத்திணை நன்னாகனார் புறநானூறு (176, 376, 379, 381, 384)
439 புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார் நற்றிணை (294)
440 பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு புறநானூறு (246)
441 சாகலாசனார் அகநானூறு (16, 270)
442 சல்லியங்குமரனார் நற்றிணை (141)
443 சங்கவருணர் என்னும் நாகரையர் புறநானூறு (360)
444 சாத்தனார் குறுந்தொகை (249)
445 சாத்தந்தையார் நற்றிணை (26), புறநானூறு (80, 81, 82, 287)
446 சத்திநாதனார் குறுந்தொகை (119)
447 சீத்தலை சாத்தனார் (மதுரைச் சீத்தலைச் சாத்தனார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்) அகநானூறு (53, 134, 229, 306, 320); நற்றிணை (36, 127, 339); புறநானூறு (59); குறுந்தொகை (154)
448 சேகம்பூதனார் நற்றிணை (69)
449 செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் அகநானூறு (250)
450 செல்லூர் கோசிகன் கண்ணனார் அகநானூறு (66)
451 செல்லூர் கொற்றனார் குறுந்தொகை (363)
452 செம்பியனார் நற்றிணை (102)
453 செம்புலப் பெயனீரார் குறுந்தொகை (40)
454 செங்கண்ணனார் நற்றிணை (122)
455 செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் அகநானூறு (177)
456 செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார் குறுந்தொகை (228)
457 சிறைக்குடி ஆந்தையார் குறுந்தொகை (56, 57, 62, 132, 168, 222, 273, 300), நற்றிணை (16)
458 சிறுமோலிகனார் நற்றிணை (61)
459 சிறுவெண்தேரையார் புறநானூறு (362)
460 தாமற்பல் கண்ணனார் புறநானூறு (43)
461 தாமோதரனார் குறுந்தொகை (92)
462 தனிமகனார் நற்றிணை (219)
463 தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் நற்றிணை (386)
464 தங்கால் பொற்கொல்லனார் (தங்கால் முடக்கொல்லனார், தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், தங்கால் முடக்கொற்றனார்) அகநானூறு (48, 108, 355), குறுந்தொகை (217), நற்றிணை (313), புறநானூறு (326)
465 தாயங்கண்ணனார் அகநானூறு (105, 132, 213, 237), குறுந்தொகை (319), நற்றிணை (219)
466 தாயங்கண்ணியார் புறநானூறு (250)
467 தீன்மதி நாகனார் குறுந்தொகை (111)
468 தேரதரனார் குறுந்தொகை (195)
469 தேவகுலத்தார் குறுந்தொகை (3)
470 தேவனார் நற்றிணை (227)
471 தேய்புரிப் பழங்கயிற்றினார் நற்றிணை (284)
472 திப்புத்தோளார் குறுந்தொகை (1)
473 திருத்தாமனார் புறநானூறு (398)
474 தொடித்தலை விழுத்தண்டினார் புறநானூறு (243)
475 தொல்கபிலர் அகநானூறு (282), குறுந்தொகை (14), நற்றிணை (114, 276, 328, 399)
476 தொண்டைமான் இளந்திரையன் நற்றிணை (106), புறநானூறு (185)
477 தொண்டி ஆமூர்ச் சாத்தனார் அகநானூறு (169)
478 தூங்கலோரியார் குறுந்தொகை (151, 295), நற்றிணை (60)
479 தும்பைச் சொகினனார் புறநானூறு (249)
480 தும்பிசேர் கீரனார் குறுந்தொகை (61, 316, 320, 392), நற்றிணை (277)
481 துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார் நற்றிணை (286)
482 துறையூர் ஓடை கிழார் புறநானூறு (136)
483 உகாய்க்குடிகிழார் குறுந்தொகை (63)
484 பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அகநானூறு (26), நற்றிணை (98)
485 உலோச்சனார் அகநானூறு (20, 100, 190, 200, 210, 300, 330, 400), குறுந்தொகை (175, 177, 205, 248), நற்றிணை (11, 38, 63, 64, 74, 131, 149, 191, 203, 223, 249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 398), புறநானூறு (258, 274, 377)
486 உழுந்தினைம் புலவனார் குறுந்தொகை (333)
487 உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் அகநானூறு (69)
488 உம்பற்காட்டு இளங்கண்ணனார் அகநானூறு (264)
489 உறையனார் குறுந்தொகை (207)
490 உறையூர்ச் சல்லியன் குமாரனார் குறுந்தொகை (309)
491 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் புறநானூறு (13, 127–135, 241, 374, 375)
492 உறையூர் இளம்பொன் வாணிகனார் புறநானூறு (264)
493 உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் நற்றிணை (370)
494 உறையூர் மருத்துவன் தாமோதரனார் அகநானூறு (133, 257), புறநானூறு (60, 170, 321)
495 உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறுந்தொகை (133), புறநானூறு (27, 28, 29, 30, 325)
496 உறையூர் முதுகூற்றனார் (உறையூர் முதுகூத்தனார்) அகநானூறு (137, 329), குறுந்தொகை (353, 371), புறநானூறு (331)
