மதுரைப் பெருங்கொல்லன்

மதுரைப் பெருங்கொல்லன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 141.

பைங்கண் செந்நாய்

புலவர் பெயர் விளக்கம் தொகு

விலங்குகள் ஒன்றை ஒன்று கொல்வதைப் பாடியமையால் இப்புலவரைப் பெருங்கொல்லன் என்றனர். இவருக்கு இப் பெயரைச் சூட்டியவர் குறுந்தொகை நூலைத் தொகுத்த ஆசிரியர்.

இவர் பாடற்பொருளால் பெயர்பெற்ற புலவர்.

பாடல் சொல்லும் செய்தி தொகு

தலைவன் இரவில் வரும் வழியில் நேரும் இன்னல்களை எண்ணித் தலைவனைப் பகலில் வருமாறு குறிப்புக் காட்டுகிறாள் தோழி. தலைவி அதனையும் மறுக்கிறாள்.

வாரலோ தொகு

தினை உண்ண வரும் கிளியை ஓட்டி வா என்று அன்னை கூறியுள்ளாள். அங்குச் செல்வோம். 'வாரலோ' என்கிறாள் தோழி. தோழி வாயிலிருந்து வரும்போது வாரலோ என்னும் சொல் 'வருக' எனப் பொருள்படுமாறு இருக்கிறது. அதுவே தலைவி வழிமொழியும்போது 'வாரற்க' என்று பொருள்படுமாறு இருக்கிறது.

இப்பாடலுக்குத் தரப்பட்டுள்ள பிற்கால அடிக்குறிப்பு 'நேர்ந்த வாய்பாடு' என்றும், 'மறுத்த வாய்பாடு' என்றும் குறிப்பிடுகிறது.

  • வாய்பாடு = Intonation

ஆரிருள் நடுநாள் ஏதம் தொகு

யானை குத்திப் புலி புண்பட்டுக் கிடக்குமாம். அந்தப் புலி எப்போது சாகும் என்று செந்நாய் பார்த்துக்கொண்டிருக்குமாம். இப்படிப்பட்ட வழியில் நள்ளிரவில் தலைவன் வருகிறானாம். இந்த ஏதத்தை எண்ணித் தலைவி கலங்குகிறாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரைப்_பெருங்கொல்லன்&oldid=2718187" இலிருந்து மீள்விக்கப்பட்டது