பிள்ளைப் பெயர்ச்சி

பிள்ளைப் பெயர்ச்சி என்னும் துறைப் பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் ஒன்று உள்ளது. இது கரந்தைத்திணையைச் சேர்ந்த துறை. இந் துறைப் பெயரிலுள்ள ‘பிள்ளை’ என்னும் சொல் பருவ மகனை உணர்த்தும்.

கரந்தைப் போரில் ஆனிரைகளை மீட்டுக்கொண்டு வரும் வீரன் ஒருவன் தான் மீட்டுவந்த ஆனிரைகள் தன் இல்லத்துக்குச் சென்ற பின்னரும் இலைதழைகளுக்கு இடையே தன் தலையை மறைத்துக்கொண்டு ஒளிந்திருந்தானாம். மீண்டும் யாரேனும் ஆனிரைகளைக் கவர வந்தால் போரிட்டழிக்க அவ்வாறு ஒளிந்துகொண்டிருந்தான். [1] முன்னின்று போராடிய வீரனை வேந்தன் விருது தந்து பாராட்டுவது பிள்ளைப்பெயர்ச்சி என்னும் துறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.[2]

அடிக்குறிப்புகள் தொகு

  1. கோடை பாடிய பெரும்பூதனார் பாட்டு - புறநானூறு 259
  2. போர் தாங்கிப் புள் விலங்கியோனைத்
    தார்வேந்தன் தலையளித்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 33)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளைப்_பெயர்ச்சி&oldid=3317147" இலிருந்து மீள்விக்கப்பட்டது