கோடை பாடிய பெரும்பூதனார்

சங்க கால புலவர்

கோடை பாடிய பெரும்பூதனார் சங்ககாலத்துப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று கிடைத்துள்ளது. அது புறநானூற்றில் 259ஆம் பாடலாக உள்ளது.

புலவர் பெயரில் உள்ள அடைமொழிக்கான விளக்கம் தொகு

இப்பாடலில் கோடைக்காலம் புதுமையான கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டுள்ளதால் இப் புலவருக்குக் 'கோடை பாடிய' என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது.

பாடல் சொல்லும் செய்தி:

கரந்தைப் போரில் ஈடுபட்டிருக்கும் வீரன் ஒருவன் எவ்வாறு தளராது நின்று போரிட்டான் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

கோடை காலத்தைப் புதுமையாகப் பார்த்தல் தொகு

கோடைகாலம் வந்ததும் விலங்கினம் தன் ஏறு(ஆண்விலங்கு) உடன் வரும் கூட்டத்தோடு வேறு நிலத்துக்குச் சென்றுவிடும். அப்போதும் வல்வில் மறவன் இலைகள் புதைந்து கிடக்கும் அந்தக் காட்டிலிருந்து போகமாட்டானாம். இலை மறைவில் தன் தலையைப் புதைத்துக்கொண்டு இருந்து மானை வேட்டையாடுவானாம். - இதுதான் அந்தப் புதிய பார்வை.

உவமை தொகு

புலத்திக்கு முருகு ஏறிய காட்சி தொகு

  • புலத்தி = வண்ணாத்தி (ஊரார் துணியை வெளுத்துத் தரும் பெண்)

(புலத்தி ஒருவனைக் காதலித்தாள். அவனை எண்ணிக்கொண்டே இருந்ததால் அவளது உடல் இளைத்துப் போயிற்று. அதனைக் கண்ட அவளது தாய் அவளுக்கு வெறி பிடித்துவிட்டது (முருகு ஏறிவிட்டது) என்று சொல்லி வேலனை அழைத்து வெறியாட்டு விழா (பேயாட்டுச் சடங்கு) நடத்தினாள்.

வேலன் அந்தப் புலத்தியைப் பிரம்பால் அடித்தான். அவள் துள்ளித் துடித்துக் குதித்தாள். வேலன் விடாமல் அடித்தான்.

இது பாலை நிலத்தில் துள்ளிக் குதிக்கும் மானை வல்வில் மறவன் வேட்டையாடுவது போல இருந்ததாம்.