497 உறையூர் முதுகொற்றனார் குறுந்தொகை (221, 390)
498 உறையூர்ப் பல்காயனார் குறுந்தொகை (374)
499 உறையூர்ச் சிறுகந்தனார் குறுந்தொகை (357)
500 உரோடகத்துக் கந்தரத்தனார் (உரோடகத்துக் காரத்தனார், ஓரோடகத்துக் கந்தரத்தனார்) அகநானூறு (23, 95, 191), குறுந்தொகை (155), நற்றிணை (306)
501 உருத்திரனார் குறுந்தொகை (274)
502 உவர்க்கண்ணூர் புல்லங்கீரனார் அகநானூறு (146)
503 வாடாப் பிரபந்தனார் குறுந்தொகை (331)
504 வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் (பேரிசாத்தனார்) அகநானூறு (38, 214, 242, 268, 305), குறுந்தொகை (81, 159, 278, 314, 366), நற்றிணை (25, 37, 67, 104, 199, 299, 323, 378), புறநானூறு (198)
505 வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் புறநானூறு (125)
506 வடம வண்ணக்கன் தாமோதரனார் குறுந்தொகை (85), புறநானூறு (172)
507 வடமோதங்கிழார் அகநானூறு (317), புறநானூறு (260)
508 வடநெடுந்தத்தனார் புறநானூறு (179)
509 வள்ளுவர் (திருவள்ளுவர்) திருக்குறள்
510 வான்மீகியார் புறநானூறு (358)
511 வண்ணக்கன் சோருமருங்குமரனார் நற்றிணை (257)
512 வண்ணப்புறக் கந்தரத்தனார் அகநானூறு (49), நற்றிணை (71)
513 வன்பரணர் நற்றிணை (374), புறநானூறு (148, 149, 150, 152, 153, 255)
514 வருமுலையாரித்தியார் குறுந்தொகை (176)
515 வாயிலான் தேவனார் குறுந்தொகை (103, 108)
516 வாயிலிளங் கண்ணனார் குறுந்தொகை (346)
517 வீரை வெளியன் தித்தனர் அகநானூறு (188)
518 வீரை வெளியனார் புறநானூறு (320)
519 வெள்ளாடியனார் அகநானூறு (29)
520 வெள்ளைக் கண்ணத்தனார் அகநானூறு (64)
521 வெள்ளை மாறனார் புறநானூறு (296)
522 வெள்ளைக்குடி நாகனார் புறநானூறு (35), நற்றிணை (158, 196)
523 வெள்ளெருக்கிலையார் புறநானூறு (233, 234)
524 வெள்ளிவீதியார் அகநானூறு (45, 362), குறுந்தொகை (27, 44, 58, 130, 146, 149, 169, 386), நற்றிணை (70, 335, 348)
525 வெள்ளியந்தின்னனார் நற்றிணை (101)
526 வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார் குறுந்தொகை (362)
527 வேம்பற்றூர்க் குமரனார் அகநானூறு (157), புறநானூறு (317)
528 வெண்கண்ணனார் அகநானூறு (130)
529 வெண்மணிப்பூதியார் குறுந்தொகை (299)
530 வெண்ணிக் குயத்தியார் புறநானூறு (66)
531 வெண்கொற்றனார் குறுந்தொகை (86)
532 வெண்பூதனார் குறுந்தொகை (83)
533 வெண்பூதியார் (வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்) குறுந்தொகை (97, 174, 219)
534 வெறி பாடிய காமக்கண்ணியார் அகநானூறு (22, 98), புறநானூறு (271, 302), நற்றிணை (268)
535 வேட்டகண்ணனார் குறுந்தொகை (389)
536 விழிகட்பேதைப் பெருங்கண்ணனார் நற்றிணை (242)
537 வில்லகவிரலினார் குறுந்தொகை (370)
538 வினைத்தொழில் சோகீரனார் நற்றிணை (319)
539 விரிச்சியூர் நன்னாகனார் புறநானூறு (292)
540 விரியூர் நக்கனார் புறநானூறு (332)
541 விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் நற்றிணை (298)
542 விற்றூற்று மூதெயினனார் அகநானூறு (37, 136, 288), குறுந்தொகை (372)
543 விட்டகுதிரையார் குறுந்தொகை (74)

சங்கம் மருவிய காலப் புலவர்கள்

தொகு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பாடிய புலவர்களைச் சங்கம் மருவிய காலப் புலவர்கள் என்று குறிப்பிடுகிறோம். கபிலர் என்னும் புலவர் சங்க காலப் புலவர் பட்டியலிலும், சங்கம் மருவிய காலப் புலவர் பட்டியலிலும் உள்ளார். இவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்காகவே இந்தப் பட்டியல் இங்குத் தரப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பாரி நிலையம், வையாபுரிப்பிள்ளை அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கியது, (முதல் பதிப்பு 1940) இரண்டாம் பதிப்பு 1967, சென்னை - 1
  2. Index des mots de la literature tamoule ancienne, PUBLICATIONS DE L’INSTITUT FRANCAIS D’INDOLOGIE N0.37. PONDICHERY: INSTITUT FRAFRANCAIS D’INDOLOGIE. 1967.
  3. பாட்டும் தொகையும், பதிப்பு – ஆசிரியக் குழுவினரால் வெளியிடப்பட்டது, எஸ். ராஜம், 5, தம்புச் செட்டித் தெரு, சென்னை-1, முதல் பதிப்பு 1958, பக்கம் 9-21.
  4. Tamil language and literature, page 24
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்க_காலப்_புலவர்கள்&oldid=4129548" இலிருந்து மீள்விக்கப்பட்டது